ஸ்ரீவித்யாவை மோசம் செய்த பிரபலம்.. கோழி கூவுது விஜிக்கு இப்படியா நடந்துச்சு? நடிகைகளின் காதல் துயரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர், நடிகைகளுக்குண்டான காதல் இயல்பானது.. எனினும் சிலருக்கு காதல் தோல்வி அமைந்துவிடுகிறது.. இதில், காதல் தோல்வியால் ஏற்படும் சின்ன முடிவுகள், மிகப்பெரிய தாக்குதலை வாழ்க்கையில் ஏற்படுத்தி விடுகிறது என்று மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.. அத்துடன் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவுக்கு ஏற்பட்ட கசப்பான காதல் அனுபவங்கள் குறித்தும் பேட்டி ஒன்றில் விரிவாகவே கூறியிருக்கிறார்.

Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், "தற்கொலை செய்து கொள்ளும் மனோபாவம் உள்ளவரிடம், யாராவது 5 நிமிடம் ஆறுதலாக பேசினால், உடனே மனம் மாறிவிடுவார்கள்..

Television Actress Srividya Kozhi Koovuthu Viji

கமல்ஹாசன், ஸ்ரீவித்யா

அந்தவகையில், கமல்ஹாசன், ஸ்ரீவித்யா இருவரும் ஆரம்பத்திலேயே காதலித்தவர்கள்.. இருவருமே வெளியே தங்கள் காதலை சொன்னார்கள்.. இருவருமே மிக தீவிரமாக காதலித்து, பிறகு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் முடிவெடுத்தனர்..

இந்த காதல் ஓடிக்கொண்டேயிருந்தபோது, மேல்நாட்டு மருமகள் படத்தில் நடித்த வாணி கணபதியை கமல்சார் காதலித்தார்.. பிறகு வாணியை திருமணம் செய்ய போவதாக தன்னுடைய அம்மாவிடம் சொல்லியிருக்கிறார்.. உடனே கமல் சாரின் அம்மா, ஏன் அவசரப்படுகிறே? இப்போதுதானே வளர்ந்து வருகிறாய்.. இன்னும் கொஞ்ச காலம் போகட்டும் என்கிறார்.. எனினும் வாணி கணபதியை கமல்ஹாசன் திருமணம் செய்து கொண்டார்..

ஜார்ஜ்ஜின் காதல்

பின்னர் 13 வருடங்கள் கழித்து, அந்த திருமண பந்தத்தை உடைத்தார்.. இப்படி 2 பேரும் காதலித்து வரும்போது, அதில் திடீரென ஒரு ஏமாற்றம் வந்தால், அந்த ஏமாற்றத்தை யாராக இருந்தாலும் தாங்கிகொள்ள முடியாது.. நாமளாவது வெளியே சென்று நாலு பேரிடம் பேசலாம், ஆறுதல் தேடிக் கொள்ளலாம்.. ஆனால், நடிகைகளால் அப்படி செய்ய முடியாது..

அந்த நேரத்தில் மலையாள டைரக்டர் ஜார்ஜ்ஜின் படங்களில் வித்யா நடித்து கொண்டிருந்தார்.. டைரக்டர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளரும்கூட.. காதல் தோல்வியிலிருந்த நேரத்தில், ஆறுதல் தரக்கூடிய வகையில் ஸ்ரீவித்யாவிடம் பேசினார் ஜார்ஜ்..

ஸ்ரீவித்யாவின் சொத்துக்கள்

நம்ம மேல இவ்வளவு அன்பாகவும், பாசமாகவும் இருக்கிறாரே ஜார்ஜ்? என்று மலைத்து போனார் ஸ்ரீவித்யா.. உடனே மெல்ல மெல்ல ஸ்ரீவித்யாவுக்கும், ஜார்ஜூக்கும் காதல் வளர்ந்தது.. ஆனால், ஸ்ரீவித்யாவின் சொத்துக்களின் மீதுதான் ஜார்ஜுக்கு ஒரே எண்ணமாக இருந்தது.. இறுதியில் ஸ்ரீவித்யாவை திருமணம் செய்ய முடிவெடுத்து, அவரை கிறிஸ்துவராக கன்வெர்ட் ஆக செய்தார்.

முறைப்படி திருமணம் நடந்தபிறகு, ஸ்ரீவித்யாவின் சொத்துக்கள் அனைத்துமே ஜார்ஜ் வசம் சென்றது.. அதற்கு பிறகு, ஜார்ஜிடமும் வித்யா ஏமாந்தார்.. அதுசம்பந்தமான வழக்கும் 13 வருடங்கள் நீதிமன்றத்தில் நடந்தது..

குஷ்பு - சுந்தர் காதல்

ஒருவர் விசனத்திலும், கவலையிலும் இருக்கும்போது, அவரை ஆற்றுப்படுத்த யாராவது வந்தால், கொடி போல உடனே படர்ந்துவிடும்.. ஒரு சின்ன தீக்குச்சிதான் அங்கு தேவைப்படுகிறது.. பல காதல்கள் இப்படித்தான் அரும்பியிருக்கின்றன. சுந்தர்சி - குஷ்பு காதலும் இப்படித்தான்..

முறைமாமன் படத்தில்தான் இருவரும் சந்தித்து கொண்டார்கள்.. குஷ்புவுடன் யார் நடித்தாலும், அந்த ஹீரோ ஓஹோவென வளர்ந்துவிடுவார்.. அந்த அளவுக்கு ராசியானவர் குஷ்பு.. அப்படித்தான், 3 எழுத்து நடிகருடன் குஷ்புக்கு காதல் இருந்தது.. திருமணம் வரையும் சென்றது.. பிறகு இருவருக்குமான உறவு முறிந்துவிட்டது..

அழுதுகொண்டே ஓடிய குஷ்பு

இதை முறைமாமன் பட ஷூட்டிங்கின்போது செய்தியாளர்களிடமே ஓபனாகவே சொல்லிவிட்டார் குஷ்பு.. அப்போது அழுதுகொண்டே சென்ற குஷ்புவை கண்டு பதற்றமடைந்துவிட்டார், அந்த படத்தின் டைரக்டரான சுந்தர் சி.. உடனே குஷ்புவுக்கு ஆறுதல் தந்தார்..

உங்கள் அழகுக்கும், செல்வாக்குக்கும், பெருமைக்கும் இன்று நீங்கள்தான் தமிழகத்தின் கனவுகன்னி.. உங்களை திருமணம் செய்ய ஆயிரம் பேர் வருவார்களே? என்றெல்லாம் ஆறுதல் சொன்னார்.. அந்த நேரத்தில் சுந்தர்சி-யின் வார்த்தைகள் குஷ்புக்கு நிறைவை தந்தது.. அதற்குபிறகுதான் இருவருக்கும் காதல் மலர்ந்தது..

கோழி கூவுது விஜி

கோழி கூவுது விஜிக்கு இப்படித்தான் நடந்தது.. கால் விபத்தில் சிக்கி அடிபட்டு, சிகிச்சையில் கிடந்த நேரம், ஒரு DFT டைரக்டரிடம் காதல் வயப்பட்டார். ஒருகட்டத்தில் அவரையே திருமணம் செய்ய விஜி முயன்றபோதுதான், அந்த டைரக்டர் தனக்கு ஏற்கனவே திருமணமாகி, குழந்தைகள் இருப்பதாகவும், விஜியை திருமணம் செய்ய முடியாது என்றும் சொல்லிவிட்டார்.

இதனால் மனம் நொந்துபோன விஜி தற்கொலை செய்துகொண்டார்.. ஒருவேளை விஜிக்கும் யாராவது அந்த நேரத்தில் ஆறுதலாக பேசியிருந்தால், விஜியின் தற்கொலை எண்ணமும் மாறியிருக்கும், அவரும் இந்நேரம் உயிருடன் இருந்திருப்பார்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+