அமீர் இந்த மாதிரி ஷோவில் செய்வான் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை..மனதுருகிய அஷ்ரப்
சென்னை: அமீர் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்த அஷ்ரப் தற்போது அவரை பற்றி மனதுருகி பேசியுள்ளார்.
Recommended Video
என்னதான் தான் அவருக்கு உதவி செய்து இருந்தாலும் ஷோவில் அமீர் செய்தது வேதனையை கூட்டுவதாக உள்ளது என்று கூறியுள்ளார்.
ஆரம்பம் முதல் இப்போது வரைக்கும் அமீருக்கு பல உதவிகளை செய்து கொண்டிருக்கும் அஷ்ரப்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

அந்த மனது தான் கடவுள்
இப்போது இருக்கும் சூழ்நிலையில் பெற்றவர்களையே பார்த்துக் கொள்ளாத பிள்ளைகள் அதிகமாக இருந்து வருகின்றனர். தங்களுக்கு கஷ்டப்படும்போது ஆறுதலாக இருந்து வளர்த்தெடுத்த பெற்றோர்களையும் உற்றார், உறவினர்களையும் உதறித் தள்ளிவிட்டு தங்களுடைய சுய நலம் தான் முக்கியம் என்று பல பேர் வாழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் யார் என்றே தெரியாத ஒருவருக்காக தங்களுடைய குடும்பத்தையும் உறவினர்களையும் கூட பிரிந்திருக்கும் அஷ்ரப் குடும்பத்தினருக்கு தற்போது சமூக வலைத்தளத்தில் ஆதரவு அதிகமாக குவிந்து வருகிறது.

எதிர்பார்க்காத செயல்
தான் பார்த்த முதல் நாளில் தனக்குள் ஏற்பட்ட பாசத்தின் காரணமாக அமீருக்காக செய்த செயல்கள் ஒவ்வொன்றையும் அஷ்ரப் உருக்கத்தோடு கூறியிருக்கிறார். அவருக்காக பல இடங்களில் டான்ஸ் ஸ்கூல்களை வைத்துக் கொடுத்து அவரை எப்படியாவத முன்னேற்றி விட வேண்டும் என்று எவ்வளவோ போராடி இருக்கிறார். ஆனால் ஆரம்பத்தில் இருந்து சுமார் மூன்று இடங்களில் ஸ்கூல் வைத்துக் கொடுத்த பிறகும் எல்லாமே ஒவ்வொரு பிரச்சனைகளால் அது மூடப்பட்டுள்ளது. அப்போதுகூட அஷ்ரப்பை விட அமீர் தான் மனதளவில் ரொம்பவே கஷ்டப்பட்டு உள்ளாராம்.

நன்றி மறக்காத அமீர்
பொதுவாக அமீர் விவரம் தெரியாத வயதில் தந்தையை இழந்து, தன்னுடைய இளமைப்பருவத்தில் தாயையும் இழந்து, தன்னுடைய சுய உழைப்பினாலும் முயற்சியினாலும் கல்லூரி படிப்பை முடித்திருந்த நிலையில் ஒரு இக்கட்டான சூழ்நிலையில்தான் அஷ்ரப் குடும்பத்தை சந்தித்துள்ளார். அவரை சந்தித்த பிறகுதான் அவர் வாழ்க்கையில் இப்படி ஒரு மாற்றம் நடைபெறும் என்பது அப்போது அவருக்குத் தெரிந்திருக்காது. ஆனால் அவரை சந்தித்த பிறகு அமீர் வாழ்க்கையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. தனக்கு ஏணியாக இருந்த அஷ்ரப் குடும்பத்தை அமீர் மறந்து விடாமல் அவருடைய குடும்பத்தினருக்கு அவ்வப்போது நன்றி கூறி வருகிறார்.

அஷ்ரபின் மனவருத்தம்
எந்த ஒரு சூழ்நிலையிலும் யாரிடமும் தன்னுடைய சுய வாழ்க்கையைப் பற்றி அதிகமாக தெரியப்படுத்த அமீர். தன்னுடைய குடும்பத்தை பற்றி அஷ்ரப் இடம் மட்டும்தான் முழுமையாக கூறியிருந்தாராம். இந்த நிலையில் அதற்கு பிறகு இவரை ஒரு மாஸ்டராக தான் பலருக்கும் தெரியுமே தவிர இவருடைய சொந்த கதை யாருக்கும் தெரியாது. ஆனால் பல லட்சக்கணக்கானோர் பார்க்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இப்படி ஒரு ஷோவில் தன்னுடைய கண்ணீர் கதையை சொல்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதில் குறிப்பாக அஷ்ரப் குடும்பத்தினர் யாரும் எதிர்பார்க்கவில்லை. அதனால் அமீரின் இந்த ஒரு செயல் மனதை உருக வைத்துள்ளதாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். யாரும் தன்னை பாவமாக பார்க்ககூடாது என்று நினைத்துக் கொண்டிருக்கும் இவர் இப்படி செய்தது தான் மன உருக்கமாக இருக்கிறது என்று அஷ்ரப் கூறியுள்ளார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications