அம்மாவின் 90 வது பிறந்தநாளில் நெகிழ வைத்த சுஹாசினி.. பக்கத்திலேயே மணிரத்தினம்.. குவியும் வாழ்த்து
சென்னை: நடிகை சுஹாசினி தன்னுடைய அம்மாவின் 90 வது பிறந்த நாளை தன்னுடைய வீட்டில் எளிமையாக கொண்டாடி இருக்கிறார். சில வாரங்களுக்கு முன்புதான் சுஹாசினியின் அப்பா சாருஹாசன் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்தார். இப்போது அவரும் தன்னுடைய மனைவியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.
நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சாருக்ஹாசனுக்கு 96 வயது ஆகும் நிலையில் அவருடைய மனைவிக்கு இன்று 90 வது பிறந்த நாளை அவருடைய மகளான சுஹாசினி மற்றும் அவருடைய கணவர் மணிரத்தினம் இணைந்து கொண்டாடி இருக்கிறார்கள். அப்போது எடுத்த புகைப்படத்தை சுஹாசினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் சாருஹாசன், சந்திரஹாசன், கமல்ஹாசன் மூவருமே அண்ணன் தம்பிகள் தான். மூவரும் சினிமாவில் பல ஆண்டுகளாக தங்களுடைய திறமைகளை காட்டிக்கொண்டிருக்கின்றனர். அதிலும் கமல்ஹாசனை சிறுவயதிலிருந்தே சாருஹாசனும் அவருடைய மனைவியும் தான் வளர்த்து வந்தார்கள் என்று பல பேட்டிகளில் கமல்ஹாசன் கூறி இருக்கிறார்.
கமல்ஹாசன் அவருடைய அம்மாவின் வயிற்றில் இருக்கும் போது தான் சாருஹாசனுக்கு திருமணம் முடிந்ததாம். கமல்ஹாசன் பிறந்த பிறகு சாருஹாசனின் மனைவி கமல்ஹாசனை வளர்த்து வந்ததால் அவரை கமல்ஹாசன் அம்மா என்று தன் கூப்பிடுவாராம். தன்னுடைய அண்ணனை அப்பா என்று கூப்பிடுவாராம். இது பற்றி கமல்ஹாசன் மட்டுமல்ல சாருஹாசனின் மனைவியும் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் சாருஹாசன் வெள்ளித்திரை சின்னத்திரை என்று நடித்து இருந்தாலும் ஒரு வழக்கறிஞராகவும் இருந்திருக்கிறார். ஆரம்பத்தில் கமல்ஹாசன் அதிகமாக நடித்துக் கொண்டிருக்கும் போது அவருடைய திரைப்படங்கள் கால் சீட் ஷெட்யூல் போன்ற விஷயங்களை எல்லாம் சாருஹாசன் தான் கவனித்து இருக்கிறார்.

இழந்த என் சிரிப்பை மீட்டு தந்ததற்கு நன்றி.. அனிதா சம்பத் வெளியிட்ட பதிவு.. குவியும் வாழ்த்துக்கள்
இந்த நிலையில் தான் சில வாரங்களுக்கு முன்பு சாருஹாசன் உடல்நிலை சரியில்லாமல் போக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவரை பக்கத்தில் இருந்து கவனித்துக் கொண்ட சுஹாசினி என்னுடைய அப்பா மருத்துவமனைக்கு விடுமுறைக்கு வருவது போல வந்திருக்கிறார். இங்கேயும் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார் என்று ஒரு பதிவு வெளியிட்டு இருந்தார். இது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications