Aranmanai Kili Serial: ஹை...அர்ஜுன் நடக்கறான்...இப்போ என்ன செய்வாங்க மீனாட்சி அம்மா?
சென்னை: விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் கால் நடக்க முடியாமல் இருந்த அர்ஜுன், வாசுகி பாம்பு வந்து தீண்ட இப்போது நடக்க ஆரம்பிக்கிறான்.
குருஜி ஆஸ்ரமத்தில் அர்ஜுனுக்கு சுவாமிஜி வைத்தியம் பார்க்க ஆரம்பிக்க துர்கா செய்த சதி திட்டத்தால் ,பூ நாகம் ஜானுவைத் தீண்டி, ஜானு பச்சிலை மருந்தை கீழே கொட்டிடறா.
பிறகு காடு, மலை, மேடு, புதை குழி என்று மாட்டி ஜானு கஷ்டப்பட்டு கொண்டு வந்த மூலிகையை அர்ஜுனின் அம்மா மீனாட்சி அம்மா தட்டிவிட, அப்போதும் வைத்தியம் நின்று விடுகிறது.

நாக தேவன்
ஒரு வனத்தில் நாகர் குலம் வசிக்கிறார்கள். அவர்களின் தேவனிடம் ஆசீர்வாதம் வாங்கி வந்து பின்னர், வனத்தில் இருக்கும் அஞ்சு தலை பாம்பு வாசுகிக்கு பூஜை செய்துட்டு வரணும்னு சொல்றார். பின்னர் அந்த வாசுகி பாம்பு வந்து அர்ஜுனன் காலை சுற்றி நன்றாக முறுக்கி விட்டு,சென்றதும் அர்ஜுன் நடப்பான் என்று சொல்கிறார்.

அர்ஜுனும் விரதம்
ஜானு விரதம் இருந்து, அர்ஜுனையும் விரதம் இருக்க வைத்து, நாக தேவர்கள் வசிக்கும் வனத்துக்கு போகிறாள், கணவனுடன். அங்கு தேவர்கள்செய்ய சொன்ன அத்தனை விஷயங்களையும் செய்து, பின்னர் வாசுகி பாம்புக்கு பூஜையும் செய்துவிட்டு நாக தேவர்கள் ஆசியுடன் ஆஸ்ரமத்துக்கு திரும்பி வருகிறார்கள்;.

ஆசிர்வாதமாம் என்னது?
மீனாட்சி அம்மாவிடம் ஜானு சென்று, அம்மா நாளைக்கு நான் அர்ஜுன் சாருக்காக விரதம் இருந்து அக்னி சட்டி ஏந்தி, ஹோம குண்டத்தில் போடப் போறேன்.அப்போதுதான் அந்த வாசுகி பாம்பு வந்து அர்ஜுன் சாரை தீண்டி காலை குணமாக்குமாம். இந்த பூஜை நல்லா நடக்கணும்னு என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கம்மான்னு ஜானு சொல்ல, காபி டம்ளரை வீசி எறியறாங்க மீனாட்சி அம்மா.

வாசுகி பாம்பு
அஞ்சு தலை வாசுகிப் பாம்பான்னு மீனாட்சி அம்மா கத்திவிட்டு, அர்ஜுனை உடனே கூட்டிகிட்டு வரப் போறேன்னு சொல்ல, சுவாமிஜி முடியாதுன்னு சொல்லி , எல்லாரையும் அனுப்பிடறாங்க. வாசுகி பாம்பு வந்து அர்ஜூனின் கால்களை பின்னிக்குது. பின்னர் போக திரும்புகையில், மீனாட்சி அம்மா அர்ஜூன் என்று ஓடி வர, அவங்களை வாசுகி பாம்பு கொத்திருது. இப்போது அர்ஜுன் நடக்கிறான் என்கிற விஷயத்தை மீனாட்சி அம்மாவிடம் ஜானு சொல்ல போன் செய்ய, அவங்க அதை காதில் கூட போட்டுக்காமல், நீ உடனே என் கண் முன்னாடி வந்து நிற்கணும்னு சொல்றாங்க.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications