ஷபானாவின் புது சீரியல்.. டைட்டில் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலையே! இப்படி மிரட்டுறாங்களே?கதை இதுதானா?
செம்பருத்தி சீரியல் பிரபலமான ஷபானா சன் டிவியில் மிஸ்டர் மனைவி என்கிற புது சீரியலில் நடிக்கிறார்.
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஷபானா சன் டிவியில் புதிய சீரியலில் அறிமுகம் ஆகிறார்.
நடிகை ஷபானா மாறுபட்ட கோணத்தில் சன் டிவியில் மிஸ்டர் மனைவி என்கிற சீரியலில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் மிஸ்டர் மனைவி சீரியலின் முதல் பிரமோ இன்று வெளியாகி இருக்கிறது.

செம்பருத்தி பார்வதி
ஜீ தமிழில் டிஆர்பி யில் முதலிடத்தில் பல வருடங்களாக பிடித்து வந்து சீரியல் என்றால் அது செம்பருத்தி சீரியல் ஆகத்தான் இருக்க முடியும். இந்த சீரியலில் முதல் முறையாக தமிழில் அறிமுகமான ஷபானா நடித்திருந்தார். முதல் சீரியலே இவருக்கு ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பையும், பிரபலத்தையும் கொடுத்தது. இந்த சீரியலில் பார்வதியாக ரசிகர்கள் மனதில் இப்ப வரைக்கும் ஜொலித்து வருகிறார். இந்த சீரியல் முடிவடைந்ததும் மீண்டும் ஷபானா எந்த சீரியலில் நடிப்பார் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருந்தனர்.

கேரளா பொண்ணு
ஷபானா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். முதல் முறையாக தமிழ் சீரியலில் அறிமுகமாகி தமிழ்நாட்டு பையனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆரம்பத்தில் செழியன் கேரக்டரில் நடித்த ஆரியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

புதிய சீரியல்
இந்த நிலையை செம்பருத்தி சீரியல் நடித்துக் கொண்டிருக்கும் போது ஷபானாவிற்கு திருமணம் நடைபெற்றது. அந்த சீரியல் முடிவடைந்த பிறகு ஷபானா எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்து வந்தார். தற்போது சன் டிவியில் மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் இதுவரைக்கும் நடித்து வந்த கேரக்டரில் இருந்து மாறுபட்டு நடித்து இருக்கிறார். ஷபானாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

விரைவில் ஒளிபரப்பு
சீரியலின் பெயரை பார்த்ததுமே ரசிகர்கள் அப்போ இந்த சீரியலில் ஷபானாவிற்கு தான் ரோல் அதிகமாக இருக்கப் போகிறது என்று கருத்து கூறி வரும் நிலையில், இது ஷபானாவின் துருதுறுப்பு தனத்தை வெளிக்காட்டும் விதமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று பலர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இவருக்கு இவருடைய பாட்டி கொடுக்கும் அலப்பறைகள் அதிகமாக இருக்கிறதே என்று நெட்டிசன்கள் கலாய்க்க, போகப் போகத்தான் தெரியப்போகிறது இந்த சீரியல் ரசிகர்களின் மத்தியில் எந்த அளவிற்கு இடம் பிடிக்கும் என்று அதிலும் குறிப்பாக இந்த சீரியல் இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் கண்ணான கண்ணே சீரியல் முடிவடைந்ததும் ஒளிபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Vadivelu: இதனால் தான் விவேக் இறப்புக்கு கூட போகல.. கண்கலங்க பேசிய நடிகர் வடிவேலு -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications