Sembaruthi Serial: ஆதி பார்வதி ஜோடி வீட்டுக்குள்ளே வந்தாச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில் ஆதி, பார்வதியை அகிலாண்டேஸ்வரி அம்மா வீட்டை விட்டு வெளியில் போங்கன்னு சொல்லாம விட்டுட்டாங்க. அதனால், ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியா வீட்டில் சந்தோஷமா இருக்காங்க.

ரசிகர்களுக்கு இது தினம் தினம் பார்க்க சந்தோஷமா இருக்கு. தீபாவளியா கொண்டாடி மகிழ்ச்சியில் திளைக்கறாங்க. ஜோடி நல்ல ஜோடின்னு ரசிச்சு பார்த்துக்கொண்டு இருக்கும் மக்களை திசை திருப்பவே முடியலியேப்பா...!

ஆதி, பார்வதிக்கு கல்யாணம் ஆகிருச்சுன்னு அகிலாண்டேஸ்வரிக்கு தெரிந்தால் என்னாகுமோ.. ஆதி பார்வதியை சேர்த்துக்குவாங்களோ மட்டாங்களோன்னு பீதியில் இருந்தவங்களுக்கு விடை கிடைச்சுருச்சு. ரெண்டு பெரும் சேர்ந்து வாழ ஆரம்பிச்சாச்சு.

பார்வதி அப்பா

பார்வதி அப்பா

அப்பாவைப் பார்த்துட்டு போலாம்னு வீட்டுக்கு வர்றா பார்வதி. அப்பா பேச மாட்டேங்கறார். அப்பா.. சாப்டீங்களான்னுகேட்டாலும் பதில் இல்லை. என் கூட பேச மாட்டீங்களான்னு கேட்டாலும் பதில் இல்லை. அப்பா.. இத்தனை நாள் அக்கா கூட பேசிக்கிட்டுத்தானே இருந்தீங்க. என்னப்பா திடீர்னு பேச மாட்டேங்கறீங்கன்னு கணேசன் கேட்கிறான்.

எனக்கு மகளா

எனக்கு மகளா

பேச மாட்டேண்டா..பார்வதி இத்தனை நாள் எனக்கு மகளா இருந்தா. பெரிய தம்பி கூட கல்யாணம் நடந்தும் தாலியை மறைச்சு வச்சு வாழ்ந்துகிட்டு இருந்தது எனக்கு கஷ்டமா பரிதவிப்பா இருந்துச்சு. அவளுக்கு ஆதரவா இருக்கணும்னு ஒரு அப்பாவா ஆதரவா இருந்தேன். இப்போ அவ பெரிய தம்பி பொண்டாட்டியா வீட்டுக்குள்ளே போயிட்டா.

கம்பீரமா இருந்த அம்மா

கம்பீரமா இருந்த அம்மா

நான் பார்த்ததில் இருந்து கம்பீரமா இருந்த அம்மா இன்னிக்கு ரூமுக்குள்ளே முடங்கிக் கிடக்கறாங்க. அதுக்கு பார்வதிதான் காரணம். என்னால் அம்மாவை இப்படி பார்க்க முடியலை. அவங்க திரும்பவும் எப்போ கம்பீரமா வெளியில் வருவங்கன்னு காத்து இருக்கேன். அவங்க இன்னும் உன் அக்காவை மருமகளா ஏத்துக்கலை. அதனால நானும் அவளை மகளா ஏத்துக்க மாட்டேன்னு சொல்றார்.

மாமா அப்பா கோவமா

மாமா அப்பா கோவமா

வீட்டுக்கு வந்த பார்வதி அழுதுகிட்டு உட்கார்ந்து இருக்கா. என்ன பார்வதி எதுக்கு அழுதேன்னு ஆதி கேட்க, ஒன்னும் இல்லை மாமான்னு மழுப்பறா.. இதோ பாரு நம்ம ரெண்டு பேருக்குள்ளேயும் எந்த ஒளிவு மறைவும் இருக்க கூடாதுன்னு நாம் பேசிக்கிட்டோம் இல்லே.. இப்போ நீ எதுக்கு மறைக்கிறேன்னு கேட்கறான். இல்லை மாமா சொல்லிடறேன்னு அவ அப்பா பேசினதை சொல்ல, அவர் விசுவாசம் அப்படி. அவர் அப்படி இல்லேன்னாதான் நாம கவலைப்படணும்னு ஒரே வரியில் சொல்லிட்டான். இனி உனக்கு நான்.. எனக்கு நீ.. நம்ம ரெண்டு பேரும்தான் உலகம் சரியான்னு கேட்கறேன். இப்படி ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் 9 மணி ஸ்லாட்டில் முதலிடத்தில் இருக்கு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+