சூட்டிங் ஸ்பாட்டில் சம்யுக்தா இப்படியா..?விஷ்ணுகாந்த்க்கு ஆதரவாக பிரபல நடிகை வெளியிட்ட வீடியோ
சென்னை: சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் அவருடைய மனைவி சம்யுக்தா குடும்ப பிரச்சனை சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
விஷ்ணுகாந்த்க்கு ஆதரவாக அவரோடு நடித்த நடிகை ரிஹானா வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.
மேலும் சூட்டிங் ஸ்பாட்டில் சம்யுக்தா எப்படி நடந்து கொள்வார் என்பது பற்றியும் கூறி இருக்கிறார்.

ஒரு சில நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொண்டு அதற்குப் பிறகு பல பிரச்சனைகளில் சிக்கி கொள்கிறார்கள். சீரியலில் ஒன்றாக நடிக்கும் போது அந்த கேரக்டர் போல தான் நிஜத்தில் இருப்பார்கள் என்று நினைப்பதாலோ என்னவோ இவர்களுக்குள் காதல் ஏற்பட்டு விடுகிறது.
திருமணத்திற்கு பிறகு நிஜ கேரக்டரை பார்த்து அதிர்ந்து போய் பலர் கருத்து வேறுபாட்டால் பிரிந்து விடுகிறார்கள். அந்த மாதிரி தான் தற்போது சின்னத்திரை நடிகைகளாக இருக்கும் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. மகிழ்ச்சியாக தொடங்கிய இவர்களுடைய வாழ்க்கை இரண்டு மாதங்கள் கூட நீடிக்கவில்லை.
இந்த நிலையில் யார் பக்கம் சரி யார் பக்கம் தவறு என்று யூகிக்க முடியாத வகையில் ஒருவரை மாற்றி ஒருவர் பல ரகசியங்களை உடைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் விஷ்ணுகாந்த் உடன் சிப்பிக்குள் முத்து சீரியலில் ஒன்றாக நடித்த நடிகர் ரிஹானா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஷ்ணுகாந்தோடு எடுத்த வீடியோ ஒன்றை பகிர்ந்து ஒரு கேப்ஷனும் கொடுத்திருக்கிறார்.
அதில் சூட்டிங் ஸ்பாட் மேக்கிங் வீடியோவை பகிர்ந்து, பிரெண்ட்ஸ் நான் ஒன்று உங்ககிட்ட சொல்ல விரும்புகிறேன். நான் இதுவரைக்கும் வேலை பார்த்த அனுபவத்தில் விஷ்ணுகாந்த் ஜென்டில்மேன், நல்ல பையன் தான். என்னை போல பெண் நடிகைகளிடம் பேசி கூட நான் பார்த்தது கிடையாது. எங்கிட்ட கூட ஒன்னு ரெண்டு வார்த்தை தான் பேசி இருக்கிறார். அதுவும் எங்க சீன் வரும் போது தான். கஷ்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து நிற்கும் அவருக்கு இப்படி நடந்தது ஏத்துக்க முடியல.
லைஃப் ஒரு தடவை தான். அது நல்லபடியா அமையனும். அது அமையாம போனா கண்டிப்பா அடுத்த முறை அது எப்படி ஆகும்னு நமக்கு தெரியாது. அதனால இவர் கொஞ்சம் அவசரப்பட்டு இருக்க வேண்டாம். கொஞ்சம் நாள் போன பிறகு லைஃப்க்காக முடிவெடுத்து இருக்கலாம். இனியாவது கவனமாய் இருக்கணும். ப்ரொபஷனல் லைஃப்ல அடுத்த லெவலுக்கு கொண்டு போக என்னுடைய வாழ்த்துக்கள். அவருடைய பர்சனல் நம்பர் கூட என்கிட்ட இல்ல. என் மனசுல இருக்கிறதை ஷேர் பண்ண மட்டும் தான் இந்த பதிவு என்று குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் இது தொடர்பாக பிரபல சேனலுக்கு ரிஹானா பேட்டி கொடுக்கையில் நான் ஏற்கனவே இந்த மாதிரி கருத்து கூறி தான் அர்ணவ் திவ்யா பிரச்சனையில் பூதாகரமாகனது. அது எனக்கு பாசிட்டிவ் ஆகவும் நெகட்டிவ் ஆகவும் ஆனது. அதனால இவங்களை பற்றி ஏன் பேசணும்னு விட்டுட்டேன். ஆனா அந்த பையனோடு ஒர்க் பண்ணி இருக்கிறதுனால அவனை பற்றி தெரிகிறது. அதனாலதான் நான் இந்த பதிவு வெளியிட்டேன் என்று கூறியிருக்கிறார்.

அதோடு எனக்கு தெரிஞ்சு அந்த ரெண்டு பசங்களும் நல்ல பசங்க தான். அந்த பொண்ணு செட்டில கொஞ்சம் ஆட்டிட்யூட் ஆகத்தான் இருப்பாங்க. செட்ல விஷ்ணுவுக்கு பார்த்த உடனே கிரஷ். பார்த்தவுடனே லவ் என்று எல்லாமே டக்கு டக்குனு நடந்திடுச்சு. விஷ்ணுவுக்கு 32 வயசு ஆகுது. அந்தப் பையன் மிடில் கிளாஸ் ஃபேமிலியில் இருந்து கஷ்டப்பட்டு ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக நடிச்சு இப்பதான் ஓரளவுக்கு முன்னுக்கு வந்திருக்கிறான்.
அதற்குள் ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணி இருக்கிறான். அந்த பொண்ணு அதையும் சூட்டிங் கல்யாண மாதிரி கேஷுவலா மூவ் பண்ணிடுச்சு. இப்ப அந்த பையன் ரொம்ப மன அழுத்தத்தில் இருக்கிறான். அதுபோல சூட்டிங் ஸ்பாட்லையும் சம்யுக்தா ரவி கூட பேசிட்டு தான் இருக்கும். சரி அது அவங்களோட பர்சனல் அதைப்பற்றி நாம் பேசத் தேவையில்லை.
ரவி மிஸ்பிஹேவ் பண்ணுனான்னு அந்த பொண்ணு சொல்றாங்க. அந்த பையன் பல நடிகைகளுடன் நடிச்சிருக்கான். அவனும் மிடில் கிளாஸ் ஃபேமிலியில் இருந்து கஷ்டப்பட்டு வந்தவன். அப்படி அவன் நடந்து இருந்தால் எல்லோரும் சொல்லி இருப்பாங்களே? ஆனா கூட நடிச்ச பெண்களே ரவிக்கு சப்போர்ட் தான் பண்றாங்க. உண்மையா என்ன நடந்துச்சு, பண்னுனானா இல்லையான்னு அவனுக்குத்தான் தெரியும். கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த பசங்கள தேவையில்லாம கஷ்டப்படுத்திட்டாங்களோனு தோணுது என்று ரிஹானா அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications