ஏஆர் ரஹ்மான் ஒழுக்கத்தில் சிறந்தவர்.. பாடகியை திட்டினால் கூட ஸாரி சொல்பவர்.. பிரபலம் புகழாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏஆர் ரஹ்மான் மிகவும் நல்லவர், எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் தொழில் பக்தி கொண்டவர் என்று மூத்த பத்திரிக்கையாளர் சபீதா ஜோசப் புகழாரம் சூட்டியுள்ளார்.

King 24X7 என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் சபீதா ஜோசப் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், எந்நேரமும் பிஸியாகவே இருப்பவர் ரஹ்மான்.. அவர் ஒரு கிரியேட்டர்.. எப்போதுமே இசை சம்பந்தமான யோசனையில் இருப்பவர்.. ஆனால், பெண்கள் விஷயத்தில் கண்ணியமானவர்.. 13 வயதில் ரஹ்மானின் அப்பா இறந்துவிட்டார்.. சூனியம் வைக்கப்பட்டு, வயிற்று வலியால் துடிதுடித்தே இறந்துபோனார்..

ar rahman saira banu

ஏஆர் ரஹ்மான்: குடும்பத்தின் அத்தனை கஷ்டத்தையும் சுமந்தார் ரஹ்மான். ஒரு குருவியின் மீது, பெரிய பாறாங்கல்லை வைத்ததுபோல இருந்தது. இந்த உயரத்தை தொடுவதற்கு, அவர் தனக்குள் ஏற்படுத்தி கொண்டதுதான் இந்த கட்டுப்பாடுகள்.

அவர் நினைத்திருந்தால் எப்படியும் வாழ்ந்திருக்கலாம். சில பாடகிகளின் உடைகள் கவர்ச்சியாக இருந்தாலும், நேருக்கு நேரே அவர்களை பார்ப்பதையே தவிர்த்துவிடுவார்.. அப்படிப்பட்ட கண்ணியம் மிக்கவர் ரஹ்மான்.

ஏகப்பட்ட பணிகள்: ஸ்டுடியோவை இப்போது ரஹ்மான் கட்டியிருப்பதால், அதில் நிறைய வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.. வரிசையாக 7, 8 படங்கள் கையில் வைத்திருக்கிறார்.. வெளிநாட்டிலுள்ள ஸ்டுடியோக்களையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.. வாய்ப்பு இருக்கும்போதுதானே பயன்படுத்தி கொள்ள முடியும்.

இவ்வளவு வேலைகளிலிருந்தும் பின்னோக்கி போக முடியாது. இஸ்லாமியத்தின்படி 5 வேளை தொழுபவர்.. ஓய்வாக இருக்கும்போதுகூட, மனதுக்குள் தியானம் செய்துகொள்வார். இதற்கு திக்ர் என்பார்கள்.. பதட்டமில்லாமல், மனதை ஒருமுகப்படுத்தி கொள்வது.

கட்டுப்பாடு: அதற்காக குடும்பத்தில் சுத்தமாக பேசுவதில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது.. பேச செய்கிறார், அவர்களை வெளிநாடு அழைத்துசெல்கிறார். அவருக்கு பீடி, சிகரெட் பழக்கம்கூட கிடையாது. இதுவே அபூர்வமானது.

அபூர்வ மனிதர்: இதுவரை ரஹ்மானுக்கு பாடல்களை எழுதிய பாடலாசிரியர்கள்கூட, பாடகர், பாடகிகள்கூட ரஹ்மானை குறை சொன்னது கிடையாது. சினிமாவில் எப்படி டி.ராஜேந்தரை சொல்வார்களோ, அதுபோலத்தான் ரஹ்மான்.

விஐபி: ரஹ்மான் ஒரு மிகப்பெரிய விஐபி.. இந்த விவாகரத்து அறிவிப்பால் அவரே அரண்டு போய் நிற்கிறார்.. இதனால் அவர் காயப்பட்டிருக்கிறார்..

அட்வைஸ்: ஜிவி பிரகாஷ், சைந்தவியை விவாகரத்து செய்தபோது, ஜிவி பிரகாஷுக்கு சாயிரா பானு அட்வைஸ் தந்திருக்கிறார்.. ஒன்றுசேர்ந்து வாழ வேண்டும் என்று அறிவுரையும் சொல்லியிருக்கிறார். ஒரு பெண் பாடலாசிரியை என்னிடம் ஒரு தகவலை பகிர்ந்து கொண்டார்.. "ரஹ்மான் படத்தில் ஒரு பாடலை நான் எழுதி முடிக்க வேண்டியிருந்தது. ஆனால், பாடலை எழுத லேட்டாகிவிட்டது. ஏன் இவ்வளவு லேட்டு? என்று ரஹ்மான் காட்டமாக கேட்டார். உடனே எனக்கு என்னவோ போலாகிவிட்டது. அழுகிற மாதிரி ஆகிட்டேன். உடனே இதை கவனித்த ஏஆர் ரஹ்மான், "ஓ, சாரி சாரி" என்று உடனே மன்னிப்பு கேட்டார்.

தன்மையான மனிதர்: அவர் என்னிடம் ஸாரி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.. பாட்டை கேட்டு வாங்குவது அவருடைய வேலை.. ஆனால், அவரே வந்து ஸாரி சொன்னதுமே, எனக்கு கஷ்டமாக போச்சு.. ரொம்ப தன்மையான மனிதர் ஏஆர் ரஹ்மான்" என்று அந்த பாடலாசிரியர் என்னிடம் சொன்னார்.. என்று கூறியிருக்கிறார் சபீதா ஜோசப்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+