1 வருடத்திலேயே பரிதாபமாக இறந்த கணவர்.. 2 வது திருமண நாளில் ஸ்ருதி செய்த செயல்.. குவியும் அட்வைஸ்
சென்னை: நாதஸ்வரம் சீரியல் மூலம் பிரபலம் அடைந்த நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா தன்னுடைய இரண்டாவது திருமண நாளில் மறைந்த தன்னுடைய கணவர் புகைப்படத்தின் முன்பு கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். இந்த வீடியோவை ஸ்ருதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டதும் ரசிகர்கள் அவருக்கு அட்வைஸ் கொடுத்து வருகிறார்கள்.
ஒரு சில நடிகைகளுக்கு தான் ஆரம்பமான சீரியலே பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்து விடுகிறது. அதிலும் சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் நடிக்கும் நடிகர்கள் அதற்குப் பிறகு எத்தனையோ சீரியல்களில் நடித்தாலும் சன் டிவி சீரியல்களின் கேரக்டர் மூலமாக அறியப்படுவது வழக்கமாகவும் இருக்கிறது.

அந்த வகையில் ஒருவர்தான் ஸ்ருதி சண்முகப்பிரியா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியலில் ராகினி கேரக்டர் மூலம் பிரபலமடைந்து இருந்தார். அந்த சீரியல் முடிவடைந்ததும் அதற்குப் பிறகு பாரதி கண்ணம்மா, வாணி ராணி போன்ற பல சீரியலில் நடித்தாலும் இவருக்கு வெளியே பிரபலம் எல்லாம் நாதஸ்வரம் சீரியல் ராகினி என்ற பெயரில் தான் இருக்கிறது. அதுபோல வெளியே சிரித்த முகமாக இருக்கும் பலருடைய வாழ்க்கையும் சோகம் நிறைந்ததாக இருக்கிறது என்பது ஸ்ருதி சண்முகப்பிரியாவின் வாழ்க்கையிலும் நிரூபணம் ஆகி இருக்கிறது.
இவர் பேட்டி மற்றும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவுகளில் அதிகமாக சிரித்த முகமாகவே போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் இவருடைய வாழ்க்கையில் நடந்த சோகம் வேறு யாருக்கும் நடக்கக்கூடாது என்று சொல்லும் வகையில் தான் இருக்கிறது.
ஸ்ருதி சண்முகப்பிரியா, அரவிந்த் என்பவரை திருமணம் செய்து இருந்த நிலையில் திருமணம் ஆன ஒரே ஆண்டிலேயே அரவிந்த் திடீரென மாரடைப்பால் காலமானார். ஸ்ருதி அவருடைய கணவரோடு அதிகமான புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை தொடர்ச்சியாக வெளியிட்டுக் கொண்டிருப்பார். ஆனால் அவருடைய கணவருடைய மறைவு செய்தி ரசிகர்களை பெரிய அளவில் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஆனாலும் இந்த வருத்தத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வந்து கொண்டிருக்கும் ஸ்ருதி தன்னுடைய கணவரோடு ஏற்கனவே எடுத்த பல வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இது குறித்து பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று அவருடைய இரண்டாவது திருமண நாள் அதை முன்னிட்டு உருக்கமான ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது, "முதல் முறையாக நீ இல்லாமல் திருமண நாளை கொண்டாடி வருகிறேன். நீ என் அருகில் இருப்பதாக நான் நினைக்கிறேன். இந்த உலகம் நீ இல்லாத திருமண நாளை கொண்டாடுவதாக கூறினாலும் நீ என் பக்கத்திலேயே இருப்பது போல நான் நினைக்கிறேன். நீ எப்போதுமே என் அருகில் இருப்பாய் என்று முழுமையாக நம்புகிறேன். நான் அழுதால் உனக்கு பிடிக்காது என்பது எனக்கு தெரியும்.

அதனால் தான் நான் அழபோவது இல்லை. இதனால் முழுவதும் உனக்கு பிடித்த விஷயங்களை செய்யப்போகிறேன். நாம் எப்படி எல்லாம் வாழ ஆசைப்பட்டோமோ அப்படி வாழ்ந்து காட்டி உன்னை பெருமைப்படுத்த போகிறேன். உன்னை சந்திக்க காத்திருக்கிறேன் என்று உருக்கமாக பதிவு செய்து இருக்கிறார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கு பலரும் ஸ்ருதியின் திருமண நாளுக்கு வாழ்த்துக்கள் கூறியிருந்தாலும் அதிகமானோர் ஸ்ருதி அவருடைய பெற்றோர் சந்தோஷத்துக்காக அடுத்த வாழ்க்கையில் இணைய வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார்கள். அதுபோல ஸ்ருதி தன்னுடைய திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த நிலையில் அவருடைய கணவரின் மறைவுக்குப் பிறகு மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கி இருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் லட்சுமி என்ற சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications