அவமானப்பட்டு வெளியே வந்த அர்னவ்.. ஆனால் பிக் பாஸால் அவருக்கு இத்தனை லட்சம் கிடைச்சிருக்கா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் இருந்து இரண்டாவது வாரத்தில் அர்னவ் நேற்று வெளியேற்றப்பட்டார். அவருடைய ஒருநாள் சம்பள விபரம் மற்றும் அவர் இரண்டு வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்ததற்கு பெற்ற சம்பளம் விபரமும் வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அர்னவ் இதற்கு முன்பே சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். அதிலும் சக்தி, பிரியசகி, செல்லம்மா போன்ற சீரியலில் இவர்கள் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவருடைய மனைவி திவ்யா ஸ்ரீதரோடு ஏற்பட்ட குடும்ப பிரச்சனையும் பெரிய அளவில் இவருக்கு பிரபலத்தை கொடுத்து விட்டது.

ஐந்து வருடங்களாக அர்னவ் காதலித்து திவ்யா ஸ்ரீதரை திருமணம் செய்திருந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் பிரச்சனைக்கு காரணம் அன்ஷிதா தான் என்று திவ்யா பல இடங்களில் கூறியிருந்தார். அதே அன்ஷிதாவோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்னவ் கலந்து கொண்டது பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது.
இவர்கள் இருவரும் ஹனிமூனுக்கு பிக்பாஸுக்குள் போகிறார்களா என்று கூட பலரும் கமெண்ட் செய்து வந்தனர். இப்படியான நிலையில் இரண்டு வாரத்தில் அர்னவ் நேற்று வெளியேற்றப்பட்டு இருக்கிறார். கடந்த வாரத்தில் அர்னவ் விளையாட்டு அதிக அளவில் சர்ச்சைகளை சந்தித்தது. அதன் காரணமாகவே அவர் குறைவான வாக்குகள் பெற்று வெளியேற்றப்பட்டார்.

வெளியே போகும்போது கூட தன்னுடைய வன்மத்தை காட்டிவிட்டார். இதனால் அர்னவ் பேசிக் கொண்டிருக்கும்போது அவருடைய கையில் இருக்கும் மைக்கை வாங்கிக்கொண்டு விஜய் சேதுபதி அவருக்கு கை கொடுத்து வெளியேற்றும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தார்.
இதுவரைக்கும் எந்த பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளர்கள் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்து மேடையில் சக போட்டியாளர்களிடம் பேசும்போது இவ்வளவு வன்மத்தை காட்டியது கிடையாது. ஆனால் நேற்று அர்னவ் செய்தது பெரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

அதே நேரத்தில் அர்னவ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒரு நாளைக்கு 20 முதல் 25 ஆயிரம் வரைக்கும் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. ஒரு வாரத்திற்கு அவருக்கு 1.4 முதல் 1.75 ஆயிரம் சம்பளம் கிடைத்ததாகவும் அவர் இரண்டு வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது மொத்தம் 2.8 முதல் 3.5 லட்சம் வரைக்கும் அவருக்கு சம்பளம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
தன்னுடைய குடும்ப பிரச்சனை மற்றும் தன்னை பற்றிய ஆடியோக்கள் அதிகமாக வெளியாகுனதை தொடர்ந்து அர்னவ் மீது அதிகமான நெகட்டிவ் ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில் அதை சரி செய்வதற்காக பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற அர்னவ் அந்த நிகழ்ச்சியில் மேலும் நெகட்டிவ் பெற்று வந்திருக்கிறார்.

நிகழ்ச்சியில் இருக்கும் போது கூட பெரிய அளவில் அவர் மீது ரசிகர்களுக்கு கோபம் கிடையாது. ஆனால் நேற்று நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் மேடையில் சக ஆண் போட்டியாளர்களை பார்த்து பேசியது தான் அவருக்கு மைனஸ் ஆக அமைந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications