ஆணழகன் அஸ்வின் மீண்டும் சீரியலிலா?? சந்தோசத்தில் பெண் ரசிகைகள்?? தொடங்கிய இரண்டாம் பாகம்
சென்னை: சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றபின் மீண்டும் அஸ்வின் சின்னத்திரையில் நடிக்க உள்ளார் என்ற செய்திகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஏற்கனவே அவர் அறிமுகமான இரட்டைவால் குருவி சீரியலின் இரண்டாம் பாகத்தில் இவர் நடிக்க உள்ளார் என்ற செய்தி சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

வம்பில் சிக்க வைத்த பேச்சு
சின்னத்திரையில் இருந்து பல ஷார்ட்பிலிம் களில் நடித்து தற்போது வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்திருக்கும் அஸ்வினுக்கு அதிகமான பெண் ரசிகர்கள் இருக்கின்றனர். இதனால் இவர் மீது பல ரசிகர்கள் காண்டில் தான் இருந்து வந்தனர். இந்த நிலையில் இவர் ஒரு திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழாவில் அடக்கமாக பேசிக்கிறேன் என்று பேசிய வார்த்தைகளை வேற லெவல் வைரலாகி விட்டனர். தற்போது அஸ்வின் பேசிய பேச்சு பிக்பாஸ் வீடு வரைக்கும் எதிரொலித்து வருகிறது

மீண்டும் சின்னத்திரையில். ..
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைந்து தனக்கான ரசிகர்களை அதிகமாக சம்பாதித்த அஸ்வின் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவருடைய க்யூட்டான போட்டோஸ்கள் பல நேரங்களில் வைரலாகி வரும், அதுமட்டுமலலாமல் பெண்களின் வேர்ல்டு கிரஸ் என்று சொல்லும் அளவிற்கு அஸ்வின் பிரபலம் அடைந்து விட்டார். பெண் ரசிகைகளை மட்டுமல்லாமல் இவருடைய க்யூட்டான சிரிப்பால் பல ஆண் ரசிகர்களையும் கவர்ந்து இழுத்து விட்டார். இந்த நிலையில் இவர் ஆரம்பத்தில் நடித்த ரெட்டைவால் குருவி சீரியலில் மீண்டும் நடிக்க போகிறார் என்ற செய்தி பரவி வருகிறது.

ஜீ தமிழ் சீரியல்
தனக்கு நடந்த கசப்பான அனுபவங்கள் எல்லாம் தன்னுடைய வாழ்க்கையின் அனுபவங்கள் என்று இவர் எடுத்துக் கொண்டால் வாழ்க்கையில் முன்னேற்றங்களை அடைந்து கொள்ளலாம் என்று பலர் இவருக்கு வாழ அறிவுரை கூறிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது இவர் ஜீ தமிழ் சீரியலில் நடிக்க போவதாக சில போட்டோஸ்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது, அதில் ஏற்கனவே இவர் நடித்து வெளியான சீரியலான இரட்டைவால் குருவி எனும் சீரியல் 99 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பாகி இருந்தது. இந்தநிலையில் இந்த சீரியலில் இரண்டாம் பாகம் எடுக்கப்படுவதாக செய்திகள் பரவி வருகிறது.

செம கூட்டணி தான்
இரட்டைவால் குருவியின் இரண்டாம் பாகத்தில் அஸ்வின் நடிப்பதாகவும் அவருக்கு ஜோடியாக நடிகை ஆயிஷா நடிப்பதாகவும் செய்திகள் பரவி வருகிறது. இந்த செய்தியை கேட்டதும் ரசிகைகள் தினமும் இவரை டிவியில் பார்க்கலாம் என்று ஆர்வத்தோடு கூறிவருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த சீரியல் எப்போது ஒளிபரப்பப்படும் என்று ஆர்வத்தோடு கேட்டு வருகின்றனர். ஆனால் இதைப்பற்றி அஸ்வின் தரப்பிலிருந்து இன்னும் எதுவும் சொல்ல படாததால் இது உண்மைதானா?? என்று ரசிகர்களின் மத்தியில் கேள்விகள் எழுந்து வருகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications