சூட்டிங் ஸ்பாட்டில் மாட்டிவிட்ட ரஜினிகாந்த்..அந்த உடைக்காக திட்டிய பிரபலம்..மனம் திறந்த நடிகை சீதா
சென்னை: வெள்ளி திரையிலும், சின்ன திரையிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சீதா தன்னுடைய திரைப்பட அனுபவம் குறித்து பேசி இருக்கிறார்.
தான் நடித்த குரு சிஷ்யன் திரைப்படத்தில் தனக்கு கிடைத்த அனுபவங்கள் குறித்தும் நடிகர் ரஜினிகாந்த் குறித்தும் அதில் பேசியிருக்கிறார்.
வளர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் குரு சிஷ்யன் திரைப்படத்தில் நடித்ததால் பல பிரபலங்கள் இவரை திட்டியதாகவும் கூறியிருக்கிறார்.

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சீதா. இவரை அதிகமான ரசிகர்களுக்கு பார்த்ததும் பிடித்து போய்விடும். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் இவர் ஆன் பாவம் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் வெள்ளி திரையில் அறிமுகம் ஆகி இருக்கிறார். அதைத்தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பல திரைப்பட வாய்ப்புகள் கிடைத்த வண்ணமாக இருந்திருக்கிறது.
அந்த நேரத்தில் தான் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பிரபு உடன் சேர்ந்து குரு சிஷ்யன் எனும் திரைப்படத்திலும் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் இவர் மட்டுமல்லாமல் நடிகை கௌதமியும் ஒரு நடிகையாக இருந்திருக்கிறார். இரண்டு பேர் ஒரே திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வந்திருக்கின்றனர். அப்போது சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் போது நடிகர் ரஜினி இவரை கலாய்த்து கொண்டே இருப்பாராம்.

அப்போது சும்மா இவர் பார்த்தால் கூட நீ என்ன கௌதமியை முறைத்து பார்த்துக் கொண்டே இருக்கிறாய், நான் சொல்லிக் கொடுக்கவா என்று கேட்பாராம். இவர் பயந்து போய் அப்படியெல்லாம் நான் பார்க்கவே இல்லை என்று கூறுவாராம். அதற்கு சிரித்தபடியே இல்லை நீ கௌதமியை முறைத்ததை நான் பார்த்தேன் என்று ரஜினி சொல்வாராம். அவ்வளவு துருதுருவென சேட்டை செய்து கொண்டு கலாய்ப்பார் என்று ரஜினி பற்றி சீதா கூறியிருக்கிறார்.
அதோடு அந்த திரைப்படத்தில் சீதா குதிரை சவாரி செய்து மார்டன் உடையில் நடித்திருப்பார். அது குறித்தும் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். அதில் அந்த திரைப்படத்தில் நான் குதிரை சவாரி செய்வேன், குடித்துவிட்டு ஆடுவது போன்ற ஒரு பாட்டும் வரும். அந்த பாட்டு பெருசா கவர்ச்சியாக இருக்காது. ஆனால் அந்த படத்தை பார்த்த பாலச்சந்திரன் சார் எனக்கு கால் பண்ணி என்ன சீதா இப்படி நடிச்சிருக்க, நல்ல கதாபாத்திரம் வந்துகிட்டு இருக்கும்போது இப்படி கிளாமர் தேவையா? இனிமேல் இப்படி நடிக்காதே என்றார்.
அடுத்து விசு சார் கால் பண்ணி என்ன சீதா என்ன கேரக்டர் இது? உனக்கு கிளாமர் சரி வராது, உனக்கு குடும்ப பாங்கான ரோல் தான் சரி. இந்த மாதிரி நடிக்க ஆரம்பிச்சா இப்படித்தான் ரோல் வரும் என்று சொன்னார்.அப்போது என்னடா இப்படி சொல்லிவிட்டார் என்று இவர் வருத்தப்பட்டதாகவும், இப்போது அந்த பாட்டை பார்க்கும் போதெல்லாம் இதற்காக இப்படி எல்லாம் திட்டினார்கள் என்று தோன்றுகிறது என அவர் கலகலப்பாக பேசியிருக்கிறார்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications