இந்த நிலைமைக்கு காரணம் பாக்யராஜ் தான்.. நான் வேலை செய்றது பிடிக்கலைன்னா.? மனம் திறந்த நடிகை சுலக்ஷனா
சென்னை: வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகி தற்போது சின்ன திரையில் நடித்துக் கொண்டிருக்கும் சுலக்ஷனா சமீபத்தில் நடிகர் பாக்கியராஜ் பற்றி சில தகவல்களை பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சுலக்ஷனா முதல்முறையாக நடிகர் பாக்கியராஜ் உடன் தான் தூறல் நின்னுபோச்சு என்ற திரைப்படத்தில் தமிழில் அறிமுகம் ஆகி இருக்கிறார்.
எனக்கு ஒரு குரு என்றால் அது பாக்யராஜ் தான் என்று தன்னுடைய திரை பயணத்தை குறித்து பல தகவல்களை கூறி இருக்கிறார்.

நடிக்க கிடைத்த வாய்ப்பு
சூட்டிங் பார்க்க போன ஒரு மூன்று வயது குழந்தை அங்கே நடிப்பதற்காக தேர்வாகி இருந்த குழந்தை அழுது கொண்டிருந்ததை பார்த்து, அந்தக் குழந்தையை சமாதானப்படுத்தி, நடிக்க சொல்லி கொடுக்க, அங்கிருந்த தயாரிப்பாளரும், இயக்குனரும் வியந்து போய் நீயே இந்த இடத்தில் நடிக்கிறியா? என்று கேட்க, அதற்கு அந்த குழந்தையும் இது என்ன பெரிய வேலையா? நான் நடிக்கிறேன் பாருங்க என்று மூன்று வயதிலேயே நடிக்க தொடங்கியது தான் நடிகை சுலக்ஷனா. இவர் முதல் முதலாக காவியத்தலைவி என்ற படத்தில் குழந்தை கிருஷ்ணாவாக நடிக்க தொடங்கி இருக்கிறார். அப்போது அவருடைய பெயர் பேபி டோலியாக தான் இருந்திருக்கிறது. பிறகு இவருடைய நடிப்பை பார்த்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது.

தூறல் நின்னு போச்சு திரைப்படம்
குழந்தை நட்சத்திரமாகவே நடித்துக் கொண்டிருந்த சுலக்ஷனாவிற்கு பாக்கியராஜ் நடித்த தூறல் நின்னு போச்சு என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழ் கதாநாயகியாக மாறி இருக்கிறார். சுலக்ஷனா தூறல் நின்னு போச்சு திரைப்படத்திற்கு முன்பு இரண்டு வேறு மொழி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அதை பார்த்து தான் பாக்கியராஜ் இவருக்கு இந்த வாய்ப்பு கொடுத்திருந்தாராம். முதல் முதலாக தமிழில் கதாநாயகியாக நடிக்கும் போது இவருக்கு புதுமுகமாகத்தான் இருந்திருக்கிறது. அப்போது எப்படியும் ஒரு செட்யூல் நடித்து முடித்ததும் நம்மளை அனுப்பி விடுவார்கள் என்று நினைத்துதான் தான் சுலக்ஷனா நடித்தாராம் ஆனால் நான் பாஸாகி விட்டேன். முதல் திரைப்படம் நன்றாக ஓடியதால் தான் என்னுடைய கேரியர் மாறியது என்று கூறியிருக்கிறார்.

சொல்லிக் கொடுத்த குரு
நடிகர் பாக்கியராஜ் ஒரு இயக்குனராக பலர் படங்களை இயக்கியிருந்தாலும் நடிகை சுலக்ஷனாவிற்கு குருவாகவே இருந்திருக்கிறார். சுலக்ஷனாவிற்கு பல கரக்க்ஷன்களை சொல்லிக் கொடுத்து இப்படி செய்யலாம் அப்படி செய்யலாம் என்று சொல்லிக் கொடுத்து நடிப்பில் இப்ப வரைக்கும் அவர் தொடர்ந்து கொண்டிருப்பதற்கு காரணம் அன்று பாக்யராஜ் சொல்லிக் கொடுத்தது தான் என்று அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். ஆனால் அந்த திரைப்படத்திற்கு பிறகு தனக்கு அவரோடு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறி இருக்கிறார்.

பாராட்டு கிடைக்கவில்லை
திரைப்படத்தில் நான் நடிக்கும் போது என்னுடைய நடிப்பை பாக்யராஜ் பாராட்டவே இல்லை என்றும் நான் அவர் நினைத்தபடியே அப்படியே நடித்து முடித்து இருக்கிறேன். அதனால் தான் என்னை பாராட்டவில்லை என்று நினைக்கிறேன். ஒருவேளை நான் நடித்தது பிடிக்கவில்லை என்றால் அவர் அப்போவே சொல்லி இருக்கணும்..!? ஆனால் அப்படி சொல்லவில்லை. அப்போ நான் சரியாகத்தான் செய்திருக்கிறேன் என்று கூறி இருக்கிறார். முதல் படமே சுமார் ஒரு வருடங்களுக்கு ஓடி இருக்கிறது. இது மகிழ்ச்சியாக தான் இருந்ததாம். இப்ப வரைக்கும் நடிகை சுலக்ஷனா 450 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறாராம். வெள்ளி திரையில் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் பல சீரியல்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் விஜய் டிவியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு ரசிகர்களின் மத்தியில் அதிகமாக இவர் நடிப்பை பாராட்ட வைத்தது.

தொடரும் நடிப்பு
சன் டிவியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே சீரியலிலும் சுலக்ஷனா நடித்து வந்திருந்தார். அடுத்தடுத்து பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய காலத்தில் திரைப்படங்களில் நடித்து வந்த பல நடிகைகள் இருந்த இடம் தெரியாமல் ஒதுங்கி விட்டனர். ஆனால் இவர் இப்பவும் தன்னுடைய நடிப்பு வாழ்க்கையில் பயணித்துக் கொண்டே இருக்கிறார்.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
வாழ்க்கையை கெடுத்த "வதந்தி”.. இப்போ கஷ்டப்படுறேன்.. கண்ணீருடன் உதவி கேட்ட பாவா லட்சுமணன்! -
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications