நடிகை சங்கீதாவின் மணவாழ்க்கையில் விரிசலா? திடீர்னு மிஸ்ஸான பாடகர் கிரிஷ்ஷின் பெயர்.. பிரபலம் நச்
சென்னை: பாடகர் கிரிஷை காதலித்து 2009ல் திருமணம் செய்து கொண்டவர் நடிகை சங்கீதா.. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சங்கீதா இன்ஸ்டா தளத்தில் தனது பெயருக்கு பின்னால் இருந்த கணவர் பெயர் கிரிஷ் என்பதை நீக்கி சங்கீதா ஆக்டர் என மாற்றியதாக கூறப்படுகிறது. இதை வைத்து இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்னை, பிரிய போவதாக செய்தி பரவியது. இதனை சங்கீதா உடனடியாக மறுத்துள்ளார். .இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, இதுகுறித்து தன்னுடைய கருத்தையும் தெரிவித்துள்ளார்.
கிரிஷ் - சங்கீதா விவாகரத்தா? என்று செய்திகள் இணையத்தில் பரவிய நிலையில், இதனை உடனடியாக மறுத்துள்ளார் சங்கீதா..

"அந்த செய்தி முற்றிலும் தவறானது. கிரிஷ், திருவண்ணாமலை போய் விட்டு திரும்பி வந்து கொண்டுள்ளார். என்னிடம் பிரேம் கூட இதுபற்றி கேட்டார். அதெல்லாம் இல்லை என்று சொன்னேன்.. பொதுவாக நான் என் பெயருக்கு பின்னால் என் அப்பாவோ அல்லது கணவர் பெயரை போட விரும்பமாட்டேன்" என்ற விளக்கத்தையும் தந்துள்ளார்.. .
இந்நிலையில், Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, சங்கீதா - கிரிஷை விவாகரத்து செய்வதாக வரும் தகவல்களில் உண்மையில்லை என்றே தெரிகிறது.. பெயர் மாற்றத்துக்கு நிறைய காரணங்கள் இருக்கலாம்..
சங்கீதா பெயர் மாற்றம்
சங்கீதா சினிமா துறைக்குள் நுழைந்தபோது, பூவே உனக்காக சங்கீதா பிரபலமாகியிருந்தார்.. எனினும், சங்கீதா தன்னுடைய பெயரை மாற்றிக் கொள்ளவில்லை.. பூவே உனக்காக சங்கீதா இப்போது பீல்டில் இல்லை, ஆனால், சங்கீதா கிரீஷ் தற்போதும் பிசியாகவே உள்ளார்..
அடையாளத்துக்காக தன்னுடைய கணவர் பெயரை சேர்த்துக் கொண்டிருக்கலாம். இப்போது பூவே உனக்காக சங்கீதா பீல்டு அவுட் ஆகிவிட்டதாலும், வேறு யாரும் சங்கீதா என்ற பெயரில் சினிமா துறையில் இல்லாததாலும், பழைய மாதிரியே சங்கீதா என்று மாற்றியிருக்கலாம்.. அல்லது வேறு நியூமராலஜி, ஜோதிடம் போன்றவையும் காரணமாக இருக்கலாம். எனவே, விவாகரத்து என்பதெல்லாம் வெறும் புரளியாக இருக்கும்..
வயது அதிகமா?
பல நடிகர், நடிகைகள் யாராக இருந்தாலும், தங்களது பிள்ளைகளை பாதிக்காத அளவுக்கு முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
அதேபோல திருமணமானபோது, கிரிஷ்ஷைவிட சங்கீதா வயதில் பெரியவர் என்ற சலசலப்பும் ஏற்பட்டது. ஆனால், கிரீஷ்ஷூக்குதான் வயது அதிகம் என்று சங்கீதாவே ஒருமுறை விளக்கம் தந்திருந்தார்.. எனினும், கிரீஷ்ஷைவிட மாதங்களில் வித்தியாசம் இருக்கலாம் என்றே தெரிகிறது.
மணவாழ்க்கையில் விரிசலா?
பொதுவாக யாராக இருந்தாலும், மணவாழ்க்கையின் நீண்ட பயணத்தில் ஒருவிதமான சலிப்பு ஏற்படும்.. பொருளாதாரம், குடும்ப சூழல் போன்ற காரணங்களுக்காக, யாருக்குமே ஒரு சலிப்பு வரும்.. மணவாழ்க்கையில்லை என்றாலும், பேச்சுலராகவே 20 வருடங்கள் வாழ்ந்து வந்தாலும், அதிலும் ஒரு சலிப்பு வரும்.. ஆனால், அந்த சலிப்பு மின்னல் போல, வந்துவிட்டு போய்விடும்..
இப்படி ஒரு சலிப்பு ஏற்படும் சூழலில்தான், மூன்றாவது நபர் தம்பதிக்குள் நுழைந்துவிடுகிறார்கள்.. அப்போதுதான் முறிவு என்பது நடக்கிறது. சங்கீதா விஷயத்தில் அப்படி எதுவுமே இல்லை.. அவர் நல்லபடியாக இருக்கட்டும்.. தம்பதிக்குள் சலிப்பு வந்தாலும் அதெல்லாம் மறைந்துவிடும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications