பாக்யராஜ் உடன் காதல் கிசு கிசு!? என்னை அடிச்சு, நெருப்புல நிற்க விட்டுட்டாரு.. நடிகை சுலக்ஷனா ஓபன்
சென்னை: நடிகை சுலக்ஷ்னா "தூறல் நின்னு போச்சு" என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இப்போது சினிமா மற்றும் சீரியல்களில் அம்மா மற்றும் பாட்டி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான் "தூறல் நின்னு போச்சு" திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகர் பாக்யராஜ் உடன் வந்த காதல் கிசுகிசு பற்றி விளக்கம் கொடுத்திருக்கிறார்.
நடிகை சுலக்ஷனா ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அதற்கு பிறகு கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போது தான் இவருக்கு தூறல் நின்னு போச்சு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் திரைப்படமே பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்ததும் அதைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களோடு நடித்திருந்தார்.

புகழின் உச்சத்தில் நடித்து கொண்டிருக்கும் போது யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் பிரசாந்திற்கு அம்மாவாகவும் நடித்திருந்தார். சுலக்ஷனாவிற்கு பிரசாந்தை விட ஒரு வயது தான் அதிகமாம். ஆனால் அவர் அவருக்கு அம்மாவாக "வைகாசி பொறந்தாச்சு" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் தான் பிரசாந்த்தின் முதல் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதுபோல சுலக்ஷனா புகழின் உச்சத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது நடிகர் மற்றும் இசை அமைப்பாளரான எம் எஸ் விஸ்வநாதனின் மகனை திருமணம் செய்து கொண்டார். அவர் சில திரைப்படங்களை இயக்கியிருந்த நிலையில் முதலில் மோதலில் ஆரம்பித்து பிறகு இவர்களுக்கும் காதல் வந்திருக்கிறது. திருமணத்திற்கு பிறகு மூன்று குழந்தைகள் பிறந்த நிலையில் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சுலக்ஷனா கணவரை பிரிந்து இருக்கிறார்.
அதற்கு பிறகு தன்னுடைய குழந்தைகளை வளர்ப்பதற்காக மிகவும் சிரமப்பட்டாலும் தான் மீண்டும் நடிக்க வேண்டும் என்று சினிமா பக்கம் வந்திருக்கும் நிலையில் இப்போது சீரியல்களில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். பல சீரியல்களில் அம்மா மற்றும் பாட்டி கேரக்டரில் சலக்ஷனா நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் தூறல் நின்னு போச்சு திரைப்படத்தில் நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவம் குறித்து பேசி இருக்கிறார்.

அதில் தூறல் நின்னு போச்சு திரைப்படத்திற்கான ஆடிஷனில் நான் கலந்து கொள்ளும்போது எனக்கு இந்த திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காது என்று தான் நினைத்திருந்தேன். ஆனாலும் சரி என்ன நடக்கிறது பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன். அப்போது பாக்யராஜ் சார் என்னிடம் உங்களுக்கு சிரிக்க தெரியுமா? என்று கேட்டார். நான் சிரித்து காட்டினேன். பிறகு ஸ்கிரீன் ஸ்டேட்டஸ் எடுத்தார். அதில் நான் செய்தது அவருக்கு பிடித்து விட்டது.
சரி நாளைக்கு பொள்ளாச்சிக்கு ஷூட்டிங் இருக்கு வாங்க என்று சொன்னார். ஆனால் முதல் நாள் சூட்டிங் முடிந்தாலும் நீங்கள் சரியாக பண்ணலன்னு சொன்னா ஆளை மாற்றி விடுவேன் உங்களை அப்படியே பஸ் ஏற்றி வச்சிருவேன் என்று மிரட்டி இருந்தார். ஆனால் பொள்ளாச்சிக்கு போன பிறகு எனக்கு பெரிய அளவில் பயம் ஒன்றும் இல்லை. அதனால் தான் நன்றாக நடித்து விட்டேன். அதற்குப் பிறகு சில நேரங்களில் எனக்கு இயக்குனர் பாக்யராஜ் உடன் சண்டை வரும் . அப்போதெல்லாம் நான் நாளைக்கு சென்னைக்கு போயிடுவேன் என்று சொல்லிக் கொண்டே இருப்பேன்.
ஆனால் அவர் அதை கண்டு கொள்ளவே மாட்டார். அதிலும் சில இடங்களில் எனக்கு அழுகை வரவில்லை என்பதற்காக என்னை அடித்திருக்கிறார். இன்டர்வியூ நேரத்தில் ஓங்கி என்னை அடித்து விடுவார். அப்போது நான் அழுது கொண்டிருப்பேன். அப்படியே நடித்து விடுவார். அதுபோல அந்த படத்தில் ஒரு காட்சியில் நான் கொள்ளிக்கட்டையின் மீது ஏறி நின்று நான் தப்பு பண்ணல... நான் கெட்டுப் போகல என்று ஒரு டயலாக் பேச வேண்டும்.
மற்ற படங்களாக இருந்திருந்தால் டூப்ளிகேட் கொள்ளிக்கட்டை வைத்திருப்பார்கள் ஆனால் இவர் நிஜத்தில் நெருப்பில் என்னை நிற்க வைத்து விட்டதால் சுட்டு கொப்புளம் வந்து விட்டது. அதிலேயே எனது கண்கள் சிவந்து கண்ணீர் வந்துவிட்டது. டயலாக்கும் பேச வேண்டும்... எல்லாம் செய்து முடித்த பிறகு என்னுடைய காலில் கொப்புளம் வந்துவிட்டது என்று தேங்காய் எண்ணெய் போட்டு விட்டார்கள்.

நான் வலியில் இருக்கும் போது பாக்யராஜ் வந்து இப்போ வலிக்கத்தான் செய்யும், கஷ்டப்பட்டா தான் நாம நிலைத்து நிற்க முடியும். நம்முடைய நடிப்பை தத்ரூபமாக கொடுக்க முடியும் என்று சொன்னார். இதையெல்லாம் மறக்க முடியாது. அதுபோல நான் அந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது பாக்யராஜ் உடன் அதிகமாக பேச மாட்டேன். அவரை எனக்கு பிடிக்கவே செய்யாது.
ஆனால் பாக்யராஜும் நானும் காதலிப்பதாக சில கிசுகிசு கிளம்பி வந்தது. அதில் கொஞ்சம் கூட உண்மை கிடையாது. அந்த நேரத்தில் காதல் கத்தரிக்காய் என்று எதுவும் எனக்கு வந்ததும் கிடையாது. அவரும் அந்த நினைப்பில் இருந்தது கிடையாது. ஆனால் எதற்காக இப்படி ஒரு செய்தியை பரப்பினார்கள் என்று எனக்கு இப்ப வரைக்கும் தெரியவில்லை என்று அந்த பேட்டியில் சுலக்ஷனா பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications