நடிகை மீனா என் கண் முன்பு வளர்ந்த பொண்ணு.. ஆனால்! இப்படி பண்ணலாமா? சாந்தி வில்லியம்ஸ் வருத்தம்
சென்னை: நடிகை சாந்தி வில்லியம்ஸ் சமூக வலைத்தளத்தில் நடிகைகளுக்கு நடக்கும் அவலங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் நடிகை மீனா தன் முன்பு வளர்ந்தவர்தான். ஆனால் மீனா சில மாதங்களுக்கு முன்பு பேசியது தன்னை பாதித்தது என்று பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
இணையத்தின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க ஒரு பக்கம் அதனால் பல தொழில்கள் வளர்ச்சி அடைந்தாலும், இன்னொரு பக்கம் அதனால் பலர் பற்றி அவதூறுகளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் கிராமப்புறங்களில் புரணி பேசுவதற்கு டீக்கடையும், அடி குழாயும் முக்கியமான இடங்களாக இருக்கும். ஆனால் இப்போது சமூக வலைத்தளம் தான் புறணி பேசும் இடமாக மாறிக்கொண்டிருக்கிறது.

ஒரு சிலர் பிரபலமாக இருப்பவர்களை பற்றி பேசினால் தான் நாமும் பிரபலமாக முடியும் என்பதற்காகவே பல விஷயங்களை பற்றி பேசி வருகிறார்கள். அது உண்மையா? பொய்யா என்பது வெளியே தெரியாத ரகசியமாக இருக்கிறது. ஆனாலும் போலீஸ் கேஸ் ஆனாலும் பரவாயில்லை என்று சில தைரியமாக தப்பு தப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் பாதிக்கப்படுபவர்கள் ஒரு சிலர்தான் தொடர்ந்து அவர்களோடு போராடுகிறார்கள்.
இது குறித்து சமீபத்தில் கூட நடிகை ராதிகா, மீனா போன்றோர் தங்களுடைய கோபங்களை வெளிகாட்டி இருந்தார்கள். நாங்கள் பிரபலமாக இருக்கிறோம் என்பதற்காக நீங்கள் எங்களுடைய கேரக்டர் பற்றி தவறாக பேசுவதற்கு உரிமை இல்லை. ஒரு நடிகர்கள் தங்களை பத்திரிகையாளர்கள் என்று சொல்லிவிட்டு அடுத்த நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் மற்றும் அவர்கள் குறித்து அவதூறாக பேசிக் கொண்டிருக்கிறார். நாங்கள் நடிக்கிறோம் என்றால் எங்களை பற்றி என்ன வேணாலும் பேசலாமா? என்று ராதிகா கோபத்தில் பேசியிருந்தார்.
மலையாள சினிமா அட்ஜஸ்ட்மென்ட்.. அங்கு நடப்பது இதுதான்! நைட் கதவு தட்டுவாங்க! சாந்தி வில்லியம்ஸ் பகீர்
அதுபோல மீனாவும் தன்னுடைய கணவர் மரணம், அதற்குப் பிறகு அவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று பரவி வந்த வதந்திகளுக்கு அடிக்கடி பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இது பற்றி நடிகை சாந்தி வில்லியம்ஸ் தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார். அதில் அவர் பேசுகையில் நான் மீனாவை குழந்தையாக இருக்கும்போது பார்த்திருக்கிறேன். குழந்தையாக மீனா நான் நடித்த திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
அந்த படத்தில் இருந்து இப்ப வரைக்கும் மீனாவின் கேரக்டர் கொஞ்சம் கூட மாறல. நடிகையாக இருந்தாலும் சரி சாதாரண பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களுக்கு என்று பர்சனல் இருக்கிறது. ஆனால் அதை எதற்காக அடுத்தவர்கள் எட்டிப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் என்று புரியவில்லை. சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்தால் அந்த நடிப்பில் குறை இருந்தால் சொல்லலாம் ஆனால் அவர்களுடைய குடும்பத்தை பற்றி எப்படி பேசலாம்.
ஆனால் மீனா பற்றி பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது நானும் பார்த்தேன். அது எனக்கு வருத்தமாக இருக்கிறது. மீனாவின் வாழ்க்கை என் கண் முன்னாடியே இப்படி ஆகிவிட்டதே என்று நான் அவ்வளவு வருத்தப்படுகிறேன். தினமும் மீனாவிற்காக நான் பிரேயர் பண்ணுகிறேன். மீனா நான் நடித்த பொந்துவேல் என்ற படத்தில் குழந்தையாக நடித்திருந்தா. அந்த படத்தில் மீனா கேரக்டருக்கு நான் தான் சிந்து என்று பெயர் வைத்தேன்.
மீனாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்பதால் அதே பெயரை என்னுடைய மகளுக்கும் வைத்தேன். என்னுடைய மகள் எப்பவும் எனக்கு ஏன்மா இப்படி ஒரு பெயர் வச்சிருக்கீங்க? என்று சண்டைக்கு வருவா. அதற்கு நான் மீனா குழந்தையா இருக்கும்போது நான் வெச்ச பெயர் அதுதான் உனக்கு வெச்சிருக்கேன் என்று சொல்லுவேன். அந்த அளவிற்கு எனக்கு மீனாவை பிடிக்கும் ஆனால் எதற்காக அவள் பற்றி இல்லாததை எல்லாம் சிலர் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை என்று தன்னுடைய கோபத்தை சாந்தி வில்லியம்ஸ் வெளிக்காட்டி இருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications