ஞாபகம் இருக்கா நடிகை ஷோபனாவை? "தளபதி" படத்தின் சக்சஸுக்கு காரணம் இதுதான்.. சபாஷ் ரஜினி: பிரபலம் செம
சென்னை: தளபதி படத்தின் சக்சஸ்க்கு முக்கிய காரணமே அதனுடைய ஸ்கிரிப்ட்தான் என்றும், எதார்த்தமும், பிரம்மாண்டமும் கலந்த சினிமாவை முதன்முதலில் அப்போது கொண்டுவந்தது மணிரத்னம்தான் சார் என்றும் நடிகை ஷோபனா புகழாரம் சூட்டியிருக்கிறார்.
நடிகை ஷோபனா, தன்னுடைய சினிமா வாழ்க்கையில் அழுமூஞ்சியாக நடித்த ஒரே படம் தளபதி தான் என்பதை அவரே ஒருமுறை சொல்லி உள்ளார். அதாவது, இந்த படத்தின் ஷூட்டிங்கின்போது, மலையாளத்தில் ஒரு படத்தை 20 நாட்களில் எடுத்து முடிக்கவேண்டிய கட்டாயத்தில் மாட்டிக் கொண்டிருந்தாராம். அப்போது ஷோபனாவுக்கு 20 வயதுதான்.

தளபதி படத்திற்காக அவரது கால்ஷீட் முடிந்த பிறகும் படம் பல நாட்கள் இழுபறியாகிவிட்டதாம். இத்ந கோபத்தில் இருந்த ஷோபனா, முதுமலை ஷூட்டிங்கிலிருந்தபோது கதறி அழுதுவிட்டாராம்.
மம்முட்டி: அங்கிருப்பவர்கள் என்ன ஏதென்று கேட்டதற்கு, "என் அம்மா அப்பாவை பார்க்கணும்" என்று அழுதுகொண்டே சொன்னாராம்.. உடனே மம்மூட்டிதான் அவருக்கு அக்கறையாக ஆறுதல் சொல்லி சமாதானம் செய்துள்ளார்.. இப்போது தளபதி 2 மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த படத்தை பற்றின இனிய நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகை ஷோபனா.
Behindwoods TV யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள ஷோபனா, தன்னுடைய திரையுலக வாழ்க்கை முதல் நடனம் வரை ஏகப்பட்ட விஷயங்களை பேசியிருக்கிறார். இதில் தளபதி படத்தை பற்றியும் ரஜினியுடன் நடித்ததை பற்றி பேசும்போது, "பழைய ஜெனரேஷனுக்கு மட்டும்தான் என்னை தெரிகிறது. ஆனால், இப்போதுள்ள ஜெனரேஷனுக்கு என்னை அவ்வளவாக தெரியாது. தளபதி ரீலீஸ் மூலமாக இப்போது எல்லாருக்கும் என்னை தெரியவருவது மகிழ்ச்சி.
எதார்த்தம்: தளபதி படத்தின் சக்சஸ்க்கு முக்கிய காரணமே அதனுடைய ஸ்கிரிப்ட்தான்.. மகாபாரதத்தின் இன்ஸ்பியரேஷன்தான் தளபதி படம். எதாத்தமும், பிரம்மாண்டனமும் கலந்த சினிமாவை முதன்முதலில் அப்போது கொண்டுவந்தது மணிரத்னம்தான் சார். அந்த படத்தில் ஒரு பாட்டு சீனில் நானும், ரஜினி சாரு கீழே விழுந்துவிட்டோம். ரஜினிசாருக்கு கையில் அடிபட்டது, ஆனால், அதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
ஏற்கனவே சிவா படத்தில் நான் ரஜினியுடன் நடித்திருந்தேன். ஆனால், அந்த படத்தில் ரஜினி, நான் எல்லாருமே ஜாலியாக இருந்தோம். அது கமர்ஷியல் சக்ஸஸ் படம் என்பதால், தயாரிப்பாளர், டைரக்டர்களுக்குதான் டென்ஷன் இருக்கும். ஆனால், தளபதி படத்தில் நாங்கள் எல்லாருமே ஓரளவு டென்ஷனுடன்தான் நடித்தோம். காரணம் அது மணி சார் படம் என்பதால், எல்லாருமே பொறுப்புடன் இருக்க வேண்டியதாயிற்று..
மூட்டை தூக்கினேன்: ஒருமுறை தளபதி ஷூட்டிங்குக்காக நாங்கள் அனைவரும் சென்று கொண்டிருந்தோம். பெங்களூர் அருகே சென்றபோது, திடீரென ரஜினி, "ஷோபனா அங்கே பார்த்தியா, அந்த சின்ன கடையில்தான், நான் அன்று மூட்டை தூக்கினேன்" என்று சொல்வார். அவருடைய ஆரம்ப கால வாழ்க்கையை இப்படி மனம் திறந்து பகிர்ந்து கொள்வார் ரஜினி" என்றெல்லாம் இனிய நினைவுகளை சொல்லி உள்ளார் ஷோபனா.












Click it and Unblock the Notifications