ரொம்ப நாள் கழிச்சி நடந்திருக்கிறது.. உங்களுடைய ஆசிர்வாதம் தேவை.. நெகிழ்ச்சியாக பதிவிட்ட ஷபானா
ஷபானா புது சீரியலில் நடிக்க இருக்கும் நிலையில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை: செம்பருத்தி சீரியல் முடிவிற்கு பிறகு ஷபானா புது சீரியலில் நடித்து இருக்கிறார்
ஷபானா நடித்த புது சீரியல் சன் டிவியில் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடம் உருக்கமான வேண்டுகோளை வைத்திருக்கிறார்.
தன்னுடைய சீரியல் புது ப்ரோமோ பகிர்ந்து அழகிய காதல் அறிமுகமாகும் நேரம் விரைவில் என்று பகிர்ந்து இருக்கிறார்.

செம்பருத்தி பார்வதி
ஜீ தமிழில் டிஆர்பி யில் முதலிடத்தில் பல வருடங்களாக பிடித்து வந்து சீரியல் என்றால் அது செம்பருத்தி சீரியல் ஆகத்தான் இருக்க முடியும். இந்த சீரியலில் முதல் முறையாக தமிழில் அறிமுகமான ஷபானா நடித்திருந்தார். முதல் சீரியலே இவருக்கு ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பையும், பிரபலத்தையும் கொடுத்தது. இந்த சீரியலில் பார்வதியாக ரசிகர்கள் மனதில் இப்ப வரைக்கும் ஜொலித்து வருகிறார். இந்த சீரியல் முடிவடைந்ததும் மீண்டும் ஷபானா எந்த சீரியலில் நடிப்பார் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருந்தனர்.

புதிய சீரியல்
இந்த நிலையை செம்பருத்தி சீரியல் நடித்துக் கொண்டிருக்கும் போது ஷபானாவிற்கு திருமணம் நடைபெற்றது. அந்த சீரியல் முடிவடைந்த பிறகு ஷபானா எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்து வந்தார். தற்போது சன் டிவியில் மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் இதுவரைக்கும் நடித்து வந்த கேரக்டரில் இருந்து மாறுபட்டு நடித்து இருக்கிறார். ஷபானாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

விரைவில் ஒளிபரப்பு
சீரியலின் பெயரை பார்த்ததுமே ரசிகர்கள் அப்போ இந்த சீரியலில் ஷபானாவிற்கு தான் ரோல் அதிகமாக இருக்கப் போகிறது என்று கருத்து கூறி வரும் நிலையில், இது ஷபானாவின் துருதுறுப்பு தனத்தை வெளிக்காட்டும் விதமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று பலர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இவருக்கு இவருடைய பாட்டி கொடுக்கும் அலப்பறைகள் அதிகமாக இருக்கிறதே என்று நெட்டிசன்கள் கலாய்க்க, போகப் போகத்தான் தெரியப்போகிறது இந்த சீரியல் ரசிகர்களின் மத்தியில் எந்த அளவிற்கு இடம் பிடிக்கும் என்று அதிலும் குறிப்பாக இந்த சீரியல் இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் கண்ணான கண்ணே சீரியல் முடிவடைந்ததும் ஒளிபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நெகிழ்ச்சியான பதிவு
இந்த நிலையில் ஷபானா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இறுதியாக இதோ எங்களின் புதிய சீரியல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ரொம்ப நாள் வெயிட் பண்ணி ரொம்ப சந்தோசமா இருந்துச்சு போஸ்ட் பண்ணும் போது, இனி உங்களுடைய ஆசிகள் தேவை என்று பதிவிட்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் இந்த திட்டத்தை பற்றி மேலும் சொல்ல நான் காத்திருக்க முடியாது. அடுத்த ப்ரோமோவிற்காக காத்திருப்போம். இதை நீங்கள் அனைவரும் ரசிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த சீரியலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு காட்சியையும் செய்து மகிழ்கின்றனர். நான் ஏற்கனவே இந்த கதாபாத்திரத்தை விரும்புகிறேன். இந்தத் திட்டத்திற்கு உங்கள் ஆசீர்வாதங்களை நான் தேடுகிறேன். உங்கள் அனைவரையும் மகிழ்விக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம் என்று அதில் பதிவிட்டிருக்கிறார். இதற்கு அதிகமான ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications