சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவிற்க்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. உருக்கமான பதிவு! குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பாடகர் அஜய் கிருஷ்ணா தற்போது தனது குடும்பத்தில் நடந்த ஒரு மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் உணர்ச்சிகரமாக பகிர்ந்திருக்கிறார்.

அஜய் கிருஷ்ணாவின் பதிவு
அவர் வெளியிட்ட பதிவில் அவர் கூறியிருப்பது, "Our family just got a little bigger, a little louder, and a lot more beautiful. Blessed with a baby... Thank you God for this beautiful gift." இந்த வரிகள் தான் தற்போது ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. குடும்பம் மேலும் அழகாகி விட்டது, இந்த வரம் கிடைத்ததற்கு கடவுளுக்கு நன்றி என்கிற அந்த உணர்ச்சி நிறைந்த வார்த்தைகள், அவரின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது.
அஜய் கிருஷ்ணா - குடும்ப வாழ்க்கை
அஜய் கிருஷ்ணா, பாடல்களில் மட்டுமல்லாமல் குடும்ப வாழ்க்கையிலும் மிகவும் செட்டிலாக இருக்கும் ஒருவர். அவரின் மனைவி பிரதிம்மா ஜெஸ்சி (Prathimma Jessy). இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பே அவர்களின் முதல் குழந்தை பிறந்தபோது கூட ரசிகர்களுடன் அந்த மகிழ்ச்சியை பகிர்ந்திருந்தார். தற்போது இரண்டாவது குழந்தை பிறந்ததன் மூலம், அவர்களின் குடும்பம் முழுமையான மகிழ்ச்சியில் உள்ளது.
யார் இந்த அஜய் கிருஷ்ணா
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர். அந்த நிகழ்ச்சியில் தனது குரலால் ரசிகர்களை கவர்ந்தவர். அதிலும் உதித்து நாராயணனைப் போல தத்துரூபமாக பாடி பலரையும் வியக்க வைத்திருந்தார். பின்னணி பாடகராகவும், ஸ்டேஜ் ஷோக்களிலும் பிஸியாக இருப்பவர்.
மெலோடி பாடல்களிலும், லைவ் பெர்ஃபார்மன்ஸ்களிலும் தனக்கென ஒரு ரசிகர் வட்டம் உருவாக்கியவர். சமூக வலைதளங்களிலும் அதிகமாக ஆக்டிவாக இருப்பவர். தனது வாழ்க்கை அப்டேட்ஸ்களை ரசிகர்களுடன் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்

அஜய் கிருஷ்ணா அவருடைய மனைவியை காதலித்து திருமணம் செய்து இருந்தார். சோசியல் மீடியா மூலமாகத்தான் இவர்களுக்குள் நட்பு ஏற்பட்டிருக்கிறது பிறகு இரண்டு குடும்பத்தினரின் சம்மதத்தோடு திருமணம் நடைபெற்று இருக்கிறது. அஜய் கிருஷ்ணாவின் அம்மா சிறு வயதிலேயே இறந்து போன பிறகு அக்காவில் தான் தனக்கு அம்மாவாக இருந்தார்கள் அவர்களுடைய உதவியால் தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிந்தது.
இப்போது தன்னுடைய மனைவிதான் தனக்கு அம்மாவாகவும் குடும்பத்தின் முக்கிய தூணாகவும் மாறி இருக்கிறார் என்று பல இடங்களில் அஜய் கிருஷ்ணா பெருமையாக பேசி இருக்கிறார்.
ரசிகர்களின் வாழ்த்து மழை
அஜய் கிருஷ்ணா இந்த செய்தியை பகிர்ந்ததும், ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல சின்னத்திரை மற்றும் இசை உலக நண்பர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். "Congrats Ajay anna", "God bless your family", "So happy for you" போன்ற கமெண்ட்களால் அவரது பதிவு நிரம்பி வருகிறது.
சினிமா, ரியாலிட்டி ஷோ, ஸ்டேஜ் பெர்ஃபார்மன்ஸ் என பிஸியாக இருக்கும் அஜய் கிருஷ்ணாவின் வாழ்க்கையில், இந்த புதிய வரவு இன்னும் பெரிய சந்தோஷத்தை சேர்த்திருக்கிறது.
ஒரு கலைஞராக ரசிகர்களின் அன்பை பெற்றவர்... ஒரு குடும்ப மனிதராக இந்த தருணத்தை அனுபவித்து வரும் அஜய் கிருஷ்ணா, தற்போது வாழ்க்கையின் மிக அழகான கட்டத்தை கடந்து செல்கிறார் என்றே சொல்லலாம்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications