விஜய் டிவியில் நெகட்டிவ் பாப்புலாரிட்டி பிரபலங்கள்.. பச்சை குத்திக்கொண்டு ஃபேமஸ் ஆன அகோரி கலையரசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாட்டர்மெலன் ஸ்டார், பிரவீன் காந்தி, அகோரி கலையரசன், பலூன் அக்கா போன்றோர்களை பிக்பாஸ் வீட்டில் செலக்ட் செய்துள்ளார்கள்.. சோஷியல் மீடியாக்களில் ரீல்ஸ்களில் அதுவும் நெகட்டிவ்வாக பிரபலமானவர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விளையாடுவதற்காக கொண்டுவந்துள்ளார்கள்.. இந்த நிகழ்ச்சி எப்படி இருக்க போகிறதோ தெரியவில்லை" என்று பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த தன்னுடைய கருத்தை சொல்லி உள்ளார் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு.

AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "முன்பெல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் இருந்தனர்..

Television Aghori Kalaiyarasan Vijay TV

கவின், ஓவியா, ஆரவ், சேரன், கஞ்சா கருப்பு, சினேகன், சரவணன் போன்ற பிரபலங்கள் வந்திருந்தனர்.. இவர்கள் ஏற்கனவே பிரபலமாக இருந்ததால், இவர்கள் அந்த 100 நாளும் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ன செய்ய போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பும், ஆர்வமும் மக்களிடம் இருந்தது.

நெகட்டிவ் ரீல்ஸ் பாப்புலாரிட்டி

ஆனால் கடந்த 2 பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி சரிந்துவிட்டது. மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, மொழிகளில் பிக்பாஸ் ஹிட்டடித்து வருகிறது. ஆனால் தமிழில் அப்படியில்லை.. கமல்ஹாசன் இருந்தவரை, பிக்பாஸ் நிகழ்ச்சியை Grip ஆக கொண்டு சென்றார்..

இதற்கு காரணம் அவரது அனுபவம்தான்.. அவரது காஸ்ட்யூம்கூட மக்களை கவனிக்க வைத்திருந்தன.. போட்டியாளரை கண்டிப்பதானாலும், பிரம்பு எடுத்து அடிக்காத அளவுக்கு வார்த்தைகளிலேயே சுளீர் சுளீர் என்று கண்டித்திருந்தார்..

சிரிப்பு, காமெடி, கண்டிப்புடன் ஜனரஞ்சகமாக நிகழ்ச்சியை நடத்தி சென்றார்.. விஜய் சேதுபதியும் நன்றாகத்தான் நடத்துகிறார்.. ஆனால் கடந்த முறையே, திறமையான போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கவில்லை..

விஜய் சேதுபதி சொன்னாரே

இதுசம்பந்தமான புகார்கள் எழுந்தபோது, "அடுத்த முறை சீசனில் போட்டியாளர்கள் தேர்வு நடைபெறும்போது, நானே அதில் நேரடியாக தலையிடுவேன், அதில் என்னுடைய பங்களிப்பும் இருக்கும்" என்று விஜய் சேதுபதி சொல்லியிருந்தார். இப்போது அவர் தலையிட்டுதான் போட்டியாளர்கள் வந்திருக்கிறார்கள் போலும்.

வாட்டர்மெலன் ஸ்டார், பிரவீன் காந்தி, அகோரி கலையரசன், பலூன் அக்கா போன்றோரை செலக்ட் செய்துள்ளார்கள்.. ரீல்ஸ்களில் நெகட்டிவ்வாக பிரபலமானவர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் கொண்டுவந்துள்ளார்கள்..

ஸ்கிரிப்டட் நிகழ்ச்சி

பிக்பாஸ் 1 சீசனிலிருந்தே, அது ஒரு ஸ்கிரிப்டட் நிகழ்ச்சி என்றுதான் சொல்கிறார்கள்.. வீடுகளில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் பெண்களிடம், இது ஸ்கிரிப்டட் என்று சொன்னாலும் அவர்கள் நம்புவதில்லை..

ஆனால், ஆக்ரோஷமாக சண்டை போடுவது, ஜாலியாக சண்டை போடுவது, காமெடி செய்யணும் என்று முன்கூட்டியே சொல்லிவிட்டார்கள்.. இதை அவரவர் அந்த வீட்டில் சூழ்நிலைக்கேற்றவாறு செய்துவிடுவார்கள்.. இதைத்தான் ஸ்கிரிப்டட் என்கிறார்கள்.. அப்படி பார்க்கும்போது, இந்த முறை எல்லாமே ஸ்கிரிப்டட் போலதான் இருக்கும் என்று தோன்றுகிறது.

அகோரி கலையரசன்

அகோரி கலையரசன் ஏற்கனவே திருமணமானவர்.. தன்னுடைய நெஞ்சில் மனைவியின் பெயரை பச்சை குத்திக்கொண்டவர்.. திடீரென முடியெல்லாம் வளர்த்து கொண்டு, அகோரியாக மாறிவிட்டார்.. காசிக்கு போய் பிணத்தை தின்றேன் என்று சொன்ன கலையரசனைதான், இப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் கொண்டுவந்துள்ளார்கள்..

பிக்பாஸ் என்பது ரியாலிட்டி ஷோ.. வீட்டில் எல்லா பக்கமும் கேமராக்கள் இருப்பது எல்லாருக்குமே தெரிந்தாலும், அது தெரியாத அளவுக்கு அந்த ஷோவை கொண்டு செல்வதுதான், அந்த நிகழ்ச்சியின் பிளஸ் பாயிண்ட்.

குழந்தைகள் பாதிப்பு

ஆனால், இப்போது, இதுபோன்ற நபர்களை எல்லாம் பிடித்து பிக்பாஸ் வீட்டில் விட்டுவிடவும், காலையில் எழுந்ததிலிருந்தே ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.. இந்த சண்டையால்தான் நிகழ்ச்சியும் சக்ஸஸ் ஆகிவிடுகிறது. ஆனால் நிகழ்ச்சிக்கென்று ஒரு குவாலிட்டி உள்ளது.. அதை சரியாக கடைப்பிடிக்கவேண்டும்.. அந்த ஸ்டாண்டர்டிலிருந்து வெளியே செல்வது வருத்தமான விஷயம்.

பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சண்டைகள், பேச்சுக்களை பார்த்தால், உண்மையிலேயே குழந்தைகள் மனரீதியான பாதிக்கப்படுவார்கள்.. இனி இந்த நிகழ்ச்சி எப்படி நடக்க போகிறது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+