அம்மாவின் மரணம்.. இரண்டு மாத கர்ப்பம்.. கதறி அழ கூட முடியல.. கண்கலங்கிய நடிகை விஜயலட்சுமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை விஜயலட்சுமி தன்னுடைய அம்மா மறைவு குறித்து கண்கலங்கியபடி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த பேட்டியில் விஜயலட்சுமி உடன் இரண்டு சகோதரிகளும் உடன் இருக்கின்றனர். அவர்களும் தங்களுடைய அம்மா பற்றி சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.

இயக்குனர் அகத்தியனின் மகளான விஜயலட்சுமி தமிழில் 2007 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த சென்னை 600028 என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமா உலகத்திற்கு அறிமுகமாகியிருந்தார். அதற்குப் பிறகு அஞ்சாதே, அதே நேரம் அதே இடம், சரோஜா, கற்றது களவு போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார். அதுபோல சினிமாவில் தனக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காத நேரத்தில் சின்னத்திரையை நோக்கியும் அடி எடுத்து வைத்திருந்தார்.

Television Vijay TV

சன் டிவியில் ஒளிபரப்பானநாயகி சீரியலில் ஆரம்பத்தில் இவர்தான் நடித்து வந்தார். அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். அதைத்தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கடைசி நாள் வரைக்கும் அந்த நிகழ்ச்சியில் இருந்து இருந்து வெற்றியும் பெற்றிருந்தார்.

விஜயலட்சுமி வெற்றி அந்த நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் காடு கடல் என்று பல இடங்களில் கஷ்டப்பட்டு அங்கிருந்த வலிமை வாய்ந்த ஆண்களோடு போட்டி போட்டு ஒரு கோடி பரிசை விஜி அந்த நேரத்தில் பெற்றது பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டு வந்தது. அந்த நேரத்தில் விஜயலட்சுமி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து வெளியிட்டு வந்தார்

இது குறித்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வந்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே விஜயலட்சுமி பெரோஸ் முகமது என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். தன்னுடைய மகன் குறித்து கூட சர்வைவர் நிகழ்ச்சியில் அதிகமாக விஜயலட்சுமி பேசிக்கொண்டிருந்தார்.

அதுபோல விஜயலட்சுமிக்கு கனி, நிரஞ்சனி என்ற இரண்டு சகோதரிகளும் இருக்கின்றனர். அதில் கனி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வெற்றியும் பெற்றிருந்தார். இப்போதும் தொடர்ச்சியாக சின்னத்திரையில் சில நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக இருந்து வருகிறார். அதுபோல விஜயலட்சுமியின் அப்பாவான இயக்குனர் அகத்தியன் பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

அதிலும் அவர் இயக்கிய காதல் கோட்டை திரைப்படத்தை அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறந்துவிட முடியாது. இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித் மற்றும் தேவயானி நடித்திருப்பார்கள். ஆரம்பத்திலிருந்து கடைசி வரைக்கும் அந்த திரைப்படம் பெரிய அளவில் ரசிகர்களை ஃபீல் பண்ண வைத்த படமாக இருக்கிறது. அதுபோல விஜயலட்சுமி வாழ்க்கையிலும் இப்ப வரைக்கும் எமோஷனலான ஒரு நிகழ்வு மனதை வருத்தி கொண்டிருப்பதாக விஜயலட்சுமி பேட்டியில் பேசியிருக்கிறார்.

அதில் அவர் பேசுகையில் நாங்கள் மூன்று பேரும் பெண் குழந்தைகள் என்பதால் ஆரம்பத்தில் குடும்பத்தினர்கள் முதல் பலர் எங்களை ஒரு மாதிரியாக விமர்சித்தார்கள். ஆனால் அந்த நேரத்தில் என்னுடைய அம்மா எங்களை அதிகமாக சிரமப்பட்டு வளர்த்துக் கொண்டிருந்தார். ஆரம்ப காலகட்டத்தில் எங்களுடைய குடும்பம் நடுத்தர வர்க்க குடும்பமாகத்தான் இருந்தது.

எங்களுக்கு தேவையானதை எல்லாம் அம்மா செய்து வைத்து விட்டு வேலைக்கு போய்விடுவார். அதுபோல நாங்களே ஸ்கூலுக்கு கிளம்பி போய் விடுவோம். அம்மா லீவு நாட்களில் எங்களை நன்றாக கவனித்துக் கொள்வார். ஆரம்பத்தில் நாங்கள் கஷ்டப்பட்டோம் பிறகு ஒரு வழியாக வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் இருந்தோம். அப்போது எனக்கு திருமணமும் முடிந்து விட்டது.

நான் இரண்டு மாத கர்ப்பமாக இருந்தேன் அந்த நேரத்தில் அம்மா ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டாங்க. ஆனால் நான் கர்ப்பமாக இருந்ததால் என்னை யாருமே அழ கூட விடவில்லை. எங்களை தூக்கி வளர்த்து அவ்வளவு பாசமாக கஷ்டத்திலும் பார்த்துக்கொண்ட என்னுடைய அம்மாவின் இறப்பிற்கு என்னால் அழ கூட முடியவில்லை. அது இப்ப நினைச்சாலும் வேதனையாக இருக்கிறது என்று அந்த பேட்டியில் விஜயலட்சுமி கண் கலங்க பேசி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+