குழந்தையுடன் ரீல்ஸ் போட்ட நடிகை.. பிக் பாஸ் குயினை கைது செய்த போலீஸ்.. வெளியான அதிர்ச்சி காரணம்
சென்னை: கன்னட பிக் பாஸ் மூலமாக பிரபலமான நடிகை சோனு சீனிவாஸ் கவுடா சமூக வலைதளத்தில் சில தினங்களுக்கு முன்பு தான் ஒரு சிறுமியை தத்தெடுத்துள்ளதாக வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் இது அதிகமாக பிரபலம் அடைந்தது. இந்த நிலையில் அவரை போலீஸ் கைது செய்து இருக்கின்றனர். அதற்கான அதிர்ச்சிகரமான சில விஷயங்களும் வெளியாகி இருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
பெங்களூருவை சேர்ந்த நடிகை சோனு சீனிவாஸ் கவுடா இவருக்கு 26 வயது தான் ஆகிறதாம். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமாக இருந்த நிலையில் இவருக்கு சமூக வலைத்தளத்தில் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவரை இன்ஸ்டாகிராமில் மில்லியனுக்கு அதிகமாக பாலோவர்ஸ் இருக்கின்றனர். அதுபோல youtube சேனலிலும் லட்சக் கணக்கானோர். இவரை சப்ஸ்கிரைப் பண்ணி இருக்கின்றனர்.

அந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் ஒரு சிறுமியை தத்தெடுத்து இருப்பதாக ஒரு வீடியோவில் சோனு பேசியிருக்கிறார். ஏற்கனவே இவர் சில மாதங்களாகவே அந்த சிறுமியோடு அதிகமாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அப்போது ரசிகர்கள் யார் அந்த சிறுமி என்று அவரிடம் கேட்க அதற்கு அவர் நான் இந்த சிறுமியை தத்தெடுத்து இருக்கிறேன். இந்த சிறுமிக்கு எட்டு வயது ஆகிறது என்று கூறி இருக்கிறார் என்று அவருடைய தகவலை சமூக வலைதளத்தில் தெரிவித்து இருக்கிறார்.
இது இவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கவனம் இருந்தது. பலரும் இவருடைய செயலை பாராட்டி வந்தனர். மேலும் இவருடைய ரசிகர்கள் இதை அதிக அளவு ஷேர் செய்ததால் இந்த வீடியோ பலருடைய கவனத்தை பெற்றது. அதோடு ஒரு சிலர் நடிகை சோனு தான் பிரபலமாக வேண்டும் என்பதற்காகத்தான் இந்த குழந்தையை அடிக்கடி வீடியோவில் காட்டிக் கொண்டிருக்கிறார் என்று குற்றம் சாட்டிக் கொண்டிருக்க, அது குழந்தைகள் நல வாரியத்தின் கவனத்தை பெற்றிருக்கிறது.

இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி இருக்கின்றனர். அதில் நடிக்க சோனு சீனிவாஸ் கவுடா, விதியை மீது சிறுமி தத்தெடுத்ததும் அதனை சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியிட்டு பிரபலம் அடைய முயன்றதும் தெரிய வந்திருக்கிறது. பொதுவாக குழந்தையை தத்தெடுக்கும் போது அந்த குழந்தைக்கு தத்தெடுப்பவருக்கும் 25 வயது வித்தியாசம் இருக்க வேண்டும். ஆனால் சோனு சீனிவாஸ் கொடாவிற்கு 27 வயது ஆகின்ற நிலையில் அந்த குழந்தைக்கு எட்டு வயது ஆகிறது.
அதனால் இதுவும் ஒரு விதிமீறல் என்று கூறப்படுகிறது. அது போல குழந்தையை தத்தெடுத்த விஷயத்தையும் இவர் வீடியோவில் பேசி இருப்பதும் தவறுதான். இதை அடுத்து குழந்தைகள் நல வாரியத்தினர் அளித்த புகாரின் பேரில் பெடரஹள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து சோனு சீனிவாஸ் கவுடாவை கடந்த மார்ச் 22ஆம் தேதி கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி நான்கு நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நடிகை சோனு சீனிவாஸ் போலீஸ் காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து அவரை போலீசார் பெங்களூர் கோர்ட்டில் நேற்று ஆச்சரியபபடுத்தி இருக்கிறார்கள். அப்போது விதியை மீறி தத்தெடுத்த வழக்கில் நடிகை சோனு சீனிவாஸ் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டிருக்கிறார். இதுகுறித்து சோனு கொடுத்த விளக்கத்தில் தத்தெடுப்பது இவ்வளவு சிக்கலான விஷயம் இருக்கும் என்று எனக்கு தெரியாது.
அந்தப் பொண்ணு நான் குடியிருக்கும் அடுக்குமாடி கட்டிடத்தில் பூச்சு வேலை செய்யும் தம்பதியினரின் மகள். அப்போது அந்த பொண்ணு என்னிடம் நன்றாகவே பழகி விட்டாள். பிறகு ஊருக்கு போயும் எனக்கு போன் செய்தாள். அதனால் எனக்கு அவளை ரொம்பவே பிடித்து போய்விட்டது. அதனால் தான் நான் அவளை தத்தெடுத்தேன். பிறகு வீடியோக்கள் நான் வெளியிட்டு அதில் வரும் பணத்தை வைத்து அவளுக்கு வருங்காலத்திற்கு செட்டில் பண்ண வேண்டும் என்று நினைத்தேன் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் அந்த குழந்தையின் பெற்றோர் எங்களுடைய குழந்தையை நல்லபடியாக படிக்க வைக்கிறேன் என்று தான் சோனு கூட்டிட்டு போனார். ஆனால் பிறகு தத்தெடுத்து விட்டேன் என்று எதற்காக பேசினார் என்று தெரியவில்லை என்று சோனு தகவலை மறுத்து பேசி இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications