இதை நிறுத்துங்கள்..அவர் என் கணவர் இல்லை..பீட்டர் பால் மறைவு குறித்து நடிகை வனிதா வெளியிட்ட அறிக்கை
சென்னை: நடிகை வனிதா சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
விசுவல் எஃபெக்ட் எடிட்டிங் இயக்குனராக இருந்த பீட்டர் பால் மறைவு குறித்து சமூக வலைத்தளத்தில் தன்னைப் பற்றி வெளியாகும் செய்திகளுக்கு நடிகை வனிதா வார்னிங் கொடுத்திருக்கிறார்.
மறைந்த பீட்டர் பால் என்னுடைய கணவர் இல்லை என்று வனிதா சில விளக்கம் கொடுத்திருக்கிறார்.

சின்னத்திரை வெள்ளி திரையில் நடித்து வரும் நடிகை வனிதா சமூக வலைத்தளத்தில் பலர்க்கும் பரீட்சயமானவர் தான். இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதும் அதை தைரியமாக எதிர்கொள்வதும் வழக்கமாக நடப்பது தான். அந்த மாதிரி தான் தற்போது கூட இவருடைய பெயர் சமூக வலைத்தளத்தில் அதிகமாக அடிபட்டுக் கொண்டிருக்கிறது.
நடிகை வனிதா சில வருடங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரோடு கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்த புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அந்த நேரத்தில் பீட்டர் பாலின் முதல் மனைவி சமூக வலைத்தளத்தில் கண்ணீரோடு வீடியோக்களையும் வெளியிட்டிருந்தார். அதுபோல பீட்டர் பாலில் முதல் மனைவிக்கு ஆதரவாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனும் வனிதா உடன் கருத்து மோதலில் ஈடுபட்டிருந்தார்.
இதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து வரும் தயாரிப்பாளர் ரவீந்தர் பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு ஆதரவாக வனிதாவோடு கருத்து மோதல்களில் ஈடுபட்டு வந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சண்டை ஒரு மாதத்திற்குள் முடிவுக்கு வந்தது. நடிகை வனிதா பீட்டர் பாலை பிரிந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் விளக்கம் கொடுத்து இருந்தார். பிறகு வனிதா தன்னுடைய குழந்தைகளோடு தனியாகத்தான் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் பீட்டர் பால் திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு உடல்நல குறைவால் மரணம் அடைந்திருக்கிறார். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் வனிதாவின் முன்னாள் கணவர் என்றும் வனிதாவின் மூன்றாவது கணவர் பீட்டர் பால் மரணம் அடைந்தார் என்றும் செய்திகள் வலம் வருகிறது. அது குறித்து தற்போது வனிதா அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

அதில், நிறைய பொறுமை மற்றும் சிந்தனைக்கு பிறகு சரி எதிர்வினை ஆற்றுகிறதோ இல்லையோ எல்லாம் மீடியா பத்திரிகை மற்றும் செய்தி சேனல்களையும் நினைவு கூறுவதை தவிர எனக்கு வேறு வழி இல்லை. அனைத்து மரியாதைகளுடன் நான் மறைந்த பீட்டர் பாலை சட்டபூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை. 2020 ஆம் ஆண்டில் நாங்கள் ஒரு சுமுகமான உறவில் இருந்தோம். அது அது அதே ஆண்டு முடிந்தது.
நான் அவருடைய மனைவியும் இல்லை. அவர் என் கணவரும் இல்லை. என் கணவர் இறந்துவிட்டதாக செய்தி பரப்புவதை நிறுத்துங்கள். நான் மிகவும் சட்டபூர்வமாக தனிமையில் இருக்கிறேன். கணவர் இல்லை, எந்த இழப்புக்கும் நான் வருத்தப்படவில்லை. நான் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் வாழ்க்கையை முழுமையாக வாழ்கிறேன். இது ஒரு தாழ்மையான வேண்டுகோள் என்று கூறி இருக்கிறார். இது சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications
