அன்று அப்படி பேசிய ஸ்ரீநிதியா இன்னைக்கு இப்படி? நெகிழ்ச்சியில் நக்ஷத்ரா.. காரணம்? கண்ணுபட போகுது
சென்னை: சீரியல் நடிகை நக்ஷத்திராவிற்கு ஐந்தாவது மாத வளைகாப்பு பங்க்ஷன் நடைபெற்றிருக்கிறது.
நக்ஷத்ராவின் வளைகாப்பு பங்க்ஷனுக்கு அவருடைய தோழியான ஸ்ரீநிதி கலந்து கொண்டிருக்கிறார்.
நக்ஷத்ரா திடீரென்று திருமணம் செய்து கொண்ட நிலையில் அதை பற்றி ஸ்ரீநிதி பல்வேறு விமர்சனங்களை செய்திருந்தார்.

ஸ்ரீநிதியின் குற்றச்சாட்டு
நடிகை ஸ்ரீநிதி கடத்த சில மாதங்களுக்கு முன்பு யாரடி நீ மோகினி சீரியல் நடிகை ஆன நக்ஷத்ராவின் திருமண விவாகரத்தில் பல சர்ச்சைகளை கிளப்பி இருந்தார். வெண்ணிலா கேரக்டரில் நடிகை நக்ஷத்ரா நடித்திருந்தார். அவரோடு அந்த சீரியலில் நடிகை ஸ்ரீநிதி நடித்திருந்தார். இந்த சீரியலில் ஒன்றாக நடித்து பின்பு தோழிகளாக இவர்கள் இருவரும் மாறி இருந்தனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று நக்ஷத்திரா திருமணம் செய்திருந்தார். அவருடைய கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது ஸ்ரீநிதி பல குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். இது அதிகமாக சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டு வந்தது.

திடீர் திருமணம்
நடிகை நக்ஷசத்திரா யாரடி நீ மோகினி சீரியலுக்கு பிறகு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான வள்ளி திருமணம் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த சீரியலில் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நக்ஷத்திராவிற்கு விஸ்வா என்பவருக்கும் திடீர் திருமணம் ஏற்பட்டது. இது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இவர்களின் திடீர் திருமணத்திற்கு காரணம் நக்ஷத்திராவின் தாத்தா உடல்நிலை மோசமாக இருந்ததால்தான் அவசர அவசரமாக இவர்களுடைய திருமணம் நடந்தது. ஆனால் நக்ஷத்திராவின் தோழி ஸ்ரீநிதி நக்ஷத்திரா ஆபத்தில் இருப்பதாகவும் அவரை காப்பாற்றுங்கள் என்றெல்லாம் சமூக வலைத்தளத்தில் வீடியோவை வெளியிட்டு சர்ச்சை கிளப்பி இருந்தார்.

நக்ஷத்திராவின் விளக்கம்
இந்த நிலையில் நக்ஷத்திரா மற்றும் அவருடைய கணவர் விஷ்வா இருவரும் சேர்ந்து பேட்டி ஒன்று கொடுத்திருந்தனர். அதில் ஸ்ரீநிதி கூறியது குறித்து விளக்கம் கொடுத்திருந்தனர். எங்களுடைய திருமணம் அவசர அவசரமாக நடந்தது உண்மைதான். என்னுடைய தாத்தாவுடன் நிலை மோசமாக இருந்தது. என்னுடைய திருமணத்தை இறப்பதற்கு முன் பார்க்க வேண்டும் என்று கேட்டிருந்தார். அதனால் தான் யாரிடமும் எந்த தகவலும் கூறவில்லை. என்னுடைய நண்பர்கள் யாரிடமும் சொல்ல முடியவில்லை. ஆனால் ஸ்ரீநிதி அப்படி பேசியதற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. அவள் என்னை பற்றி எது பேசி இருந்தாலும் அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. என்னுடைய கணவரையும் அவருடைய குடும்பத்தையும் பற்றி பேசியது பேசி இருக்கிறார். இருந்தாலும் என்னுடைய குடும்பத்தினர் அதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று விளக்கம் கொடுத்திருந்தார்.

வளைகாப்பு பங்க்ஷன்
இந்த நிலையில் நக்ஷத்திரா கர்ப்பமாக இருக்கும் நிலையில் பழைய கசப்புகளை எல்லாம் மறந்து தனது தோழியுடன் சேர்ந்து இருக்கிறார். இந்த நிலையில் தனது ஐந்தாவது மாத வளைகாப்பு ஃபங்ஷனுக்கு ஸ்ரீநிதி கலந்து கொண்டிருக்கிறார். அவர் நழுங்கு வைத்து நக்ஷத்திராவோடு எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications