"இவா என்ன பத்தினி மாதிரி வந்திருக்கா” நடிகை விசித்ராவை கலங்கடித்த நபர்.. காரணம் அதுதானாம்
சென்னை: 90ஸ் காலகட்டத்தில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்த நடிகை விசித்திரா சமீபத்தில் முடிவடைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார்.
அது மட்டுமல்லாமல் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்து இப்போது சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தன்னுடைய சினிமா வாழ்க்கை மற்றும் சினிமாவால் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து நடிகை விசித்ரா பேட்டியில் மனம் திறந்து பேசி இருக்கிறார் அது பற்றி பார்க்கலாம்.
நடிகை விசித்ரா ஆரம்ப காலகட்டத்தில் கவர்ச்சியான கேரக்டரிலும், காமெடியான கேரக்டர்களிலும் நடித்து பிரபலமடைந்திருந்தார். அதோடு தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருந்தார். நடிப்பு மட்டுமல்லாமல் சில திரைப்படங்களில் ஒரு பாடல்களுக்கும் டான்ஸ் ஆடி இருக்கிறார்.
குறிப்பாக விசித்ரா பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நடிகர் ரஜினிகாந்த் நடித்த முத்து திரைப்படத்தில் செந்திலுக்கு ஜோடியாக இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு இருக்கும். அதுபோல சேரன் பாண்டியன் திரைப்படத்திலும் இவர் நடித்திருப்பார். இந்த நிலையில் தன்னுடைய திருமணத்திற்கு பிறகு சில வருடங்கள் நடிக்காமல் இருந்த நிலையில் இப்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
அது மட்டுமல்லாமல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் நான்காவது சீசனில் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார். இவர் தான் வெற்றி பெறுவார் என்று ரசிகர்கள் ஆரம்பத்தில் இருந்து கூறி வந்தனர். என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த மோசமான நிகழ்வு பற்றி கூறியிருக்கிறார்.
அதாவது நான் 1990 இல் நடிகையாக அறிமுகமான சமயத்தில் வெளியான தலைவாசல் திரைப்படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது. முதல் படமே எனக்கு பெரிய அளவில் பிரபலமும் கிடைத்தது. அந்த படத்தில் நான் நடித்திருந்த மடிப்பு அம்சா என்ற கேரக்டர் எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு நான் என்னுடைய அப்பாவோடு ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட சென்றேன். தலைவாசல் படம் முடிந்த நேரத்தில் எனக்கு வரிசையாக நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது. அதனால் பிஸியாகவே இருந்தேன். அப்படியான நேரத்தில் தான் நான் என்னுடைய அப்பாவோட ஹோட்டலுக்கு சாப்பிட போனேன். அப்போ புடவை கட்டிக்கொண்டு போயிருந்தேன்.
அப்போ ஹோட்டலில் நாங்க சாப்பிட அமர்ந்து இருந்த டேபிளுக்கு இரண்டு டேபிள் தள்ளி ஒரு மூன்று பசங்க அமர்ந்து இருந்தார்கள். அதுல ஒருத்தன் மட்டும் இவ என்னடா பெரிய பத்தினி மாதிரி புடவை கட்டிக்கிட்டு வந்து இருக்கா அப்படின்னு கேட்டார். நானும் அப்பாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். முதலில் அவர் என்ன விதத்துல அப்படி சொன்னார் என்று எனக்கு புரியல. பிறகு தான் எனக்கு தோணுச்சு. தலைவாசல் படத்தில் நான் நடித்த அந்த கதாபாத்திரம் என்னுடைய நிஜ வாழ்க்கையை தாக்கி இருக்கிறது என்று அந்த பேட்டியில் விசித்திரா பேசியிருக்கிறார்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications