குளுகுளு கோத்தகிரியில் ஜில்லென நனையும் ஆல்யா மானசா... ப்பா பார்த்தாலே குளிர் வெட வெடக்குதே
சென்னையில் அடிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க ஆல்யா மானசா ஜாலியாக கோத்தகிரிக்கு டூர் கிளம்பி விட்டார்.
சென்னை: சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா குளுகுளு கோத்தகிரிக்கு ஜாலியாக டூர் கிளம்பிவிட்டார். காரில் பயணிக்கும் போதே அதை செல்பியாக எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஆல்யா மானசா.
ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஆல்யா மானசா. அதே சீரியலில் தன்னுடன் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். முதல் குழந்தை பிறக்கவே சீரியலில் நடிக்க பிரேக் விட்டார். பெண் குழந்தை ஐலா பற்றி தினம் தினம் சமூக வலைத்தள பக்கங்களில் உற்சாகமாக பதிவிடுவார் ஆல்யா மானசா.
சஞ்சீவும், ஆல்யாவும் சமூக வலைத்தள பக்கங்களில் தினமும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்வார்கள்.இதற்காகவே, இவர்களுக்கு மிகப்பெரியர் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவர்கள் இருவரும் ஷாப்பிங் சென்றது , புதிய கார் வாங்கியது, இவர்களின் குழந்தையுடன் விளையாடும் கியூட்டான வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.

சஞ்சீவ் ஆல்யா ஜோடி
சில ஆண்டுகளில் ராஜா ராணி 2 சீரியல் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். டிஆர்பியில் நல்ல ரேட்டிங்கில் இடம் பிடித்தது ராஜா ராணி 2 சீரியல். இரண்டாவது முறையும் கர்ப்பமாகவே, பல மாதங்கள் கஷ்டப்பட்டு நடித்தார். டெலிவரிக்காக அந்த சீரியலில் இருந்து விலகினார். சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் நடித்து வருகிறார்.

ஆண் குழந்தை அர்ஸ்
ஆல்யாவிற்கு கடந்த மார்ச் 27ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அவர்கள் அர்ஷ் என்று பெயர் வைத்துள்ளனர். சின்னக் குழந்தைக்கு தடுப்பூசி போட்டது முதல் ரம்ஜான் கொண்டாடியது வரை தங்களின் இன்ஸ்டா பக்கத்திலும் யுடுயூப்பிலும் பகிர்ந்திருந்தார் ஆல்யா மானசா.

குளுகுளு பயணம்
குழந்தை பிறந்த பின்னர் முழு நேர இல்லத்தரசியாகவே மாறிப்போன ஆல்யா இப்போது குளுகுளு கோத்தகிரிக்கு டூர் கிளம்பிவிட்டார். சென்னையில் வெளுத்து வாங்கும் வெயிலில் இருந்து தப்பிக்க ஜில்லென பயணம் கிளம்பி விட்டார். பனி மூடிய சாலையில் காரில் பயணிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஆல்யா மானசா.

என்னா கிளைமேட்
நீலகிரி மாவட்டத்தில் தற்போது சீசன் காலமாகும். மழையும் பெய்து வருகிறது. கடும் குளிரும் நிலவுகிறது. மலைப்பாதையில் கார் பயணிக்க காற்று கடுமையாக வீச ப்பா என்னா கிளைமேட்... என்னா சீசன் என்ற கேப்சனுடன் வீடியோவை பதிவிட்டு உள்ளார். பாத்தும்மா பச்ச உடம்புக்கு குளிர் ஆகாது... பத்திரமா இருங்க என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

நிறைய எதிர்பார்க்கலாம்
வழக்கமாக ஆல்யா மானசா தம்பதி தங்களின் செயல்பாடுகளை யுடுயூப்பில் பதிவேற்றுவார்கள். இப்போது குளுகுளு சீசனை அனுபவிக்க கிளம்பியுள்ளதால் நிறைய வீடியோக்கள் போட்டோக்களை அவர்களின் சமூக வலைத்தள பக்கங்களில் எதிர்பார்க்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications