புவனேஸ்வரி தலைகீழா மாறிட்டாங்களே.. பூனைக்கண் நடிகையா இது? திருப்பூர் தாராபுரத்துல சர்ப்ரைஸ் பாருங்க
சென்னை: "எனக்கு வரும் சம்பளத்தை தொடர்ந்து மக்களுக்காகவே செலவிட போகிறேன்" என்று ஏற்கனவே அறிவித்தவர் நடிகை புவனேஸ்வரி.. இந்நிலையில், கனவில் அம்மன் தோன்றியதால் தாராபுரத்தில் உள்ள காளிதேவி கோவிலுக்கு வந்து ஆன்மீக பணியில் ஈடுபட்டு வருவதாக நடிகை புவனேஸ்வரி தெரிவித்துள்ளது, பலரது கவனத்தையும் பெற்று வருகிறது. என்ன நடந்தது?
நெல்லை சங்கரன்கோவிலில் பிறந்தவர் புவனேஸ்வரி.. வறுமையில் இருந்தவர்.. சாப்பாட்டுக்கே வழியில்லாமல், சென்னைக்கு வந்து கஷ்டப்பட்டு, டிவி சீரியல்களில் நடித்தார். பிறகு சினிமாவிலும் உயர்ந்து, நல்ல ரேஞ்சுக்கு வந்தவர்.

பணவசதி - பங்களாக்கள்
இன்றைக்கு பணவசதிகள் இவருக்கு இருந்தாலும், முற்றும் துறந்த சாமியாரினி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார். இல்லற வாழ்விலிருந்து விடுபட்டு, துறவி வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். முழுக்க முழுக்க சினிமாவிலிருந்து விலகி ஆன்மீகவாதியாக உருமாறியிருக்கிறார்..
சில மாதங்களுக்கு முன்பு புவனேஸ்வரியின் அன்னதானம் குறித்த செய்திகள் மீடியாக்களில் வெளியாகியிருந்தன.. அதாவது, சென்னை வளசரவாக்கம் சிவன் கோயிலில் தினமும் இலவச சாப்பாடு வழங்கி வருகிறாராம் புவனேஸ்வரி.. கோயம்பேடு குருகலாம்பஸ்வரர் கோயிலிலும் அன்னதானம் வழங்கி வருகிறார். ஒவ்வொரு தீபாவளி பண்டிகைக்கும், 10 ஆயிரம் ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலை தருகிறார்.
சோத்துக்கே திண்டாட்டம்
இதுகுறித்து கேட்டதற்கு "அன்று சங்கரன்கோவிலில் சோத்துக்கே வழியில்லாத நிலைமை ஏற்பட்டது. இப்போது எனக்கு வசதி வரும்போது, என்னுடைய வருமானத்தில் ஒரு பகுதியை எடுத்து சாப்பாடு போட நினைத்தேன்.. என்னுடைய சம்பளத்தை எனக்கு பின்னாடி யாரும் அனுபவிக்க போவதில்லை. எனக்கு வரும் சம்பளத்தை தொடர்ந்து மக்களுக்காகவே செலவிட போகிறேன்" என்று விளக்கமும் தந்திருந்தார் புவனேஸ்வரி
தாராபுரம் - ஆன்மீக பயணம்
இந்நிலையில், தாராபுரத்தில் உள்ள காளிதேவி கோவிலில் ஆன்மீக பணியில் ஈடுபட்டு வருகிறார் நடிகை புவனேஸ்வரி. தனது ஆன்மீக பாதை குறித்து செய்தியாளர்களிடையே புவனேஸ்வரி சொன்னதாவது:
"என்னை சினிமாவில் பலரும் பார்த்திருப்பார்கள்.. ஆனால் நான் இருப்பது ஆன்மீகம். ஆன்மீகத்துக்கு நான் வந்து 8 வருடங்களாகிவிட்டது.. இது நிறைய பேருக்கு தெரியாது. ஆன்மீகத்தில் இருந்தபோதே நடித்து கொண்டுதான் இருந்தேன்.
இபபோது நான் தாராபுரத்தில் இருப்பதற்கு காரணம் காளிதேவிதான்.. என்னுடைய கனவில் தோன்றிய காளிதேவி தான், இந்த இடத்திற்கு வருமாறு என்னை அழைத்தார். ஆனால் நான் கனவில் வந்த இடத்தை தேடி 8 ஆண்டுகளாக அலைந்தேன் கடைசியில் இங்கு வந்தபோது தான், நான் கனவில் பார்த்தது அப்படியே இருப்பதை கண்டேன்.
தாராபுரம் - விடாரபுரம்
ஏன் பிறந்தோம், எதற்காக வாழ்ந்தோம்? என்பதெல்லாம் இந்த கோவிலுக்கு நான் வந்த பிறகுதான் உணர முடிகிறது.. இந்த கோவில் பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட இடம்.. தாராபுரத்துக்கு விராடபுரம் என்ற பழைய பெயர் இருந்துள்ளது. பஞ்ச பாண்டவர்கள் இங்கு அஞ்ஞான வாசம் இருந்ததாகவும், அப்போது இந்த காளியை வணங்கிவிட்டு சென்றதாகவும் சொல்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, இங்குள்ள அம்மனுக்கும் சிறப்பு உள்ளது.. அகத்திய மாமுனிவர் இங்குள்ள கோவிலுக்கு வந்து அமராவதி கரையில் அமர்ந்து சிவனுக்காக தியானம் செய்து கொண்டிருந்தாராம்.. அப்போது சிவனை வழிபட விடாமல் தொந்தரவு செய்கிறார்கள் என்று அகத்தியர், காளி தேவியிடம் முறையிட்டுள்ளார்.. உடனே அவர் அங்கு சென்று அசுரர்களை வதம் புரிந்துள்ளார்.. அப்போது முதல் காளிதேவி, இங்குதான் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார்.
நான் கடந்த 8 வருடமாக அலைந்து திரிந்து இப்போதுதான், இங்கு ஆன்மீக பணியில் ஈடுபட்டு வருகிறேன்" என்றார். புவனேஸ்வரி தந்த இந்த பேட்டிதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications