வலி நிவாரணி இசை.. இளையராஜாவுக்கு விழா எடுக்கும் தமிழக அரசு.. திமுக ஓட்டு வங்கி ஏறுமா? இதென்ன புதுஸா
சென்னை: இசைஞானி இளையராஜா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில், 8,500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அவரது இசைப்பயணத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செப்.13-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பாராட்டு விழா நடைபெறுகிறது. இந்த விழாவை, திமுகவை அரசு எடுப்பதற்கு அரசியல் லாபம் காரணம் என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வருகிற 13ம் தேதி இசைஞானி இளையராஜாவுக்கு பொன்விழா ஆண்டு பாராட்டு விழா நடைபெறவுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்றைய தினம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்று 13.9.2025 அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ள "சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு 50 பாராட்டு விழா"-விற்கான அழைப்பிதழை வழங்கினார்.
இந்நிலையில், King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா ஜெய்சங்கர்,. "திரைத்துறையில் சாதித்த நபருக்கு அரசு விழா எடுப்பதில் தவறில்லை.. கடந்த காலத்தில் பல துறைகளை சேர்ந்த சாதனையாளர்களுக்கு அரசு விழா எடுத்துள்ளது.. கலை, பண்பாடு விஷயத்தில் சாதித்தவர்களுக்கு விழா எடுப்பது நல்ல விஷயம்.. இதுபோன்ற விழாவை அரசு எடுப்பதில் தவறில்லையே?
சாதனையாளருக்கு விழா
இப்படி விழா எடுப்பதை சாதனையாளராக பார்க்க வேண்டுமே தவிர, சாதியாளராக பார்க்க தேவையில்லை. ஒருவேளை டெல்லியில் விழா எடுப்பதாக இருந்தால், பாஜக என்று பார்க்காமல் மத்திய அரசு என்று பார்த்தாலே போதும்.. மொத்தத்தில் விழா எடுக்கக்கூடியவர் தகுதியானவர் என்பதுதான் ஒரே விஷயம்..
இங்கு சாமானிய மக்களின் உடலுழைப்பின் வலிக்கு கூட மருந்து இளையராஜாவின் இசைதான்.. அவரது தனிப்பட்ட விஷயங்களில் நிறைய விமர்சனங்கள் உண்டு.. ஒருவரின் இயல்பான குணத்தை நாம் பேசதேவையில்லை.. சாதனையாளராக தலைக்கணம் இருக்கலாம் என்கிறார்கள்.. எல்லா சாதனையாளர்களும் தலைக்கணத்துடன் இருப்பதில்லை.. ரஜினிகாந்த்துக்கு தலைகணம் உள்ளதா?
வலி நிவாரணி இசை
எனவே இளையராஜா என்றால் அவரது குணம் எல்லாருக்கும் தெரியும்.. அதனால் தனிப்பட்ட விஷயத்தை பேசாமல், இளையராஜாவின் இசை சாதனையை மட்டும் பார்க்கலாம்.. உழைக்கும் மக்களின் வலி நிவாரணியாக உள்ள இளையராஜாவுக்கு விழா எடுப்பது வரவேற்கத்தக்கதே.
அதேபோல பல துறைகளில் பல பேருக்கு கௌரவ எம்பி பதவி தரப்படுகிறது.. இந்த பதவியை எதற்கு தருகிறார்கள் என்று தெரியவில்லை.. இப்படி பதவியை தருவதற்கு பதிலாக ஏதாவது சம்பந்தப்பட்டவர்களுக்கு வேறு ஏதாவது பட்டத்தை தரலாம்.. அதற்காக ராஜ்ய சபா போஸ்ட் தரணுமா? அப்படி ராஜ்ய சபா எம்பியாகி இளையராஜா என்ன செய்திருக்கிறார்? எனவே அதை பற்றி பேச தேவையில்லை.
அரசியல் லாபம் - ஓட்டு கணக்கு
அதேபோல, விரைவில் தேர்தல் வரவுள்ளது.. இந்த சமயத்தில் இளையராஜாவுக்கு விழா எடுப்பதால், அதன்மூலம் திமுகவுக்கு சாதி ஓட்டு வங்கி உயரும் என்று சிலர் கணக்கு போடுகிறார்கள்.. அதுவும் தவறானதாகும்..
மத்திய அரசு அல்லது மாநில அரசு என யார் இளையராஜாவுக்கு விழா எடுத்தாலும் சரி, அதனால் அரசுக்கு ஒருபலனும் கிடைக்க போவதில்லை.. இது வெறும் இளையராஜாவின் கலைச்சேவைக்காக எடுக்கப்படும் விழாவாகும்.. அதை வரவேற்போம்" என்று தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications