சேனலை விட்டு விலகியதும் பிக் பாஸை விமர்சித்த சாரா... வேறு மாதிரியாக கூறிய அர்ச்சனா
சென்னை:சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் இருந்து ஜு தமிழ் தொலைக்காட்சிக்கு மாறியுள்ள விஜே அர்ச்சனா குறித்து பல நெகட்டிவ் கமெண்டுகள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வந்தன.
அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வண்ணமும் சமீபத்தில் நடந்த பல விஷயங்களையும் பற்றியும் அர்ச்சனாவும் அவரது மகளும் பேசியுள்ள வீடியோவை அர்ச்சனா ஆதரவாளர்கள் தங்கள் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன்6 தொடங்க உள்ள நிலையில் அந்த நிகழ்ச்சியை குறித்து அர்ச்சனாவின் மகள் பேசியுள்ளதும் செம வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

கலகலப்பான அர்ச்சனா
சன் டிவியில் காமெடி டைம் நிகழ்ச்சியை மயில்சாமி உடன் தொகுத்து வழங்குவதில் அறிமுகமாகி பிரபலமானவர் அர்ச்சனா.இரவில் 10 மணிக்கு ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சியை அர்ச்சனாவிற்காகவே பார்க்கும் அளவிற்கு 90ஸ் இளைஞர்களை தன் அழகாலும்,இனிமையான பேச்சாலும் கவர்ந்து வைத்திருந்தவர் அர்ச்சனா. தன்னுடைய திருமணத்திற்குப் பிறகு சிறிது பிரேக் எடுத்தாலும் மீண்டும் விஜே வாக களம் இறங்கி தன்னுடைய திறமையாலும் பாசிட்டிவான ஆட்டிட்யூட்டாலும் சின்னத்திரை ரசிகர்களின் பேராதரவை பெற்றிருந்தார்.

அன்பால் அடிபட்ட அர்ச்சனா
அர்ச்சனாவின் அருமை பெருமைக்கெல்லாம் ஆப்பு வைத்தாற் போல் அமைந்தது பிக் பாஸ்4. பிக் பாஸ் ஷோ வில் சின்னத்திரை ரசிகர்களின் பேராதரவோடு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளராக கலந்து கொண்டவர் அர்ச்சனா. ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் "அன்பு ஜெயிக்கும்னு நம்புரியா" என்று சொல்லிக்கொண்டு ரியோ, சோம்,அறந்தாங்கி நிஷா, கேபிரில்லா, ஜித்தன் ரமேஷ் போன்ற சக போட்டியாளர்களை ஒரு கூட்டமாக சேர்த்துக்கொண்டு இவர் நடந்து கொண்ட விதம் ரசிகர்களால் ரசிக்கப்படவில்லை. இவரது செய்கைகளால் "அன்பு கேங்க்" என்று அடைமொழி வைக்க ப்பட்டு கேங்கில் உள்ள மற்றவர்களை விட அர்ச்சனாவே ரசிகர்களின் வெறுப்புக்கும் விமர்சனத்திற்கும் உள்ளானார்.

பிக் பாஸ்க்கு பின் அர்ச்சனா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனாவுக்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனங்களால் நிகழ்ச்சிக்குப் பின் அர்ச்சனா எதை செய்தாலும் அதற்கு நெகட்டிவ் விமர்சனங்களும் கலாய்ப்புகளும் அதிகமாக இருந்தது.அர்ச்சனாவும் அவரது மகளும் இணைந்து தங்களது யூடியூப் பக்கத்தில் அப்லோட் செய்த "பாத்ரூம் டூர்" வீடியோ மிகப் பெரிய பூகம்பங்களையும் பிரச்சனைகளையும் சமூக வலைதளங்களில் ஏற்படுத்தி இருந்தது.

சேனல் மாறியதன் பின்னணி
இந்த நிலையில் ஜீ தமிழ் நிகழ்ச்சியில் சமீபத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சூப்பர் மாம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் அர்ச்சனா. இவரது மீதான நெகட்டிவ் விமர்சனங்களால் தான் விஜய் டிவியில் இருந்து இவரை அனுப்பி விட்டதாகவும், அதனால் தான் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு மீண்டும் வந்து விட்டார் என்றும் அர்ச்சனாவை விமர்சித்திருந்தனர். ஆனால் இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வண்ணம், தான் முதலில் ஜீ தமிழில் இருந்து விலகும் போதும் அவர்களின் அனுமதி பெற்று தான் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்ற வந்ததாகவும், தற்பொழுதும் விஜய் டிவி நிறுவனத்தின் அனுமதியுடனும் ஒத்துழைப்புடனும் தான் தாம் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு பணியாற்ற சென்று இருப்பதாகவும், மீண்டும் தான் விஜய் டிவியுடன் இனைவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

பிக் பாஸ் பிடிக்காத அர்ச்சனா மகள்
பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி கூறியுள்ள அர்ச்சனா மகள் சாரா தன்னுடைய அம்மா அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்றும், தன்னுடைய அம்மாவின் கேரக்டரை முழுமையாக காட்டாமல் கொஞ்ச நேரத்தில் சுருக்கி நெகட்டிவாக காட்டி அவரது பெயரை கெடுத்து விட்டதாகவும் காரணத்தை கூறியுள்ளார். விஜய் டிவியில் இருந்து அர்ச்சனா விலகியதும் அந்த டிவியின் நிகழ்ச்சியை பற்றி அர்ச்சனாவின் மகள் விமர்சனம் செய்துள்ளது அந்த சேனல் மீதுள்ள கோபத்தை காட்டுவதாக இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
-
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்: ஒன்று சேர்ந்த மருமகள்கள்.. கோமதி குடும்பத்தில் பெரிய குழப்பம்! பாவம் பாண்டியன் -
Pandian Stores 2 promo: பாண்டியன் வீட்டிற்குள் நடந்த விபரீதம்.. மயில் எடுத்த முடிவு! சரவணனுக்கு 2வது கல்யாணம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications