உதயநிதி ஸ்டாலினுடன் எடுத்த செல்பியால் உருவான பிரச்சனை! கடுப்பான நடிகை ரித்திகா வெளியிட்ட வீடியோ
சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினோடு நடிக்கும் போது எடுத்த போட்டோவை நடிகை ரித்திகா உதயநிதியின் பிறந்த நாளான கடந்த நவம்பர் 27ஆம் தேதி தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனால் அந்த போஸ்ட்க்கு அதிகமான நெகட்டிவ் கமெண்ட் வந்து இருக்கிறது. இதனால் கடுப்பான ரித்திகா இன்று ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
சோசியல் மீடியாவில் நாளுக்கு நாள் அதிகமான நெகட்டிவ் பரவி வருகிறது. ஒருவரை பிடிக்கவில்லை என்றால் உடனே பல பேக் ஐ டி ஓபன் செய்து கண்டமேனிக்கு திட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதிலும் பிரபலங்கள் நிலைமை கூட இப்போ பரிதாபமாக தான் மாறிக் கொண்டிருக்கிறது.

முன்பெல்லாம் பிரபலங்கள் என்றால் ரொம்பவும் மதிப்பும் மரியாதை இருக்கும் ஆனால் இப்போ எதிர்த்தரப்பில் மோசமாக கமெண்ட் போடுபவர்கள் யார் என்று கண்டுபிடிக்க முடியாது என்று சிலர் அவதூறு பரப்பி வருவதையும் பார்க்க முடிகிறது. அது போல தான் நடிகை ரித்திகாவிற்கு நடந்திருக்கிறது. கடந்த 27ஆம் தேதி நடிகரும், துணை முதல்வரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளுக்காக பல பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர். அதில் நடிகை ரித்திகாவும் வாழ்த்து தெரிவித்து அவருடன் எடுத்த போட்டோவை போஸ்ட் போட்டு இருந்தார்.
அதற்கு அதிகமானோர் ஆபாசமாகவும், மோசமாகவும் விமர்சித்து கமெண்ட் போட்டு இருக்கிறார்கள். இந்த போட்டோவுக்கு ஏன் இவ்வளவு கமெண்ட் என்று பதறிப்போன நடிகை அதற்கு வந்த கமெண்ட்டை படித்து பார்த்து அதிர்ச்சியாகி இருக்கிறார். உடனே இன்று தன்னுடைய instagram பக்கத்தில் ஒரு விளக்க வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
அதில், நான் உதயநிதி ஸ்டாலின் சாருடன் சரவணன் இருக்க பயமேன் என்ற படத்தில் நடித்திருந்தேன். அந்த நேரத்தில் அவரோடு எடுத்த புகைப்படத்தை தான் அவருடைய பிறந்தநாளுக்கு போஸ்ட் போட்டு வாழ்த்து சொன்னேன். அதேபோல விஜய்யுடனும் எனக்கு கோட் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அது ரொம்ப குட்டி ரோல் என்பதால் அதை நான் நிராகரிச்சிட்டேன்.
இப்போ எனக்கு நெகட்டிவ் கமெண்ட் வருவதை பார்க்கும் போது விஜய் சார் உடனும் ஒரு செல்பி எடுத்து இருக்கலாம்னு தோணுது என்று பேசியிருக்கிறார்.மேலும் சில நிமிடம் யோசித்து விட்டு பிறகு அவர் பேசும்போது, ஒன்னு தெரிஞ்சிக்கோங்க இவங்க எல்லாம் என்னுடைய சக நடிகர்கள், அவங்களோட நான் போட்டோ எடுத்திருந்தால் நிச்சயம் அவர்களின் பிறந்தநாளுக்கு பதிவிடுவேன்
உதயநிதி சார் உடன் நான் போட்ட போட்டோக்கு அவ்வளவு கமெண்ட் போட்டு இருக்கீங்க. நிறைய பேரு அரசியல் பார்வையோடும் பதிவிட்டு இருக்கிறீர்கள். அதற்கு நான் சந்தோஷப்படுவேன் ஆனால் இதை என்னுடைய கமெண்ட் பாக்ஸில் காட்டி எந்தவித பயனும் இல்லை. இதையெல்லாம் உங்களுடைய ஓட்டிங்கில் காட்டுங்க. யார் உங்களுக்கு பிடிக்குமோ அவங்களுக்கு வாக்களியுங்கள். அதை விட்டுட்டு என்னுடைய போட்டோவுக்கு கமெண்ட் செய்வதால் எந்த பயனும் இல்லை என்று ரித்திகா பேசியிருக்கிறார். இப்போ இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications