கமலை பார்த்தால் இன்னும் அந்த பயம் இருக்கு.. கௌதமிடம் அப்படி சொன்னார்! சாந்தி வில்லியம்ஸ் ஓப்பன் அப்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சாந்தி வில்லியம்ஸ் சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் குறித்து பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நடிகர் கமல்ஹாசனை பார்த்தால் எனக்கு இப்போதும் பயமாகத்தான் இருக்கிறது. அவர் என்னை எப்போதும் டி போட்டு தான் பேசுவார் என்று கூறியிருக்கிறார்.

அதோடு பாபநாசம் திரைப்படத்தில் தான் கமலோடு நடிக்கும் போது நடந்த நிகழ்வுகள் குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார்

Actress Shanthi Williams recently shared some things about actor Kamal Haasan

அந்த வகையில் வெள்ளி திரையில் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து பிரபலம் அடைந்த சாந்தி வில்லியம்ஸ் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். அதிலும் மெட்டி ஒலி சீரியலில் ராஜம்மாவாக பலருடைய மனம் கவர்ந்திருந்தார். அதுபோல சாந்தி வில்லியம்ஸின் கணவர் வில்லியம்ஸ் ஒலி பதிவாளர் தான்.

இவர்கள் இருவருக்கும் அதிகமான வயது வித்தியாசத்தில் தான் திருமணம் நடந்திருக்கிறது. சாந்தி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்த ஒரு திரைப்படத்தில் சாந்தி நடித்துக் கொண்டு இருந்தபோது வில்லியம்ஸ் அவரை காதலித்திருக்கிறார். பிறகு நீ என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் நான் இறந்து விடுவேன் என்று மிரட்டி சாந்தியை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருக்கிறார்.

சாந்திக்கு திருமணத்தின் போது 19 வயதுதானாம். ஆனால் அவருடைய கணவருக்கு அப்போதே 46 வயதாம். ஆனாலும் சாந்தியின் அப்பா வற்புறுத்தி சாந்தியை அவருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார். ஆனாலும் திருமணத்திற்கு பிறகு வில்லியம்ஸ்ஸால் சாந்தி பல கஷ்டங்கள் தான் அனுபவித்ததாக சமீபத்தில் பேட்டியில் கண்கலங்க பேசி இருந்தார்.

அதோடு அந்த பேட்டியில் நடிகர் கமல்ஹாசன் குறித்தும் பேசி இருந்தார். அதில் ஆரம்ப காலகட்டத்தில் சாந்தி வில்லியம்ஸ் கமல்ஹாசனிடம் தான் டான்ஸ் கற்றுக் கொண்டாராம். பிறகு ஒரு மலையாள படத்தில் கமலோடு ஜோடியாக டான்ஸும் ஆடி இருக்கிறார். அதனாலயே கமல் என்னை எங்க பார்த்தாலும் மிரட்டுர மாதிரி ஏய்.. என்னடி... என்று சொல்லுவார்.

அதுபோல பாபநாசம் திரைப்படத்தில் நான் நடித்தேன் அப்போது நான் கமல் சாரை பார்த்ததும், வணக்கம் மாஸ்டர் ஜி என்று பயந்தபடியே சொன்னேன். அதற்கு கமல்ஹாசன் நீ என்னடி இப்பவும் பயப்படுற.. உனக்கும் வயசு ஆயிடுச்சு, எனக்கும் வயசாயிடுச்சு ஏன் இன்னும் என்னை பார்த்து பயப்படுற என்று கிண்டல் செய்தார். அதோடு நீ இந்த மாஸ்டர்ஜினு கூப்பிடுறத விட மாட்டியான்னு கேட்டார்.

நான் அதற்கு என்னைக்குமே நீங்க எனக்கு குரு அதனால நான் உங்களை அப்படித்தான் கூப்பிடுவேன்னு சொன்னேன். அதற்கு கமல் கௌதமிடம் பார்த்தியா என்னை பார்த்து எப்படி கூப்பிடுறா என்று கெத்தாக சொன்னார். அதுபோல கமலுக்கும் சாந்தியின் கணவர் வில்லியம்ஸ்க்கும் சில பிரச்சனைகள் இருந்திருக்கிறது. அது பற்றியும் அந்த பேட்டியில் சாந்தி வில்லியம்ஸ் பேசியிருக்கிறார்.

அதில் அவர் பேசுகையில் விஷ்ணு விஜயின் படத்தில் வில்லியம்ஸை நான் தான்நான் தான் போட்டேன் என்று கமல் சொல்வாராம். அதனால ராசலீலா படத்துல நடிக்கும்போது வில்லியம்ஸ்க்கு கமலோடு பிரச்சனை வந்திருக்கிறது. அப்போது வில்லியம்ஸ் கமல் சாரை அடிக்க போயிட்டாராம். அதனால கமலுக்கு வில்லியம்ஸை பிடிக்காது.

நான் வில்லியம்ஸை திருமணம் செய்தது கொஞ்சம் கூட அவருக்கு பிடிக்கல என்று சாந்தி வில்லியம்ஸ் பேசியிருக்கிறார். அதோடு சாந்தி வில்லியம்சும் கமல்ஹாசனும் இருவரும் 11 வயதில் தங்கப்பன் மாஸ்டர் கிட்ட பிராக்டிஸ் போவார்களாம். அப்போ இருவரும் முக்கிட்கலை கண்ணம்மா என்கிற ஒரு படத்தில் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். அந்த படம் ஃபுல்லாவே டான்ஸ் குரூப் பற்றிய கதையை தான். அப்போது கமல் தான் சாந்தி வில்லியம்ஸ்க்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+