சிவகார்த்திகேயனோடு நடிக்க வாய்ப்பு கேட்டேன்.. ஆனால்! வடிவுக்கரசி சொன்ன வார்த்தை! sk செய்த செயல்
சென்னை: நடிகர் சூரி நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் "கருடன்" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட "வடிவுக்கரசி" "சிவகார்த்திகேயன்" குறித்து சொன்ன வார்த்தையை கேட்டு சிவகார்த்திகேயன் பதறி ஓடிப்போய் மேடையில் வடிவுக்கரசியின் கைகளை பிடித்து இருக்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயனின் நண்பரான சூரி விடுதலை திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் சூரியின் நடிப்பில் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் கருடன் திரைப்படத்தில் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இந்த திரைப்படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் வில்லனாகவும், சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கேரக்டரிலும் நடிக்கின்றனர். இந்த படத்துக்கான கதையை பிரபல இயக்குனர் வெற்றி மாறன் எழுத, துறை செந்தில்குமார் இயக்கி வருகிறார். ஆக்சன் திரைப்படமாக உருவாகி இருக்கும் கருடன் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் மலையாள நடிகர் உன்னி முகுந்தனின் பாட்டியாக நடிகை வடிவுக்கரசியும் நடித்திருக்கிறார்.
நடிகை வடிவுக்கரசி அந்த காலத்திலேயே நடிகர் ரஜினியின் பாட்டியாக நடித்து பலரையும் மிரள வைத்தார். அருணாச்சலம் திரைப்படத்தில் வடிவுக்கரசியின் கேரக்டரை அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறந்து விட முடியாது. அப்போவே நான் கில்லி என்று பலரையும் தன்னுடைய பார்வையாலே மிரட்டிய வடிவுக்கரசி இப்போதும் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக, பாட்டியாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் சின்னத்திரையையும் விட்டு வைக்காமல் தொடர்ச்சியாக சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கருடன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட வடிவுக்கரசி தனக்கு இந்த திரைப்பட வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது குறித்து பேசி இருந்தார். அப்போது நான் கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்த திரைப்படத்தின் இயக்குனர் எனக்கு போன் பண்ணி நடிக்க வரீங்களா என்று கேட்க நானும் சரி என்று கிளம்பி போனேன்.
ஆனால் அப்போது யாரெல்லாம் இந்த படத்தில் நடிக்கிறாங்க? என்ன கதை என்பதெல்லாம் எனக்கு தெரியாது. சூட்டிங் ஸ்பாட்டில் நான் சென்றபோதுதான் அங்கு சூரி தான் இந்த திரைப்படத்தின் கதாநாயகன் என்பதே எனக்கு தெரிய வந்தது. சூரி ஏற்கனவே நடித்த விடுதலை திரைப்படத்தை நான் வீட்டில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் போது பார்த்தேன். அந்தப் படத்தில் சூரியுடைய நடிப்பை பார்த்ததும் மிரண்டு போனேன்.
நான் ஏற்கனவே சூரியோடு பல திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். அப்போது எல்லாம் அவரை காமெடி கேரக்டரில் பார்த்து அவர் கதாநாயகனாக நடித்த நடிப்பை பார்த்து வியந்து போனேன். இவருக்குள் இப்படியெல்லாம் திறமை இருக்கிறதா? என்று எனக்கு வியப்பாகவே இருந்தது. பிறகு அவரை சூட்டிங் ஸ்பாட்டில் நான் பார்த்ததும் கட்டிப்பிடித்து பாராட்டினேன்.
அதுபோல நான் பலருடைய திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் சிவகார்த்திகேயனுடன் மட்டும் என்னால் இன்னும் நடிக்க முடியவில்லை. இது குறித்து பலமுறை நான் சிவகார்த்திகேயனிடம் பேசியாச்சி. ஆனால் எப்போதுமே அடுத்த படத்தில் நடித்து விடலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாரே தவிர இன்னமும் வாய்ப்பு தரவில்லை
என்று சொல்ல,
மேடையில் அமர்ந்திருந்த சிவகார்த்திகேயன் ஓடிவந்து வடிவுக்கரசியின் கைகளை பிடித்து அடுத்த படத்தில் கண்டிப்பாக நீங்கள் நடிக்க போறீங்க என்று சொல்லிவிட்டு போனதும் தொடர்ந்து பேசிய வடிவுக்கரசி எனக்கு வேற வலி தெரியல.. நானும் பலமுறை கேட்டுட்டேன். அதனாலதான் இப்படி எல்லாம் வாய்ப்பு கேட்க வேண்டியது இருக்கு.
இன்னமும் நடிக்க வாய்ப்பு தரவில்லை என்றால் நான் அவருடைய ப்ரொடக்ஷனில் ஏதாவது வேலை இருக்குதான்னு பார்த்து அதில் போய் சேர்ந்திட வேண்டியது தான் என்று சிரித்தபடியே வடிவுக்கரசி பேசியிருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன், சூரி போன்றோர் சின்னத்திரையில் சின்ன சின்ன கேரக்டரில் கலந்து கொண்டு இப்போது வெள்ளி திரையில் முன்னணி நடிகர்களாக மாறி இருக்கும் நிலையில் இவர்களுடைய வளர்ச்சியை பார்த்து வடிவுக்கரசி பெருமையோடு பாராட்டி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications