ஜீ தமிழ் டிவியின் சூப்பர் மாம் சீசன் 2 நீங்க ரெடியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழ் டிவியின் ஹிட் ஷோக்களில் ஒன்று சூப்பர் மாம் என்று சொல்லலாம். இந்த நிகழ்ச்சி முதல் சீசன் முடிந்து பல மாதங்கள் ஆன நிலையில் இப்போது இரண்டாவது சீசன் ஆரம்பிக்க உள்ளது ஜீ தமிழ் டிவி.

முதல் சீசனில் ஜீ தமிழ் டிவியின் பிரபலங்கள் மற்றும் பிற டிவி சேனல்கள் சேர்ந்த பிரபலங்களின் மனைவி குழந்தை கலந்துக்கொண்டனர்.

அல்லது சீரியல் நடிகை தங்களது குழந்தையுடன் பங்கேற்றனர். இதில் அம்மாவுக்கும் குழந்தைக்கும் பல்வேறு டாஸ்க் என்று வைத்து, குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் எலிமினேட் ஆவது என்று நிகழ்ச்சி இருந்தது.

சீசன் 2

சீசன் 2

மிக விரைவில் சூப்பர் மாம் சீசன் 2 என்று ஆரம்பிக்க உள்ளது ஜீ தமிழ் டிவி. டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் அடுத்தக்கட்ட சீசனை நோக்கி சென்று கொண்டு இருக்கையில் தற்காலிகமாக சில நிகழ்ச்சிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில்தான் சூப்பர் மாம் சீசன் 2 ஆரம்பிக்க உள்ளது.

இந்த முறை

இந்த முறை

இந்த முறை செலிபிரிட்டிகள் அல்லாமல் பொது மக்களை நிகழ்ச்சியில் பங்கு பெற அழைப்பு விடுத்து இருக்கிறது ஜீ தமிழ் டிவி. அவர்கள் கொடுத்து இருக்கும் எண்ணிலிருந்து வாட்சப்பில் தொடர்பு கொண்டு போட்டிக்கான விதி முறைகளை அறிந்துகொண்டு, அதற்கேற்ப அம்மக்கள் தங்களது குழந்தையுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.

தொகுப்பாளினி அர்ச்சனா

தொகுப்பாளினி அர்ச்சனா

ஜீ தமிழ் டிவியின் முக்கிய தொகுப்பாளினியாக அர்ச்சனா இருக்கிறார். இவர்தான் முதல் சீசனை தொகுத்து வழங்கினார்.இவருடன் இவரது பெண் குழந்தையும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது சுவாரஸ்யமான விஷயம். இவர் சன் தொலைக் காட்சியில் ஆரம்பித்து விஜய் டிவி வழியாக தற்போது ஜீ தமிழ் டிவியில் பெரும் புகழடைந்து இருக்கார்.

கடின போட்டி

கடின போட்டி

ஜீ தமிழ் டிவி மற்ற டிவி சேனல்களுக்கு டஃப் காம்படீஷன் என்று சொல்வார்களே அந்த கடின போட்டியைக் கொடுத்து முன்னேறி வருகிறது. சொல்வதெல்லாம் உண்மை, டான்ஸ் ஜோடி டான்ஸ்,சரிகமப, குட்டீஸ் காமெடி நிகழ்ச்சி என்று மற்ற சேனல்களுக்கு போட்டியாக இருக்கும் ஜீ தமிழ் டிவி, சீரியல்களிலும் செம்பருத்தி, கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன், சத்யா என்று பல சீரியல்களை ஒளிபரப்பி நல்ல போட்டி கொடுத்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+