ஆம்ஸ்ட்ராங் கொலை.. “இதை” ஏன் கவனிக்கல? இந்த செயல் சந்தேகமா இருக்கு! அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைய தினம் இந்தியா முழுவதும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் திரு ஆம்ஸ்ட்ராங் என்பவர் கொலை செய்யப்பட்டது குறித்து தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனிதா சம்பத் இந்த கொலை சம்பந்தமாக வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.

அதில் அனிதா சம்பத் பேசுகையில் நான் சின்ன வயசுல இருந்தே பெரம்பலூரில் தான் வசித்து வருகிறேன். வீட்டுக்கு வரும்போது எல்லாம் எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கும். ஆனா இப்போ நம்ம ஊர பாக்குறதுக்கு எனக்கு ரொம்ப பயமா இருக்கு. இரவு ஆம்ஸ்ட்ராங் சார் நியூஸ் கேட்டதிலிருந்து சென்னையை பாக்குறதுக்கு ரொம்ப பயமா இருக்கு.

Television Armstrong

அவ்வளவு பெரிய ஒரு தலைவரு.. ஒரு தேசிய கட்சியின் தலைவரு.. அவரை ஒரு ஆறு பேரு அசால்டா வந்து வெட்டி போட்டுட்டு போயிட்டு இருக்காங்க. ஆல்ரெடி அவரை இழந்தாச்சு அதுவே அநியாயமான விஷயம். மனசு பதறுது அடுத்து என்னன்னா இதுக்கு பிறகு ஒரு ஆறு பேரை அரெஸ்ட் பண்ணிட்டு அதை நியூஸ்ல காட்டுவாங்களா, அதுவாவது நிஜமா அவரை வெட்டுனவங்க ஆறு பேரு தானா இல்லனா வேற யாராவது ஆறு பேரை கூட்டிட்டு வந்து சரண்டர் பண்ண வைப்பாங்களான்னு இன்னொரு பக்கம் பயமா இருக்கு.

எப்படி இதை நம்புவது? ஒருவேளை இவங்க அரெஸ்ட் பண்ணுனாகூட இவங்க தான் ஆம்ஸ்ட்ராங்க வெட்டி கொன்னது என்று எப்படி நம்புவது? இவ்வளவு பிளான் பண்ணி அவர் பக்கத்தில் வெளி ஆட்கள் யாரும் பெருசா இல்லாம கொலை செஞ்சிருக்காங்க. அவர் எவ்வளவு பெரிய ஆளாய் இருந்தாரு. அவரை இப்படி பிளான் போட்டு இருக்காங்கன்னா அவங்க ரொம்பவே யோசிச்சு தானே இப்படி பண்ணி இருக்கணும்?

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செஞ்சா நியூஸ்ல வரும்... பெரிய விஷயமா ஆகும்னு தெரிஞ்சு இப்படி பண்ணி இருக்காங்கன்னா இது பிளான் இல்லாமையா இப்படி பண்ணி இருப்பாங்க? மகாராஜா என்று ஒரு படம் சமீபத்தில் வெளியானது. அந்த படத்தில் ஒரு குப்பை தொட்டி காணாமல் போகும் ஆனால் அது ஒரு குப்பைத்தொட்டி என்பது சின்ன விஷயமாக இருக்கலாம் ஆனாலும் அந்த படத்தில் போலீஸ் ஆக இருக்கும் நட்டி சார் ஒவ்வொரு அக்யூஸ்டுக்காக போன் பண்ணி நீ இந்த தப்பை ஒத்துக்கிறியா என்று கேட்பார்.

இது படத்தில் வரும் காட்சி மட்டுமல்ல இது போல நிஜத்தில் நடக்கிறது தானே படத்துல வச்சிருக்காங்க. சின்ன கேஸுக்கு யாரோ பண்ணுனதுக்கு ஆள் கிடைக்கவில்லை என்று சொல்லி யாரோ ஒத்துக்க போறாங்கன்னா இவ்வளவு பெரிய கேஸ் முன்னாடியே பிளான் பண்ணி மர்டர் பண்ணி இருக்கீங்க அப்போ அதுல ஒரு ஆறு பேரை சரண்டராக வைக்கலாம்னு பிளான் பண்ணாமலா இவ்வளவு பெரிய கொலையை பண்ணி இருப்பாங்களானு மனசு பதறுது.

நிஜமாவே கொலைகாரங்கன்னு ஆறு பேரை கூட்டிட்டு வந்தா கூட மனசு நம்ப மாட்டேங்குது. ஆம்ஸ்ட்ராங் பெரிய கட்சியில் இருந்திருக்காரு பக்கத்தில் சுற்றி அத்தனை பேரும் இருந்திருக்காங்க அவருக்கே இந்த நிலைமைனா சாதாரணமாக வீட்டில் இருக்கிறவங்க, சிங்கிள் பேரன்ட்டா இருக்கிறவங்க, வெறும் வயசானவங்க மட்டும் இருக்கிறங்க வீடு இவங்க எல்லாம் இனி எப்படி வாழுவாங்க? பெரிய ஆள்களுக்கு இந்த நிலைமைனா எங்களை மாதிரி சாதாரண மக்களின் நிலைமை என்ன?
இது மேலும் பெரிய அச்சத்தை தான் கொடுக்கிறது.

Television Armstrong

ஒருமுறை நாள் செய்தி வாசித்து விட்டு இரவு லேட்டா ஷோ முடிந்ததால வீட்டுக்கு ஆட்டோவில் வந்தேன். அந்த நேரம் எலக்சன் என்பதால் என்னுடைய பர்ஸ் முதல் கொண்டு எல்லாவற்றையும் திறந்து பார்த்தார்கள். ஆட்டோவில் டூ வீலரில் போனால் போலீஸ் அவ்வளவு செக் பண்றாங்க ஆனால் 10 பேரு கத்தி வச்சிக்கிட்டு பைக்ல வந்து இருக்காங்க அவங்கள யாரும் செக் பண்ண மாட்டாங்களா? அப்போ சின்ன சின்ன விஷயத்தை மட்டும் தான் இங்க பெருசா பாப்பாங்களா? பெரிய விஷயத்தை அலட்சியமா விட்டுருவாங்களா?

இப்போ ஒரு உசுரு போயிடுச்சு இதனால இன்னுமும் மக்கள் மத்தியில் பயம்தான் வருகிறது. இதுபோல ஒருத்தங்களை கூலிப்படையாக இருந்து ஒருத்தங்க கொலை செஞ்சி அந்த காசில வர்ற சாப்பாட சாப்பிடும் போது உங்க மனசு உறுத்தலையா? அதே காசுல உங்க குழந்தைக்கு மனைவிக்கும் நீங்க சாப்பாடு கொடுக்கும்போது அந்த சாப்பாடு அவங்களோட உடலில் சேருமா? இன்னைக்கு கூலிப்படையா இருந்து இன்னொருத்தரை சிலர் இப்படி கொலை செஞ்சிருவீங்க நாளைக்கு உங்களுக்கே இதே நிலைமை வந்தால் உங்களுடைய குழந்தைகள் நிலைமை என்ன ஆகும்னு கொஞ்சம் மாதிரி யோசிச்சு பாருங்க.

இந்த மாதிரி கூலிப்படையா வேலை செஞ்சு பாவத்தை மட்டுமே சேர்க்காதீங்க.. உங்களுக்கு மனம் மாறி நமக்கு குழந்தைகள் நல்லா இருக்கணும் நீங்க நினைச்சா எனக்கு பிரைவேட்டா மெசேஜ் பண்ணுங்க நான் என்னுடைய சைடில் வேலை வாங்கி தரேன் என்று அந்த வீடியோவில் அனிதா சம்பத் பேசியிருந்த நிலையில் இது அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+