நான் இரண்டாம் தாரமா? கல்யாணத்தை விமர்சித்தவர்களுக்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் பதிலடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த வாரத்தில் நடிகர் சரத்குமாரின் மகளாக வரலட்சுமியின் எங்கேஜ்மென்ட் எளிமையாக நடைபெற்ற பொழுதும் இணையத்தில் பெரிய அளவில் பரபரப்பு ஏற்படுத்தியது. வரலட்சுமி திடீரென்று தன்னுடைய என்கேஜ்மென்ட் புகைப்படங்களை வெளியிட்டதும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருந்தனர்.

வரலட்சுமிக்கு மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கோலாய் சச்தேவ் என்பவரோடு நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது. ஏற்கனவே நிக்கோலாய்க்கு திருமணம் முடித்து 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார் என்று கூறப்பட்டதால் ரசிகர்கள் ஏன் வரலட்சுமி இரண்டாவது தாரமாக திருமணம் செய்து கொண்டார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Actress Varalakshmi Sarathkumar hits back at those who criticized the marriage

அதே நேரத்தில் நிக்கோலாய் குறித்து சில தகவல்களும் வெளியாகி இருந்தது. அதாவது அதிபரான நிக்கோலாய் பல வருடங்களுக்கு முன்பே கவிதா என்பவரை திருமணம் செய்திருந்தார். இந்த தம்பதியினருக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அதோடு கவிதா கலிபோர்னியா நாட்டின் உலக அழகி பட்டத்தையும் பெற்றிருந்தார். அதே நேரத்தில் சில தனிப்பட்ட காரணத்தால் இந்த ஜோடி விவாகரத்து வாங்கி விட்டனர்.

அது போல நிக்கோலாய் மகள் புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் நெட்டிசன்கள் சிலர் ஏற்கனவே திருமணம் ஆகிய 43 வயதானவரை வரலட்சுமி ஏன் இரண்டாவதாக திருமணம் செய்கிறார் என்று கேள்விகள் எழுப்பி கொண்டிருக்கின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வரலட்சுமி திடீர் என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய எங்கேஜ்மென்ட் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

Actress Varalakshmi Sarathkumar hits back at those who criticized the marriage

அதற்கு ஒரு கேப்ஷன் கொடுத்து இருக்கிறார். அதில் மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று நான் எப்போதும் கவலைப்பட மாட்டேன், அதுபோலத்தான் பெண்கள் எப்பவும் மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கிறார். அதோடு உங்களுக்காக வாழுங்கள் நீங்கள் இதை செய்யாதே அதை செய்யாதே என்று சொல்கிறவர்கள் யாரும் உங்கள் வாழ்க்கை முழுவதும் பயணிக்க மாட்டார்கள்.

நீங்கள் மட்டும் தான் உங்கள் வாழ்க்கைக்கு துணையாக நிற்கப் போகிறீர்கள். அதனால் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை தைரியமாக செய்யுங்கள் என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த பதிவு அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது. நடிகை வரலட்சுமி சரத்குமாரின் மகளாக இருந்தாலும் தமிழில் அவர் சிம்பு நடித்த போடா போடி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகம் ஆகி இருந்தார்.

Actress Varalakshmi Sarathkumar hits back at those who criticized the marriage

அதற்குப் பிறகு வரலட்சுமி நடித்த திரைப்படங்களில் போல்டான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் இன்னும் எப்போது என்று உறுதியாக தெரிவிக்கப்படாமல் இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+