9ம் வகுப்பில் நடந்த சம்பவம்.. மமிதா பைஜு வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயம்! ரசிகர்கள் கொண்டாட காரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு நடிகை திரையில் வந்தாலே அந்த படத்தை பார்க்க வேண்டும் என்று ஆர்வம் ரசிகர்களுக்கு வருவது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. ஆனால் இப்போது மமிதா பைஜூவுக்கு அப்படி ஒரு வரவேற்பு உருவாகி இருக்கிறது. இந்த பொண்ணு இருக்கிற படம் என்றாலே நன்றாகத் தான் இருக்கும் என்று ரசிகர்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அதற்குக் காரணம் அவருடைய நடிப்பில் இருக்கும் அந்த இயல்புதான். திரையில் பெரிய அளவில் அலட்டிக் கொள்ளாமல் நம்மை சுற்றி தினமும் பார்க்கும் ஒரு பெண்ணை போல இருக்கிறார்.

அதனால் தான் மமிதா நடிக்கும் கதாபாத்திரங்கள் சீக்கிரம் ரசிகர்களுடன் ஒட்டிக் கொள்கின்றன. ஆனால் இன்று முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் இந்த நடிகை சினிமாவுக்குள் வரவேண்டும் என்று சின்ன வயதிலேயே முடிவு எடுத்தவர் கிடையாது என்பது சுவாரசியமான விஷயம். சில நடிகைகள் பேட்டிகளில் பேசும்போது சொல்வார்கள் நான் குழந்தையாக இருக்கும்போதே நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு சினிமாவுக்கு வர பல கஷ்டங்களை தாண்டி வந்தேன் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் மமிதா அந்த லிஸ்டில் கிடையாது.

Mamitha Baiju

மமிதாவின் ஆரம்ப காலம்

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம கிடங்கூரை சேர்ந்தவர் மமிதா பைஜூ. அவருடைய அப்பா டாக்டர் பைஜூ கிருஷ்ணன். மமிதாவிற்க்கு சின்ன வயதிலிருந்தே வீட்டில் மருத்துவத்துறையை பார்த்து வளர்ந்ததால் தானும் ஒரு டாக்டராக வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்திருக்கிறது. அப்பாவின் கிளினிக்கில் இருந்தவர்கள் கூட அவரை செல்லமாக குட்டி டாக்டர் என்றுதான் கூப்பிடுவார்களாம். அந்த நேரத்தில் படிப்பை தாண்டி மமிதாவுக்குள் இன்னொரு உலகம் இருந்திருக்கிறது. 3 வயதிலேயே டான்ஸ் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்.

Mamitha Baiju

மாறிய பயணம்

பள்ளி நாட்களில் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். டான்ஸ் மட்டுமல்லாமல் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றிருக்கிறார். அதனால் கேமராவுக்கு முன்பு நிற்க தயக்கம் அவருக்கு ஆரம்பத்திலேயே கொஞ்சம் குறைந்திருக்கலாம். அப்படித்தான் அவர் 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது ஒரு எதிர்பாராத வாய்ப்பு வந்திருக்கிறது.

ஹீரோ சூட்கேஸில்
ஒரு படத்துக்கான ஆடிஷனில் மமிதாவை முயற்சி செய்து பார்க்கலாமே என்று அவருடைய குடும்பத்தினருக்கு தெரிந்தவர்கள் கேட்டிருக்கிறார்கள். சினிமாவில் பெரிய கனவு எதுவும் இல்லாமல் ஒரு புதிய அனுபவமாக அந்த வாய்ப்பை அவர் அணுகி இருக்கிறார். ஆனால் அந்த ஒரு ஆடிஷன்தான் அவருடைய வாழ்க்கையில் பாதையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற ஆரம்பித்தது. 2017ல் சர்வோபரி பாலக்காரன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான மமிதா அதற்குப் பிறகு உடனடியாக ஹீரோயிறாக பெரிய இடத்தை பிடிக்கவில்லை.

Mamitha Baiju

பிரபலம் கொடுத்த படங்கள்

சின்ன கேரக்டர்கள், துணை கேரக்டர்களில் கொஞ்சம் கொஞ்சமாக தனது இடத்தை உருவாக்கி இருக்கிறார். ஹனி பீ2, வரதன், விக்ருதி போன்ற படங்களில் வந்த மமிதாவுக்கு ஆப்ரேஷன் ஜாவா மற்றும் கோ கோ போன்ற படங்கள் நடிப்பின் கவனம் பெற உதவின. அதற்குப் பிறகு சூப்பர் சரண்யா படத்தில் சோனா என்ற கேரக்டராக வந்த போது இந்த பொண்ணு யாரு என்று பலரும் கவனிக்க ஆரம்பித்தனர். ஆனால் மமிதாவின் பெயரை கேரளாவை தாண்டி கொண்டு சென்றது பிரேமலு. அந்தப் படத்தில் ரேணு என்ற கேரக்டர் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது.

இது என்ன தமிழ் சினிமாவின் colour code? மமிதா பைஜூவை வைத்து வந்த விவாதம்? மாறுமா இயக்குனர்களின் மனநிலை?
பிரேமலு மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு மமிதாவுக்கு தென் இந்திய முழுவதும் ரசிகர்கள் உருவாக ஆரம்பித்தனர். அதற்குப் பிறகு ரபேல், டியூட் என்று தொடர்ந்து படங்கள் வந்தன. இப்போது பார்த்தால் மமிதாவின் பயணம் இன்னும் சுவாரசியமாக இருக்கிறது. விஜயுடன் ஜனநாயகன், சூர்யாவுடன் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ், நிவின் பாலி உடன் பெத்தலகேம் குடும்ப யூனிட் என முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.

Mamitha Baiju

ரசிகர்களுக்கு பிடித்தது

2026ல் வந்த இந்த படங்கள் அவரை வெவ்வேறு ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமாகி இருக்கிறது. மமிதாவிடம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து இருப்பது அவருடைய தோற்றம் மட்டுமல்ல ஒரு கதாபாத்திரத்துக்குள் போய் நடிக்கும் விதத்திலும் பெரிய அலட்டல் தெரியாது. காதல் கட்சியாக இருந்தாலும், கல்லூரி பெண்ணாக இருந்தாலும், குடும்ப கதையாக இருந்தாலும் கதாபாத்திரத்தை மிகவும் இயல்பாக கொண்டு வருகிறார். 9ம் வகுப்பில் நடந்த அந்த எதிர்பாராத ஆடிஷனால் டாக்டராக போக வேண்டிய மமிதாவின் வாழ்க்கையை இன்னொரு பாதையில் மாற்றி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+