Ambika: அம்மா இறந்துட்டாங்க! இனி நான் மட்டும்தான்.. எமோஷனலாக போஸ்ட் போட்ட அம்பிகா! குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: தமிழ் மற்றும் தென்னிந்தியத் திரையுலகின் பிரபல நடிகைகளான அம்பிகா மற்றும் ராதா ஆகியோரின் அம்மா சரசம்மா நாயர் (87 வயது) காலமானார். தன்னுடைய தாயின் மறைவு அம்பிகாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சமயத்தில் அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் உருக்கமான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அம்பிகாவின் உருக்கமான பதிவு
நடிகை அம்பிகா, தனது தாயார் சரசம்மா நாயருடன் கடற்கரையில் எடுத்தப் பழைய புகைப்படம், மற்றும் தன்னுடைய அம்மாவின் பிறந்தநாளில் புகைப்படங்களோடு எம்ஜிஆர், ஜெயலலிதாவை சந்தித்த புகைப்படங்கள் போன்றவற்றை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில் அவர் எழுதியுள்ள கேப்ஷன் படிப்பவர்களை நெகிழச் செய்துள்ளது:
"எங்கள் பயணத்தைத் தொடங்கினோம் - நான் மட்டும். அம்மா இன்று முதல் அவர் கடவுள் மற்றும் அப்பாவின் உடன் இருப்பார்" என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த உணர்ச்சிப்பூர்வமான பதிவுக்குக் கீழே, திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தும், அவருக்கு ஆறுதல் கூறியும் வருகின்றனர்.
கலைக்குடும்பத்தின் ஆளுமை
அம்பிகா மற்றும் ராதா ஆகிய இரண்டு சிறந்த நடிகைகளின் அம்மா சரசம்மா நாயர், கேரளத்தை பூர்வீகமாகக் கொண்டவர். தான் ஒரு அரசியல் ஆளுமையாக பொறுப்பு வகித்தாலும், தனது மகள்கள் கலைத்துறையில் சாதிக்க தடையில்லாமல் உதவினார்.
சரசம்மாவிற்கு சிறு வயதில் இருந்து அரசியலில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அவர் 2014-ஆம் ஆண்டு வரை கேரள மஹிளா காங்கிரஸின் தலைவராக பதவி வகித்துள்ளார்.
அம்பிகா மற்றும் ராதா பயணம்
அம்பிகா மற்றும் ராதா இருவரும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் 80 மற்றும் 90-களில் முன்னணி நாயகிகளாகக் கோலோச்சினர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் புகழ் பெற்றவர் அம்பிகா. தற்போது சினிமா மற்றும் சின்னத்திரை தொடர்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் உள்ளார்.
அதேபோல் 'அலைகள் ஓய்வதில்லை' மூலம் அறிமுகமாகி பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். ராதாவுக்கு விஜய் நாயர் என்பவருடன் திருமணம் முடிந்து, இரண்டு மகள்கள் கார்த்திகா நாயர், துளசி நாயர் - இருவரும் நடிகைகள் தான். மற்றும் ஒரு மகன் உள்ளனர். குடும்பத்திற்காகச் சினிமாவிலிருந்து விலகியிருந்தவர், தற்போது மீண்டும் பங்கேற்று வருகிறார்.
சரசம்மா நாயரின் இறுதி சடங்குகள், அவரது சொந்த ஊரான திருவனந்தபுரம் அருகே உள்ள கல்லாராவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் துயரச் சூழலில் அம்பிகா மற்றும் ராதா குடும்பத்தினருக்குத் திரையுலக பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications