Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை மக்களுக்காக உணவோடு வந்த அறந்தாங்கி நிஷாவுக்கு ஏற்பட்ட அவலம்.. எமோஷனலாக வைத்த வேண்டுகோள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில தினங்களாகவே ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிக்ஜாம் புயல் புரட்டி போட்டு இருக்கும் நிலையில் சென்னை மக்கள் பலர் உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய் டிவி பிரபலமான நடிகை அறந்தாங்கி நிஷா தன்னுடைய சொந்த ஊரிலிருந்து சென்னை மக்களுக்காக தன்னால் முடிந்த உணவுப் பொருள்கள் வழங்குவதற்காக சென்னைக்கு வந்திருக்கிறார்.

ஆனால் சென்னைக்கு பொருள்கள் ஏற்றி வருவதற்காக எந்த வாகனத்தையும் யாரும் தர தயாராக இல்லை என்பதால் தான் பட்ட வேதனை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Aranthangi Nisha Donated Food Items to michaung Affected chennai People

மிக்ஜாம் புயல்காரணமாக சென்னை மக்கள் கடும் அவஸ்தைக்கு உள்ளாகி இருக்கிறார்கள். உண்ண உணவும், குடிக்க தண்ணீரும் இல்லாமல் பலர் வீட்டிற்குள்ளே அவதிப்பட்டு கொண்டிருக்கின்றனர். இதற்கு உதவுவதற்காக பல சமூக ஆர்வலர்களும் பல பிரபலங்களும் களத்தில் இறங்கி இருக்கின்றனர்.

ஆனால் உதவும் மனம் இருந்தாலும் அவர்களால் முழுமையாக உதவுவதற்கு முடியவில்லை. காரணம் சம்பந்தப்பட்ட இடத்திற்கு போவதற்கு தங்களுக்கு தேவையான வாகன வசதிகள் கிடைப்பதில்லை என்பதை நடிகை மற்றும் விஜய் டிவி பிரபலமான அறந்தாங்கி நிஷா தெரியப்படுத்தி இருக்கிறார். அதாவது சென்னையில் கனமழையால் பல தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது.

சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்கும் நீர் புகுந்து தேங்கி நிற்கிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். பல மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலையில் இருக்கிறது. அதோடு விமானம், ரயில், பேருந்து போன்ற போக்குவரத்து வசதிகளும் ஸ்தம்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் அறந்தாங்கி நிஷா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தண்ணீர் வழங்க திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்திருக்கிறார்.

ஆயிரம் பேருக்கு உணவு வழங்க தாம்பரத்தில் ஏற்பாடு செய்திருக்கிறார் ஆனால் அந்த சாப்பாடை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுப்பதற்காக தனக்கு போதிய வாகனம் கிடைக்கவில்லை. வாடகைக்கு பல இடங்களில் வாகனத்தை தேடிக் கொண்டிருந்தாலும் யாரும் சென்னைக்கு என்பதால் வர முன்வர மாட்டேன் என்கிறார்கள். அதனால் தங்களுடைய சொந்த காரில் பொருள்களை ஏற்றுக் கொண்டு வந்திருக்கிறோம் என்று அறந்தாங்கி நிஷா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதோடு தன்னுடைய காரில் தான் இருப்பதற்கு மட்டும் சிறிய இடத்தை வைத்துவிட்டு மீதம் உள்ள இடத்தில் முழுக்க தண்ணீர் பாட்டில் மற்றும் உணவுப் பொருள்கள் வைக்கப்பட்டு இருக்கிறது. இதை தேவைப்படுபவர்களுக்கு கொண்டு செல்வதற்காக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். தயவு செய்து வண்டியை வைத்திருப்பவர்கள் இந்த இக்கட்டாத சூழ்நிலையில் கொஞ்சம் உதவி செய்யுங்கள்.

யாரும் முடியாது என்று மறுக்காதீர்கள் பலபேர் உணவுக்காக தவித்து கொண்டிருக்கும்போது அவர்களுக்கு வாகனத்தை கொடுத்து உதவுங்கள் என்று அந்த வீடியோவில் உருக்கமாக அறந்தாங்கி நிஷா பேசியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு புயல் ஏற்பட்ட போதும் கூட அறந்தாங்கி நிஷா தன்னால் முடிந்த உதவிகளை களத்திற்கு நேரடியாக சென்று செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் அதனால் விமர்சிக்கவும் பட்டிருந்தார். ஆனால் அந்த நெகட்டிவ் விமர்சனங்களை தான் கண்டுகொள்ளப் போவது கிடையாது, தான் கஷ்டப்பட்ட நேரத்தில் தனக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவினால் தான் இன்று நன்றாக இருக்கிறேன். அதனால் மக்கள் துயரம் படும்போது தன்னால் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது என்றும் அந்த நேரத்தில் அறந்தாங்கி நிஷா விளக்கம் கொடுத்திருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+