Roja: நல்லவருனு நினைச்சோம்! சூப்பர் ஸ்டாரா இவரு? ரஜினி இப்படி பண்ணலாமா? ரோஜா சரமாரி கேள்வி
சென்னை: நடிகையும் அரசியல் பிரமுகருமான ரோஜா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேட்டியில் அவர் நடிகர் ரஜினிகாந்த் குறித்து நேரடியாகவே தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகையிலிருந்து அரசியல்வாதியாக
ரோஜா தமிழிலும் தெலுங்கிலும் பல திரைப்படங்களில் நடித்தவர். குறிப்பாக 1990களில் முன்னணி நடிகையாக இருந்த அவர் பின்னர் அரசியலுக்குள் நுழைந்தார். தற்போது அவர் ஆந்திரப் பிரதேசத்தில் செயல்படும் YSR Congress Party கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். அந்த கட்சியின் தலைவரும் ஆந்திரப் பிரதேச முதலமைச்சருமான ஜெகன்மோகன் ரெட்டியின் நெருக்கமான அரசியல் தலைவராகவும் ரோஜா பார்க்கப்படுகிறார்.
இதற்கு முன்பு ஆந்திர அரசியலில் முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கும் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் அதன் தலைவர் சந்திரபாபு நாயுடு (N. Chandrababu Naidu) ஆகியோருடன் ரோஜாவுக்கு கடுமையான அரசியல் மோதல்கள் நடந்திருக்கின்றன.
நடிகைகளை குறிவைத்து விமர்சனம்
சில காலங்களுக்கு முன்பு அரசியல் விவாதங்களின் போது அந்த கட்சியைச் சேர்ந்த சிலர் நடிகை என்ற பெயரில் தன்னை மிகவும் அவமதித்து பேசியதாக ரோஜா அந்த பேட்டியில் கூறியுள்ளார். அது குறித்து அவர் பேசும்போது,
"நடிகை என்றால் எல்லாரும் அப்படித்தான் இருப்பார்கள் என்று சிலர் மிகவும் கீழ்த்தரமாக பேசினார்கள். ஒரு பெண் நடிகையை இப்படி அவமதித்து பேசுவது சரியா?" என்று கேள்வி எழுப்பினார்.
ரஜினி குரல் கொடுக்கவில்லை
அதே நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து தனது வருத்தத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். "ரஜினிகாந்த்தும் ஒரு நடிகர் தான். நாங்களும் அவருடன் பல படங்களில் நடித்திருக்கிறோம். நடிகைகளை பற்றி இப்படி அவதூறாக பேசும்போது 'நடிகை என்றால் எப்படி வேண்டும் என்றாலும் பேசலாமா' என்று அவர் கேட்கலாமே.
நாங்கள் நடிகைகள் என்பதற்காக ஆபாச படங்களில் நடித்தோ அல்லது விபச்சாரத்தில் ஈடுபட்டோ இருக்கிறோமா? அப்படியெல்லாம் எதுவும் செய்யவில்லை. ஆனாலும் சிலர் மிகவும் மோசமாக பேசினார்கள். அப்போது ரஜினி எங்களுக்காக குரல் கொடுக்கவில்லை என்பது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது" என்று ரோஜா கூறியுள்ளார்.
நாங்கள் மரியாதை கொடுக்கிறோம்
மேலும் அவர் கூறும்போது, "நாங்கள் ரஜினிகாந்த் அல்லது மற்ற நடிகர்களுக்கு பிறந்தநாள் என்றால் வாழ்த்து அனுப்புகிறோம். அவர்களுக்கு ஏதாவது விழா என்றால் அங்கே சென்று கலந்து கொள்கிறோம். நாங்க ஏன் அப்படி பண்ணனும்? அவரு நல்லவருன்னு நினைச்சோம்! அதனால அப்படி பண்ணுனோம். அவரு சூப்பர் ஸ்டாரு மத்தவங்களுக்காக இப்படி பண்ணுனாங்கன்னு சொல்லுறாங்க, ஆனா கூட நடித்த நடிகைகளுக்காக அவர் துணை நிற்கலையே என்று ரோஜா ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார். அந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறோம்.
சந்திரபாபு நாயுடுவுடன் ரஜினி நட்பு
இந்த பேட்டியில் அவர் மறைமுகமாக சந்திரபாபு நாயுடு மற்றும் ரஜினிகாந்த் இடையேயான நட்பையும் குறிப்பிட்டார். "எங்களை அவமதித்தவர்களோடு ரஜினிகாந்த் கைகுலுக்கி பேசிக் கொண்டு சிரித்துக் கொண்டிருப்பதை பார்த்தபோது மிகவும் வருத்தமாக இருந்தது" என்று ரோஜா கூறினார்.
வைரலாகும் பேட்டி
இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் குறித்து ரோஜா வெளிப்படையாக கூறிய கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஒருபுறம் சிலர் ரோஜாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். மறுபுறம் ரஜினிகாந்த் ரசிகர்கள் இந்த பேட்டியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதனால் நடிகை ரோஜா கூறிய இந்த கருத்து அரசியல் மற்றும் திரைப்பட வட்டாரங்களில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications