ஈரத்தாலி காயல.. கட்டிய 2வது நாளே? ரிஹானா இப்படிப்பட்டவரா? 5 ஏக்கர் நிலம்? நடிகை மீது ராஜ்கண்ணன் பரபர

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொழிலதிபர் ராஜ் கண்ணன் என்பவரிடமிருந்து, நடிகை ரிஹானா 5 ஏக்கர் நிலம், காரை மோசடி செய்து பெற்றதாக புகார் கிளம்பி, பரபரப்பை கிளப்பி வருகிறது.. பதிலுக்கு நடிகையும் இந்த குற்றச்சாட்டை மறுத்து, ராஜ் கண்ணன் மீது பதில் புகார் தந்து வருகிறார். இதுதொடர்பாக விசாரணையை போலீசாரும் நடத்தி வருகிறார்கள்.

சென்னையை சேர்ந்த ஓட்டல் அதிபர் ராஜ் கண்ணன் (47) தன்னுடைய புகாரில், "நட்பாகப் பழகி வந்த ரிஹானா பேகம் ஏற்கனவே திருமணம் ஆகி கணவரிடம் விவாகரத்து ஆனதாக சொன்னார். நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். பிறகு ரிஹானாவுக்குப் பண உதவியாக கேட்டதால் 20 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்தேன்.

Television rihana begum 5 acre land 5

ஆனால், ரிஹானாவுக்கு விவாகரத்து ஆகவில்லை என்பது தெரியவந்தது, எனவே, ரிஹானா மீது நடவடிக்கை வேண்டும் என்று பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் ராஜ் கண்ணன் புகார் தந்துள்ளார். இதையடுத்து நடிகை இதையடுத்து, ராஜ் கண்ணன் மீது தந்த புகாரில், தன்னிடமிருந்து சுமார் 15 லட்சத்துக்கு மேல் பிசினஸை டெவலப் செய்ய வாங்கினார்' என்று கூறியிருக்கிறார். இருவருமே மாறி மாறி புகார் தெரிவித்து வருகிறார்கள்.

2nd floor Tamil யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள, ராஜ் கண்ணன், "இதன் பின்னணி என்று எதுவுமே கிடையாது.. உள்நோக்கத்துடன் எந்த குற்றச்சாட்டும் சொல்லவில்லை.. சிங்கிள் பேரண்ட் என்று நண்பர் மூலமாக நடிகை ரிஹானா அறிமுகமானார்.. அவருடைய வீட்டுக்கு வரவழைத்து பேசினார்.. இப்படித்தான் பழக்கம் ஏற்பட்டது.

நானும் தனியாகத்தான் இருக்கேன்.. எனக்கு குடும்பம் என்று எதுவும் இல்லை.. அம்மா, அப்பாவும் கிடையாது.. திருமணம் செய்யும் முடிவில் நடிகை இருந்தார்.. நானும் சினிமாவில்தான் இருக்கேன்..

சிங்கிள் பேரண்ட்

என்னை தொழிலதிபர் என்கிறார்கள்.. Event management 20 வருடமாக செய்து கொண்டுதான் இருக்கிறேன்.. ஆனால், நான் சினிமாவில் இருப்பதே நடிகைக்கு தெரியாது.. சாதிக்க வேண்டும் என்ற வேட்கையில் சினிமாவுக்குள் வந்தால் பரவாயில்லை, ஆனால், ரிஹானா சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக சினிமாவுக்கு வந்துள்ளார்..

நான் பிறந்து வளர்ந்து சாப்பிட்டது எல்லாமே சினிமா சாப்பாட்டைதான்..
என்னுடைய அப்பாவும் சினிமாவில் இருந்தவர்.. நடிகை ரிஹானா என்னிடம் நன்றாக பேசியது, சிங்கிள் பேரண்ட்டாக இருப்பது. போன்ற விஷயங்கள் எல்லாம் அவருடன் ஒன்றாக என்னை பயணிக்க வைத்தது.. அப்போது என்னை போலவே, ரிஹானாவும் பிசினஸ் செய்ய விருப்பப்பட்டார்..

அக்ரிமெண்ட் - கடைகள்

அதற்கான இடத்தையும் பரிந்துரை செய்தேன்.. பிறகே அவரே அதைப்பற்றி பேசி முடித்து, அட்வான்ஸ் தந்து, அதற்கான அக்ரிமெண்ட்டையும் போட்டுவிட்டார்.. பிசினஸ் செய்வதால், நானும் உடனிருந்து உதவுவதாக சொன்னேன். ஆனால், 10 லட்சம் முதலீடு செய்ததுமே லாபம் வரவில்லை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.. உடனே கடையை காலி செய்ய போவதாக சொன்னார்..

இதைக்கேட்ட உரிமையாளர், கடையை கேட்டு வந்தீர்கள், திடீரென காலி செய்வதாக சொன்னால் எப்படி? முன்கூட்டியே 3 மாதம் நோட்டீஸ் தர வேண்டும் என்றெல்லாம் கேட்டார். பிறகு இது தொடர்பாக கிண்டி ஸ்டேஷன்வரை புகார் சென்று, பணத்தை வாங்கிவிட்டார்.

அட்வான்ஸ் பணம்

ஆனாலும், அங்கிருக்கும் கடைக்காரர் ஒருத்தருக்கு 2 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் பணத்தை தரவில்லை. அந்த பணத்தை தரும்படி, அந்த கடைக்காரர் என்னிடம் கேட்டு கொண்டிருக்கிறார்.

ரிஹானாவின் விருப்பத்துக்கு நான் ஒத்துவரவில்லை.. நான் மற்றவர் மாதிரி கிடையாது என்பதை தெரிந்து கொண்டார்.. கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து அவரது காசிலிருந்து நான் சாப்பிட்டதில்லை.. அவரது வீட்டில் சாப்பிட்டிருக்கேன். ஆனால், என் பணத்தில் நான் வாங்கி தந்து, அதில்தான் நான் சாப்பிட்டுள்ளேன்..

ஒத்த ரூபா செலவு

ஒத்த ரூபாகூட நான் அவரை செலவு செய்ய விட்டது கிடையாது.. அவரது கார் பெட்ரோல் செலவு முதல், மருத்துவ செலவு, பிள்ளைகளின் ஹாஸ்டல் செலவு 3 லட்சம் வரை நான்தான் செலவு செய்தேன். நாலு சுவற்றுக்குள் தாலி கட்டினால் போதும் என்று சொன்னதால்தான், என் பிறந்த நாளன்று தாலி கட்டினேன்..

எப்போதுமே பிறந்தநாளை நான் கொண்டாடியதில்லை என்பதால், என் பிறந்தநாளையே இனிமேல் திருமண நாளாக கொண்டாடலாம் என்று சொன்னார்.. இப்படியொரு வேண்டுகோளை என்னிடம் கேட்டதால்தான், அந்த நாளில் தாலி கட்டினேன். இல்லாவிட்டால் வெளிப்படையாகவே திருமணத்தை செய்திருப்பேன்.

தாலி கட்டிய 2 வது நாளே

தாலி கட்டிய 2வது நாளே, வீடு சொந்தமாக வேண்டும் என்று கேட்டார்.. தன் விருப்பப்படி வாழ அவர் முடிவெடுத்ததை நான் விரும்பவில்லை. உடனே நான் செலவு செய்த பணத்தை கேட்டுவிடுவேனோ என்று நினைத்து, முந்திக்கொண்டு என்னை பற்றி ரிஹானா புகார் தந்தார். என் மீது அவதூறுகளை சுமத்துகிறார் என்றெல்லாம் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+