இங்க பாருங்க பிக்பாஸ் வீட்டிற்குள் அரசியல் பிரபலங்கள்! சண்டை பயங்கரம்! அலப்பறை ஏஐ
சென்னை: தற்போது இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் தொழில்நுட்பம் என்றால் அது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தான். இந்த 'ஏஐ' மூலமாக சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் ஒன்றாக இருப்பதுபோலவும், மாறுபட்ட தோற்றங்களில் இருப்பதுபோலவும் புகைப்படங்கள் உருவாக்கப்பட்டுப் பகிரப்பட்டு வருகின்றன. அந்தப் பட்டியலில் இப்போது, அரசியல் பிரபலங்களை வைத்து உருவாக்கப்பட்ட பிக்பாஸ் தமிழ் சீசன் 10 போட்டியாளர்கள் புகைப்படங்கள் இணையத்தில் தீயாகப பரவி வருகின்றன.
இந்தச் சுவாரசியமான ஏஐ புகைப்படங்கள், பிக்பாஸ் வீட்டில் அரசியல் பிரமுகர்கள் உண்மையிலேயே போட்டியாளர்களாக பங்கேற்றால் எப்படி இருக்கும் என்று கற்பனைக்குத் தீனி போட்டுள்ளது. அந்த புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், அவற்றை வேடிக்கையாகவும், நகைச்சுவையாகவும் விமர்சித்து வருகின்றனர்.

விமர்சனம்
ஒரு புகைப்படத்தில், முதலமைச்சர் மு க ஸ்டாலின், தனக்கு கொடுக்கப்பட்ட கிச்சன் டியூட்டியிலும் பட்ஜெட் போடும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதுவெல்லாம் தேவை என்று சொல்வது போலவும் அந்த இடத்தில் நடிகரும் அரசியல் பிரபலமும் ஆன விஜய் காய்கறி கட் பண்ணி கொண்டிருப்பது போலவும் இருக்கிறது அதே போட்டோவில் இவர்கள் செய்யும் வேலைகளை எல்லாம் நயன்தாரா கைகட்டி ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பது போலவும் நிற்கிறார்.
"நாட்டை ஆண்ட வரலாறு உள்ளவர்களுக்கும், இந்த பிக் பாஸ் வீட்டில் பாத்திரம் தேய்க்கும் சவால் இருக்கிறது! அவர் பேச ஆரம்பித்தால் பிக்பாஸ் வீடே அனல் பறக்கும் போல! என்று ரசிகர்கள் கமெண்ட் போட்டு இருக்கிறார்கள். மற்றொரு படத்திலோ, மு க ஸ்டாலின் பாத்திரம் தேய்ப்பது போலவும் அப்போது சீமான் அவரிடம் கத்தி சண்டை போடுவது போலவும் இருக்கிறது. இதையெல்லாம் தர்பூசணி பழத்தை சாப்பிட்டபடியே விஜய் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பது போலவும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

அடுத்த போட்டோவில் விஜய் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் கத்தி சண்டை போட்டுக் கொண்டிருப்பது போலவும், அவர்கள் இருவரையும் கமல்ஹாசன் அமைதியாக இருங்க என்று அதட்டுவது போலவும் இருக்கிறது. இவர்கள் சத்தம் போடுவதை காது கொடுத்து கேட்க முடியாமல் அந்த இடத்தில் திரிஷா காதை போற்றிக் கொண்டிருப்பது போலவும் அந்த புகைப்படத்தில் இருக்கிறது.
அதைத்தொடர்ந்து இன்னொரு போட்டோவில் ஆக்டிவிட்டி ஏரியாவில் திரிஷா மற்றும் சீமான் இருவரும் ஒரு பக்கமாக கயிறு இழுப்பது போலவும் அவர்களுக்கு சமந்தா மோட்டிவேஷன் செய்வது போலவும், இந்த விளையாட்டை மு க ஸ்டாலின் ரசிப்பது போலவும் இருக்கிறது. இது உண்மையிலேயே பிக் பாஸ் வீட்டிற்குள் நடக்கும் டாஸ்க் தானா? என்று யோசிக்க வைக்க அந்த புகைப்படம் தத்துரூபமாகவும் இருக்கிறது.
இந்த ஏஐ புகைப்படங்கள் மூலம், அரசியல் பிரமுகர்கள் என்ற அந்தஸ்தைக் களையிட்டு, அவர்களை சாதாரண போட்டியாளராகக் கலாய்க்கும் இந்த நிகழ்வு ரசிகர்களுக்குப் பெரிதும் பிடித்திருக்கிறது.

ஏஐ- ஆல் நன்மைகள்
ஏஐ தொழில்நுட்பம் வேடிக்கைக்கும், கேளிக்கைக்கும் மட்டுமல்லாமல், பல்வேறு விஷயங்களுக்குப் பயன்படுகிறது. ஆனால், அதனால் சமூகத்தில் பல விளைவுகளும் ஏற்படுகின்றன. நினைத்த உருவத்தை, நினைத்த சூழலை மிகக் குறைந்த நேரத்தில் உருவாக்க முடியும். சினிமா, விளம்பரங்கள் மற்றும் கலைத்துறையில் புதிய யோசனைகளை உடனடியாக உருவாக்க ஏஐ உதவுகிறது. பழங்காலப் புராணக் கதைகளின் பாத்திரங்களை அல்லது வரலாற்று நிகழ்வுகளை மிகத் துல்லியமாக மாணவர்களுக்குப் புரியவைக்க ஏஐ புகைப்படங்கள் பயன்படலாம்.

பிரச்சினைகள்
பிரபலங்கள் அல்லது அரசியல் தலைவர்கள் சொல்லாததையோ செய்யாததையோ செய்ததுபோல மிகவும் துல்லியமான போலிப் படங்கள் (டீப்ஃபேக்ஸ்) உருவாக்கப்பட்டு, பொதுமக்களிடையே தவறான தகவல்களை பரப்பப் பயன்படுத்தலாம். இது சமூகத்தில் பெரிய பதட்டத்தை உருவாக்கும். ஒருவரின் புகைப்படத்தை அல்லது உருவத்தை அவரது சம்மதம் இல்லாமல் பயன்படுத்துவதும், ஒருவர் உருவாக்கிய கலைப்படைப்பை ஏஐ மூலம் திருடி பயன்படுத்துவதும் சட்டச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
எது உண்மை, எது போலி என்று வேறுபடுத்திப் பார்ப்பது சிரமமாகும் போது, மக்கள் ஊடகத்தின் மீது வைத்திருக்கும் நம்பகத்தன்மை குறையும். முடிவாக, ஏஐ தொழில்நுட்பம் நகைச்சுவைக்கும், கலைக்கும் உதவினாலும், அரசியல் பிரபலங்கள் போன்ற பொறுப்புள்ள நபர்களைப் பயன்படுத்தும்போது, அதனால் உருவாகக்கூடிய சமூகச் சிக்கல்கள் குறித்து அனைவரும் விழிப்புடன் இருப்பது அவசியம். இல்லையெனில், இந்த 'பிக்பாஸ்' போல பல நாடகங்கள் உண்மையில் நடந்துவிடும் அபாயம் உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications