மணிரத்தினமா இப்படி செய்தார்? அதுவும் கல்யாணத்துக்கு முன்னாடியே! திகைத்துப் போயிட்டாங்களாம் சுஹாசினி
சென்னை: தமிழ் சினிமாவில் அதிகமான காதல் காட்சிகளை வித்தியாசமாக வெளிப்படுத்திய இயக்குனர்களில் ஒருவராக மணிரத்தினம் பல வருடங்களாக தொடர்கிறார்.
அவர் பிரபல நடிகை சுஹாசினியை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் நிஜ வாழ்க்கையில் இயக்குனர் மணிரத்தினம் தன்னிடம் எப்படி காதலை வெளிப்படுத்தினார் என்பது பற்றி சுஹாசினி பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான காட்சி அமைப்புகளும், பிரம்மாண்டங்களும், புதிய சிந்தனைகளும் இருக்கும் இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் மணிரத்தினம் இருந்து வருகிறார். மணிரத்தினம் சினிமாவில் அறிமுகமான காலத்தில் இருந்தே அவருடைய திரைப்படங்களை ரசிகர்களால் எளிமையாக கண்டறிய முடியும்.
காரணம் எளிமையான வசனங்கள், தனித்துவமான காட்சி அமைப்புகள், வித்தியாசமான கதை அம்சம் என இவருடைய தனித்திறமை அவருடைய திரைப்படங்களில் தெரிந்துவிடும். அதற்கு உதாரணமாக பல திரைப்படங்களை கூறலாம். அதில், தளபதி, நாயகன், அஞ்சலி போன்ற பல ஹிட் திரைப்படங்களும் இடம் பிடித்திருக்கிறது.
அந்த காலத்தில் இந்த மாதிரி திரைப்படங்கள் எல்லாம் ஏற்கனவே இருந்த பல திரைப்படங்களின் கதைகளை விடவும் வித்தியாசமான அனுபவங்களை ரசிகர்களுக்கு கொடுத்து இருக்கும். அதுபோல மணிரத்தினத்தின் திரைப்படங்களில் காதல் காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது.
காதலை மையமாகக் கொண்டு அவர் இயக்கிய அலைபாயுதே, ஓ காதல் கண்மணி போன்ற திரைப்படங்கள் எப்போதும் காதலர்களின் ஃபேவரைட் இடம் பிடித்திருக்கிறது. இளைஞர்கள் கொண்டாடும் புதுவகை காதல் அனுபவங்களை இவருடைய திரைப்படங்களில் பலரும் உணர முடியும்.
இப்படிப்பட்ட மணிரத்தினம் நிஜ வாழ்க்கையில் தனது மனைவியை எவ்வளவு காதலித்தார் என்பது பற்றி அவருடைய மனைவி சுஹாசினி பேட்டி ஒன்றில் ஜாலியாக பேசியிருக்கிறார். மணிரத்தினம் திருமணத்திற்கு முன்பு சுஹாசினிக்கு பல இன்ப அதிர்ச்சிகளை கொடுத்துக் கொண்டிருப்பாராம். அது பற்றி சுஹாசினி இப்போது பேசி இருக்கிறார்.
அதில், ஒருமுறை உனக்கு டிரஸ் வாங்கி வைத்திருக்கிறேன் நேரில் வா என்று மணிரத்தினம் சுஹாசினியை கூப்பிட்டாராம். சுஹாசினியும் ரொம்பவே ஆர்வமாக அவர் சொன்ன இடத்திற்கு போயிருக்கிறார். அங்கு போனவருக்கு இன்ப அதிர்ச்சி கிடைத்திருக்கிறது.
ஏனென்றால் அங்கே ஒன்று அல்ல இரண்டு அல்ல பல ஆடைகள், நகைகள் வாங்கி குவித்து வைத்திருந்தாராம். அனைத்தையும் பார்த்த சுஹாசினி திகைத்துப் போய் இருந்திருக்கிறார். அதற்கு காரணம் சுஹாசினிக்காக ஒவ்வொரு பொருள்களையும் மணிரத்தினம் பார்த்து பார்த்து வாங்கி இருந்தாராம். அப்படித்தான் திருமணத்திற்கு முன்பே காதலை வெளிப்படுத்திய மணிரத்தினம் இப்போதும் எனக்கு அடிக்கடி இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார் என்று சுஹாசினி கூறி இருக்கிறார்.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications