Arjun: அஜித் படத்தோட முடிச்சுகிறேன்! இனி அப்படி நடிக்கவே மாட்டேன்! அர்ஜுன் எடுத்த முடிவு! பாராட்டும் ரசிகர்கள்
சென்னை: சினிமாவில் ஹீரோவின் கேரக்டரை பார்த்து அதே போல நாமும் மாறனும் என்கிற ஆசை பலருக்கு உண்டு. அதேபோல அர்ஜுன் போலீஸ் ஆகவும் மாஸான அதிகாரியாகவும் நடித்து பார்த்திருப்போம். அதேபோல ஆகவேண்டும் என்று பலர் ஆசைப்பட்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். இந்த நிலையில் அர்ஜுன் இனி நான் சினிமாவில் வில்லனாக நடிக்க மாட்டேன் என்று முடிவு எடுத்திருக்கிறார். அது குறித்து அவர் பேசிய பேட்டி தான் இப்போது பலருடைய பாராட்டை பெற்று வருகிறது.
ஆக்சன் கிங் அர்ஜுனுக்கு 90ஸ் காலகட்டத்தில் இருந்து இப்ப வரைக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதிலும் இவர் அதிகமாக சண்டை காட்சிகளில் தத்ரூபமாகவே சண்டை போட்டு மிரள விடுவார். இவருடைய ஃபைட் காட்சி பார்ப்பதற்காக பலர் கண் இமைக்காமல் பார்த்த காலமும் உண்டு. அது போல இவருடைய படங்களில் நாட்டுப்பற்று அதிகமாக இருக்கும். ஜெய்ஹிந்த் படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக வந்து அனைவருடைய மனதையும் ஆக்கிரமித்தவர் தான்.
இப்ப கூட ஒவ்வொரு சுதந்திர தின விழாவிலும், குடியரசு தின விழாவிலும் அந்த பட பாடல்கள் தான் வைரலாகும். அந்தப் பாடலில் நெஞ்சை நிமிர்த்தி கொண்டு அர்ஜுன் நிற்கும் காட்சிகள் பார்க்கும்போதே ஒருவித கம்பீரமான உணர்வு ஏற்படும். ஆனால் சமீப காலமாக அவர் சில திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார். அஜித் நடித்த மங்காத்தா படத்தில் வில்லனாக நடிக்க தொடங்கினார். அதற்குப் பிறகு விடாமுயற்சி, லியோ படத்தில் மெயின் வில்லனாகவும் நடித்திருப்பார்.

அர்ஜுன் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என்று பல முகத்தோடு இருந்தாலும் இவருடைய வில்லன் கேரக்டர் பெரிய அளவில் ரசிகர்களுக்கு திருப்தி கொடுக்கவில்லை. இவரை மாஸ் ஹீரோவாகவும் முன்னோடி என்றும் பார்த்த நிலையில் இப்படி மாறிட்டாரே என்பது பலருக்கு வருத்தமாகவும் இருந்து வருகிறது. இது குறித்து அர்ஜுனிடமே பலர் பேசி இருக்கிறார்கள்.
இது பற்றி சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் பேசும்போது, அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் தான் நான் வில்லனாக நடித்த கடைசி படம். அதற்குப் பிறகு நான் வில்லனா நடிக்க மாட்டேன். ஏன்னா அது என்னுடைய ரசிகர்களுக்கு பிடிக்கல. என்னை வில்லனாக பார்க்க முடியலனு சொல்லுறாங்க. உங்களை பாசிட்டிவ்வாவே பார்த்துட்டு ஒரு வில்லனா பாக்குறது பிடிக்கலைன்னு சொல்லுறாங்க.
நான் வில்லனாக நடிச்சதுக்கெல்லாம் எனக்கு விருது கிடைச்சிருக்கு. ஆனாலும் அது என் ரசிகர்களுக்கு பிடிக்கல என்பதால் இனி நான் வில்லனா நடிக்கிறது இல்லை. எத்தனையோ முன்னணி நடிகர்கள் வில்லனாக நடித்திருக்கிறார்கள். ஆனால் அர்ஜுன் நடித்ததை தான் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஏற்கனவே ஒரு பேட்டியில் அர்ஜுன் பேசும்போது, என்னுடைய படத்தை பார்த்து சிலர் போலீஸ் அதிகாரியாகவும் ராணுவத்தில் ஆபிஸர் ஆகவும் மாறியதா சொல்லி இருக்கிறார். ஒருமுறை அர்ஜுன் காரில் போய்க்கொண்டிருக்கும் போது ஒரு அவசர போன் வந்திருக்கிறது. போனை எடுத்து பேசிக் கொண்டே போகும்போது அங்கு டிராபிக் போலீஸ் நின்று இருக்கிறார்கள். காரை நிறுத்தியதும் இவரும் கார் கண்ணாடியை இறக்கி இருக்கிறார்.
அர்ஜுனை பார்த்ததும் அங்கிருந்த போலீஸ்காரர் சார் நீங்களா நீ என்று அதிர்ச்சியடைந்தாராம். பிறகு நீங்க போங்க சார் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அர்ஜுனுக்கு தான் ஒரு மாதிரி இருந்துச்சாம். நாம போன் பேசி வண்டி ஓட்டுவது தப்பு தானே அதனால பைன் போட்டுக்கோங்க என்று சொன்னாராம், அப்போது அந்த போலீஸ்காரன் சார் நான் உங்களை பார்த்து தான் போலீஸ் அதிகாரி ஆகணும்னு நினைச்சு எக்ஸாம் எழுதி பாஸ் ஆகி இந்த வேலைக்கு வந்தேன்.
நீங்க எங்களோட முன்மாதிரி சார். அதனால நான் பைன் போடல இனி அப்படி மட்டும் நடந்து கொள்ளாதீங்க என்று சொன்னாராம். இது எனக்கு ரொம்பவும் வருத்தமாவும், சந்தோஷமாகவும் இருந்தது என்று அர்ஜுன் பேசி இருந்தாரு. அதுபோல இவரை ரோல் மாடலாக நினைச்சவங்களுக்கு இவருடைய நெகட்டிவ் கேரக்டர் அதிருப்தியை கொடுத்து இருக்கிறது என்பது உண்மைதான்.
-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications