முஸ்லிம்னு வீடு தரமாட்டேன்னாங்க.. வளர வைத்த “தமிழ்”.. அசிங்கப்பட்ட இடத்தில் கெத்து காட்டிய அறந்தாங்கி நிஷா
சென்னை: விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான அறந்தாங்கி நிஷா சென்னையில் தான் புதியதாக வாங்கிய சொந்த வீடு குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் தான் பட்ட அவமானங்கள், பிறகு தான் சாதித்தது எப்படி என்பது பற்றியும் எமோஷனலாக பகிர்ந்திருக்கிறார்.
சொந்த வீடு கனவு என்பது எல்லோருக்கும் இருக்கும். அதுவும் சொந்த வீடு இல்லாமல் வாடகைக்கு பல வீடு மாறிக்கொண்டே இருப்பவர்களுக்கு தான் அதனுடைய வலியும், வேதனையும், ஏக்கமும் தெரியும். அதுபோல் சென்னையில் வேலை பார்க்க வந்த இடத்தில் வாடகைக்கு வீடு தேடி பட்ட அவமானங்கள் குறித்து அறந்தாங்கி நிஷா எமோஷனலாக பகிர்ந்திருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற அறந்தாங்கி நிஷா இன்று வெள்ளித்திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். பட்டிமன்ற பேச்சாளரான இவர் தன்னுடைய டைமிங் காமெடியால் மக்களை மகிழ்வித்து அடுத்த கோவை சரளா என்ற ரேஞ்சுக்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

அதே நேரத்தில் தான் வாங்கும் சம்பளத்தில் தன்னால் முடிந்த அளவிற்கு பலருக்கு உதவிகளையும் செய்து கொண்டிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் புயல் பாதிப்பு ஏற்பட்டபோது பலருக்கு தன்னால் உதவிகள் செய்திருந்தார். அதுபோல தூத்துக்குடியிலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக சென்று பல உதவிகள் செய்திருந்தார்.

தனுஷின் மாரி 2 படம் மூலம் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக அறிமுகமான இவருக்கு இப்போது அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. அதுபோல சினிமாவில் ஒரு பக்கம் பிசியாக நடித்து வந்தாலும் தனக்கு வாய்ப்பு கொடுத்த விஜய் டிவியில் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் நான்காவது நிகழ்ச்சியில் அறந்தாங்கி நிஷா போட்டியாளராக கலந்து கொண்டார். அதற்கு பிறகு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக மாறி இருக்கிறார். இந்த நிலையில் ஏற்கனவே தன்னுடைய சொந்த ஊரில் சொந்தமான வீடு இருந்தாலும் சென்னையில் வீடு வாங்கிய அறந்தாங்கி நிஷா கிரகப்பிரவேசம் செய்து அந்த வீட்டில் குடி பெயர்ந்து இருக்கிறார்.

அப்போது எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், உங்க எல்லாருடைய ஆசீர்வாதத்தோடு சென்னையில் வீட்டில் பால் காய்ச்சியாச்சு. வீட்டுக்கு அப்பாவோட பெயர் தான் வைத்திருக்கிறேன். நான் பொறந்ததுல இருந்து இப்ப வரைக்கும் எனக்கு சென்னையில் சொந்தக்காரங்கன்னு யாரும் கிடையாது.
நொடியில் உயிர் தப்பிய அறந்தாங்கி நிஷா மகளுக்கு பிரம்மாண்டமான விழா.. கண்கலங்கிய தாய் பாசம்
சின்ன வயசுல ஒரு தடவை தான் அப்பா என்னை சென்னைக்கு கூட்டிட்டு வந்தாங்க. அதுக்கு அப்புறம் நான் எப்போ சென்னைக்கு போகணும் என்று சொன்னாலும் இந்தா கூட்டிட்டு போறேன் என்று ஏமாத்திட்டே இருப்பாங்க. திரும்ப நான் சென்னையில பயணித்ததற்கு காரணம் என்னுடைய அப்பா. அதுக்கு அப்புறம் என்னுடைய தமிழ்.
ஆறு மாசமாக சென்னையில் வீடு தேடுனப்ப ஆர்டிஸ்ட்க்கு வீடு தரமாட்டேன், முஸ்லிம்க்கு வீடு தரமாட்டேன்... இப்படி எத்தனையோ விமர்சனங்களை சந்தித்ததற்கு அப்புறம் குடும்பமா சேர்ந்து சென்னையில் ஒரு வீடு வாங்கலாம் என்று முடிவு எடுத்தோம். இப்போ வீடு வாங்கியாச்சு. எப்போதும் எல்லாரும் முன்னாடியும் நம்ம ஜெயிக்கிறதை விட நாம எங்க தோற்றமோ அங்கேயே ஜெயிக்கணும்.

என்னுடைய வளர்ச்சிக்கு எப்பவுமே என்னுடைய குடும்பமும், என்னுடைய நண்பர்களும், என்னுடைய ரசிகர்களும், என்னுடைய தமிழும் தான் காரணம். எல்லோருக்குமே ரொம்ப நன்றி. என்னுடைய வளர்ச்சியை உங்களுடன் வளர்ச்சியாக பார்க்கிறதுக்கும், என்னை எப்பவுமே உங்களில் ஒருத்தியா பாக்குறதுக்கும் ரொம்ப நன்றி.
அடக்கொடுமையே! ஏர்போர்ட்டில் அறந்தாங்கி நிஷாவுக்கு நடந்த அவலம்.. கொந்தளிக்கும் பிரபலங்கள்
நான் வாங்கினது பங்களா இல்லை. சிங்கிள் பெட்ரூம் வீடு தான். எல்லாத்தையும் விட பெரிய நன்றி இறைவனுக்கு. எனக்கு அதிக வாய்ப்பு கொடுத்த விஜய் டிவிக்கு மட்டும்தான் நன்றி மக்களே.. என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து இருக்கிறார். அறந்தாங்கி நிஷாவிற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications