அந்த போட்டோ வெளியிட காரணமே இதுதான்! மகனுக்காக நான் எடுத்த முடிவு.. சிறகடிக்க ஆசை ரோகிணி விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி கேரக்டரில் நடிகை சல்மா நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னை பற்றி வெளியான நெகட்டிவ் செய்திகள் குறித்து விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் சில நாட்களாக நடிகை சல்மா தன்னுடைய கணவரை விவாகரத்து செய்து விட்டார் என்ற செய்திகள் பரவி வந்திருக்கிறது. அது குறித்து முதல் முறை சல்மா கொடுத்த விளக்கம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று டிஆர்பி யில் முதல் இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றனர். அந்த வகையில் இந்த சீரியலில் ரோகிணியாக நடித்து பிரபலமானவர்தான் நடிகை சல்மா.

Actress Salma Arun explanation about divorced her husband rumor

இவர் ஆரம்பத்தில் சில விளம்பரங்களில் நடித்து பிரபலமடைந்து இருந்த நிலையில் ஒரு சில திரைப்படங்களிலும் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருக்கிறார். அதற்கு பிறகு விஜய் டிவியில் நம்ம வீட்டு பொண்ணு என்ற சீரியலில் நடிக்க தொடங்கிய சல்மா அதற்குப் பிறகு ஒரு சில சீரியல்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருக்கிறார்.

அதிலும் பாரதிகண்ணம்மா சீசன் 1 மற்றும் ராஜா ராணி சீரியலில் கதாநாயகனுக்கு எதிராக சமையல் போட்டியில் கலந்து கொள்ளும் கேரக்டர்... இப்படி ஒரு சில சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த இவருக்கு தான் ஜீ தமிழில் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் அமுதாவின் அண்ணி கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படி ஆக கிடைத்த வாய்ப்புகளில் நடித்துக் கொண்டிருந்த சல்மா இப்போது சிறகடிக்க ஆசை சீரியலில் மூலமாக பலருக்கும் பரீட்சையமாகி இருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் தன்னை பற்றி இணையத்தில் பரவி வரும் வதந்திகள் குறித்து விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் பேசுகையில் சில நாட்களாகவே இணையத்தில் நான் என்னுடைய கணவரை விவாகரத்து செய்து விட்டேன் என்ற ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது.

Actress Salma Arun explanation about divorced her husband rumor

நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை பொதுவாக நான் எந்த மாதிரி நெகட்டிவான கமெண்ட் உங்களுக்கு ரியாக்ட் செய்வது கிடையாது. காரணம் நான் இந்த சினிமா துறைக்குள் வருவதற்கு முன்பே என்னுடைய கணவர் இங்கு எவ்வளவு பாசிட்டிவ் இருக்கிறதோ அதுபோல நெகட்டிவ் இருக்கும் என்று சொல்லி தான் அனுப்பினார். அதுபோல நான் கல்யாணம் முடிந்து குழந்தை பிறந்த பிறகுதான் நடிக்க தொடங்கியிருந்தேன்.

அதனால் இந்த மாதிரி வதந்தி செய்தி நாளைக்கு என்னுடைய மகனுக்கு தெரிய வரும் போது அவருடைய மனம் கஷ்டப்படக் கூடாது என்பதற்காகத்தான் நான் சமீபத்தில் என்னுடைய கணவரோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருந்தேன். நான் என்னுடைய கணவரை விவாகரத்து செய்யவில்லை என்பதை தெரிவிப்பதற்காக தான் நான் என்னுடைய கணவரோடு எடுத்த புகைப்படத்தை சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டேன்.

அவர் பற்றி சில தகவல்களையும் அதில் பகிர்ந்து இருந்தேன். ஆனாலும் ஒரு சிலர் உண்மை என்னவென்று தெரியாமல் கண்டமேனிக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள். நடிகைகள் நாங்களும் சாதாரண மனிதர்கள் தான். ஒரு கேரக்டரில் நடிக்கிறோம் அது எங்களுடைய வேலை அவ்வளவுதான். நாங்கள் அந்த கேரக்டர் கிடையாது. அதை புரிந்து கொள்ளாமல் சிலர் எங்களை தவறாக பேசி வருகிறார்கள் என்று அந்த பேட்டியில் நடிகை சல்மா பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+