பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் அறிமுகமாகும் கதாநாயகி.. இனி கதையே மாற போகிறது! கதிருக்கு தான் பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடில் புது நடிகை ஒருவர் அறிமுகமாக இருக்கிறார். அவர் விஜய் டிவியில் மற்றொரு சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை தான். யார் அவர்? என்ன கேரக்டரில் வருகிறார் என்று பார்க்கலாம்.
பொதுவாக சீரியலில் சுவாரசியத்தை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு வாரமும் ஒரு திருப்பத்தை வைத்து ரசிகர்களை சீரியல் பற்றி அதிகமாக பேச வைப்பது சீரியல் குழுவினர்களின் டெக்னிக். அதுவும் சில நேரங்களில் யாரும் எதிர்பார்க்காத திருப்பங்கள் எல்லாம் சீரியலில் வந்துவிடும். அந்த நேரத்தில் ரசிகர்களும் அந்த சீரியலை மறக்காமல் பார்ப்பதால் டிஆர்பி அதிகரிக்கும்.

அதுபோல யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சில சீரியல்களில் புது முகங்கள் அறிமுகம் ஆகிவிட்டதை பார்த்திருப்போம். அதுபோல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புது கேரக்டர் ஒருவர் இன்றைய எபிசோடில் அறிமுகமாகி இருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லை ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தங்கமகள் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருபவர் தான்.
பிக் பாஸ் 8: இந்த வாரம் குறும்படம் இருக்கு! அருணுக்கு ஆப்பு உறுதி.. உடைபடுமா உண்மை?
தங்கமகள் சீரியலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்களுக்கு பரீட்சையமாக மாறி இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் இந்த சீரியலில் நடிக்கும் நடிகை சாய் ரித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முக்கிய கேரக்டரில் அறிமுகம் ஆகி இருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் தன்னுடைய அப்பாவிற்கு தெரியாமல் அம்மா சொன்னதற்காக ராஜியை திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே கதிருக்கும் அப்பா பாண்டியனுக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்து கொண்டு இருக்கும். இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு தன்னுடைய தந்தையிடம் தனக்காகவும் தன் மனைவிக்காகவும் பணத்திற்கு நிற்க கூடாது என்று படிக்கும் போது பார்ட் டைம் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
ஆரம்பத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்த கதிர் இப்போது டிரைவராகவும் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கதிர் ஓட்டும் காரில் தன்னுடைய நண்பர்களோடு சாய் ரித்து வருகிறார். அவருக்கு அவருடைய நண்பர்களால் பிரச்சனை வருகிறது. சாய் ரித்துவை ஏமாற்றி நண்பர்கள் ரூமிற்கு கூட்டிட்டு போவதற்கு முயற்சி செய்கிறார்கள்.

இதை தெரிந்து கொண்ட கதிர் அவரை எப்படி காப்பாற்றுகிறார்? என்றுதான் கதை போகப்போகிறது. இதனால் கதிருக்கு பிரச்சனை வரப்போகிறதா என்ற கேள்விகளும் எழும்புகிறது. இப்போ கொஞ்ச நாளாக தான் கதிர் மற்றும் ராஜி இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. இது ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் நிலையில் சாய் ரித்துவின் அறிமுகத்தால் கதிர் மற்றும் ராஜி வாழ்க்கையில் என்ன பிரச்சனை வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.













Click it and Unblock the Notifications