Seetha: ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய நடிகை சீதா! ஜீன்ஸ் உடையில் கலக்கல்! சம்பவம் இருக்கு போல!
சென்னை: 90ஸ்களின் தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்த நடிகை சீதா தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் நடித்துப் பிரபலம் அடைந்தவர். வெள்ளித்திரை, சின்னத்திரை, வெப் தொடர்கள் என காலத்திற்குத் தகுந்தாற்போல் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் அவரது தன்னம்பிக்கை மிக்க பயணத்தைப் பாராட்டி வருகின்றனர் ரசிகர்கள். அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

40 ஆண்டு கலை சேவை மற்றும் விருதுகள்
1985-ஆம் ஆண்டு பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான 'ஆண் பாவம்' திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் சீதா. அடுத்தடுத்து ஆயிரம் பூக்கள் மலரட்டும், துளசி , குரு சிஷ்யன், உன்னால் முடியும் தம்பி போன்ற வெற்றிப் படங்களில் நடித்துப் புகழ்பெற்றார். அவர் சினிமாவில் அறிமுகமான சமயத்தில் பாவாடை தாவணி ஆக இருந்தாலும் சரி, மார்டன் உடையாக சரி பக்காவாக பொருந்துகிற முக அம்சம் பலருடைய மனதிலும் இவருக்கு இடம் பிடிக்க காரணமாக இருந்தது.
பார்த்திபனுடன் பயணம்
பார்த்திபன் இயக்கி நடித்த 'புதிய பாதை உள்ளிட்ட பல படங்களில் அவர் பிசியாக நடித்துக் கொண்டிருந்த சமயத்திலேயே பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு சில வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்த சீதா பார்த்திபனோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து விட்டு மீண்டும் நடிக்க வந்தார்.
அவரது இரண்டாவது இன்னிங்ஸ் சின்னத்திரையில் தொடங்கி இருந்தாலும், காதல் அழிவதில்லை, வியாபாரி போன்ற படங்களில் அம்மா கேரக்டரில் நடித்து திறமையை வெளிப்படுத்தினார். தனது திறமையான நடிப்புக்காகச் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது, தமிழக அரசின் உயரிய விருது போன்றவற்றை பெற்றுள்ளார். ஆந்திர அரசின் 'நந்தி சிறப்பு ஜூரி விருதையும்' பெற்றுள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கையில் சவால்கள்
1990-ஆம் ஆண்டு பார்த்திபனைத் திருமணம் செய்த சீதா, ஒரு சில ஆண்டுகளுக்குள் விவாகரத்து பெற்றுப் பிரிந்தார். தற்போது தனியாக வாழ்ந்து வரும் அவர், வாழ்க்கைத்துணை விஷயத்தில் சவால்களைச் சந்தித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு நடிகை சீதாவின் தாயார் உடல்நலக் குறைவால் காலமானார். இது சீதாவை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியது. அம்மா மறைந்த சோகத்தைப் பற்றி சமூக வலைதளத்தில் "எனக்குன்னு யாருமில்லை - அனாதை ஆகிட்டேன்" என்று உருக்கமான பதிவை வெளியிட்டார்.
அவரது தாயின் நினைவாகவும், ஆழமான துயரத்தின் வெளிப்பாடாகவும் அவர் தனது தலைமுடியை மொட்டை அடித்துக் கொண்டார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியானபோது, ரசிகர்கள் அவரது துணிச்சலான நடவடிக்கையை பாராட்டிப் பலரும் ஆறுதல் கூறினர்.
மீண்டும் புதிய அடையாளத்தில் சீதா
தனிப்பட்ட வாழ்க்கையில் எத்தனை சவால்கள் வந்தாலும், அதைக் கடந்து முன்னேற துடிக்கும் சீதாவின் தன்னம்பிக்கைதான் அவரை இன்றும் பிரபலமாக வைத்துக்கொண்டு இருக்கிறது. சமீபத்தில் மொட்டை அடித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருந்த சீதா, தற்போது ஜீன்ஸ், சட்டையில் புதிய தலைமுறைக்கு ஏற்ற தோற்றத்திற்கு மாறியுள்ளார். இந்த அட்டகாசமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
மீண்டும் வரவேற்பு
சில காலமாக அவரை பற்றி எந்தத் தகவலும் இல்லாததால், ரசிகர்கள் அவரைத் தேடி வந்த நிலையில், தற்போது அவர் புதிய மற்றும் சந்தோஷமான தோற்றத்திற்கு மாறியிருப்பது பாராட்டிற்குரியது. வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சிகளில் இருந்து மீண்டு வந்து, மீண்டும் தன்னம்பிக்கையுடன் உலா வரும் அவரது முயற்சியைப் பலரும் பாராட்டிப் பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications