பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலக காரணம் இதுதான்! கர்ப்பம் அல்ல.. வெளிப்படையாக பேசிய ரித்திகா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கேரக்டரில் நடித்து வந்த நடிகை ரித்திகா அந்த சீரியலில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு விலகி இருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் தான் எதற்கு சீரியலை விட்டு விலகினேன் என்பது பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
பொதுவாக ஒரு சில நடிகைகள் மட்டும் தான் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல மனதில் எளிமையாக இடம்பிடித்து விடுகிறார்கள். அதில் ஒருவர் தான் நடிகை ரித்திகா. இவர் ஆரம்பத்தில் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பல ரசிகர்களை கவர்ந்திருந்தார். அதுபோல விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பாட்டு பாடியும் அசத்தி இருக்கிறார். அதோடு அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலமாகத்தான் நடிகையாக அறிமுகமானார். அந்த சீரியலில் கதாநாயகனின் தங்கை கேரக்டரில் வினோதினியாக நடித்திருந்தார். அதற்கு பிறகு தான் பாக்கியலட்சுமி சீரியலும் நடித்திருந்தார். இந்த சீரியலில் இவரை பார்த்தாலே அய்யோ பாவம் என்று சொல்கிற மாதிரியான கேரக்டர் தான் இவருக்கு. எப்போதும் அதிர்ந்து பேசாத கேரக்டரில் ரித்திகா கச்சிதமாக பொருந்தி இருந்தார்.
சீரியலில் இவருடைய கேரக்டர், காதலித்து திருமணம் செய்த கணவர் தன் கண்முன்னே இறந்து போய்விட்ட பிறகு தன்னுடைய குழந்தையோடு கணவரின் பெற்றோரோடு ரித்திகா வாழ்வது போல தான் அந்த சீரியலில் காட்சிகள் இருந்தது. பிறகு எழிலை காதலித்து இருப்பார். பல போராட்டங்களுக்குப் பிறகு பாக்யா முயற்சியால் எழில் மற்றும் அமிர்தாவுக்கு திருமணமும் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு அமிர்தா பாக்யாவிற்கு பக்கபலமாக இருந்து வந்தார். அந்த நேரத்தில் தான் ரித்திகாவிற்கு திருமணம் நடைபெற்றது. ரித்திகா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது kpy பாலா அவர் பின்னாடி சுற்றி காதலிப்பது போன்று பேசிக்கொண்டே இருப்பார். இதனால் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா? என்று கூட பலர் கேள்வி எழுப்பி வந்தனர்.

ஆனால் இது குறித்து ரித்திகா மற்றும் பாலா இருவரும் விளக்கம் கொடுத்திருந்தனர். அதில் நாங்கள் நிகழ்ச்சிக்கு கண்டெண்டுக்காக தான் இப்படி பேசிக் கொண்டே இருக்கிறோம். எங்களுக்குள் எதுவும் கிடையாது என்று கூறியிருந்தனர். அதுபோலவே பாக்கியலட்சுமி சீரியலில் ரித்திகா நடித்துக் கொண்டிருக்கும் போது விஜய் டிவியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் வினு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ச்சியாக பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் திடீரென்று அந்த சீரியலில் இருந்து விலகி விட்டார். பிறகு எதிலும் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். அதே நேரத்தில் நிறைமாத கர்ப்பமாக இருக்கும் ரித்திகா தான் எதற்காக சீரியல் மற்றும் சினிமாவை விட்டு விலகினேன் என்று கூறியிருக்கிறார்.

அதில் அவர் பேசுகையில் நான் கல்யாணத்திற்கு பிறகு நடிக்க வேண்டும் என்று தான் நினைத்திருந்தேன். நான் நடிக்க கூடாது என்று என்னுடைய கணவரோ அல்லது என்னுடைய அம்மா வீட்டிலோ என் கணவர் வீட்டிலோ யாரும் சொல்லவில்லை. ஆனால் எனக்கு உடல் நிலையில் சில பிரச்சனைகள் வந்தது. அதனால் தான் நான் நடிப்பை விட்டு விலகி இருந்தேன்.

அந்த நேரத்தில் சில மாதங்கள் கழித்து நான் கர்ப்பமாக இருந்தேன். இது கடவுள் கொடுத்த வரம் என்பதால் இதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு இந்த வாழ்க்கைக்கு தயாராகி விட்டேன். இப்போது நாளை அல்லது மறுநாள் எனக்கு குழந்தை பிறக்கும் என்று டாக்டர் சொல்லி இருக்கிறார்கள். குழந்தை பிறந்து ஓரளவிற்கு செட்டில் ஆனதும் மீண்டும் நடிக்க தொடங்குவேன். உடல்நிலை பிரச்சனை காரணமாகத்தான் நான் சீரியலை விட்டு விலகினேன் என்று ரித்திகா விளக்கம் கொடுத்திருக்கிறார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications