திரிஷா, ஐஸ்வர்யா ராய்க்கு டஃப் கொடுக்கும் "சீரியல் நடிகைகள்”.. என்னம்மா யோசிச்சு இருக்காங்கப்பா
சென்னை: சின்னத்திரை நடிகைகளான ஸ்வேதா சுப்பிரமணியன் மற்றும் அக்ஷயா இவர்கள் இருவரும் தற்போது எடுத்த போட்டோஷூட் தான் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தற்போது வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் கெட்டப்பில் இவர்கள் இருவரும் அட்ராசிட்டி செய்திருக்கிறார்கள்.
சின்னத்திரையிலும் வெள்ளி திரைக்கு ஈக்குவலாக எங்களாலும் செய்ய முடியும் என்று இவர்கள் எடுத்திருக்கும் முயற்சிக்கு ரசிகர்களின் மத்தியில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

சின்னத்திரை நடிகைகளின் முயற்சி
தற்போது வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் தாக்கம் ரசிகர்களை மட்டுமல்லாமல் திரை பிரபலங்களையும் அதிகமாக பாதித்திருக்கிறது போல. அதனால் தான் அந்த திரைப்படங்களில் நடித்த நடிகைகளின் கெட்டப்புகளில் சில நடிகைகள் போட்டோஷூட் நடத்தி சமூக வலைதளத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
வெள்ளித்திரையில் மட்டுமல்ல சின்னத்திரையில் இருப்பவர்களும் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று இவர்கள் எடுத்திருக்கும் முயற்சிக்கு ஒரு சில நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

மானாட மயிலாட டைட்டில் வின்னர்
சின்னத்திரை நடிகையான ஸ்வேதா சுப்பிரமணியன் விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலின் மூலமாக பலருக்கும் பரீட்சையமானவர். இந்த சீரியலில் இவருடைய கேரக்டர் சிறியதாக இருந்தாலும் இவர் மானாட மயிலாட நிகழ்ச்சியில் டைட்டில் ஜெயித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பல டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டிருக்கிறார். டான்ஸ் மட்டுமல்ல தனக்கு நடிக்கவும் தெரியும் என ஒரு சில சீரியல்களிலும் இவர் நடித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். கனா காணும் காலங்கள் சீரியலின் மூலமாக தான் இவர் சீரியலுக்கு அறிமுகம் ஆனார்.

ஜீ தமிழ் சீரியல் நடிகை
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி சீரியலின் மூலமாக அறிமுகமானவர்தான் நடிகை அக்ஷயா. இவரும் தான் உடல் எடையில் அதிகமாக இருந்தாலும் அதைப்பற்றி எப்போதும் கண்டு கொண்டதே கிடையாது. இதைப்பற்றி சிலர் நக்கலாக கலாய்த்தாலும் நெகட்டிவ் கருத்துக்களை வெளியிட்டாலும் கண்டுகொள்ளாமல் தன்னுடைய திறமையின் மூலமாக ஜீ தமிழ் நிகழ்ச்சியில் டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் தற்போது அக்ஷயா மற்றும் ஸ்வேதா சுப்பிரமணியன் இவர்கள் இருவரும் சேர்ந்து போட்டோ சூட் எடுத்து இருக்கின்றனர்.

புது முயற்சி
போட்டோஷூட் மோகம் பல நடிகைகளை ஆட்டி படைத்து வருகிறது. ஆனால் நாங்கள் எல்லாம் அப்படி இல்லை என்று இவர்கள் இருவரும் எடுத்திருக்கும் வேற லெவல் போட்டோஷூட் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி தேவி மற்றும் குந்தவை கேரக்டரில் இவர்கள் இருவரும் ஆடை முதல் அணிகலன்கள் வரை அனைத்தையும் பர்ஃபெக்டாக அணிந்து போட்டோஷூட் எடுத்து இருக்கின்றனர். அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இவர்கள் பதிவிட்டதும் இதற்கு லைக்குகள் அதிகரித்து வருகிறது. அது மட்டுமல்லாமல் சில நெட்டிசன்கள் இந்த புகைப்படங்களை வைத்து கலாய்த்தும் வருகிறார்கள்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications