தன் கண்ணையே நம்ப முடியாமல்... ரசிகர்களின் செய்கையால் உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்
சென்னை: அஸ்வின் நடித்த என்ன சொல்ல போகிறாய் திரைப்படம் இன்று வெளியான நிலையில் தியேட்டரில் அஸ்வின் உணர்ச்சிவசப்பட்டு உள்ளார்.
Recommended Video
எவ்வளவோ போராட்டங்களுக்கு பிறகு வெளிவந்த தன்னுடைய படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு தன்னை மெய்சிலிர்க்க வைத்து இருப்பதாக அஸ்வின் கூறியுள்ளார்.

ரசிகர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி
சின்னத்திரையின் மூலமாக பிரபலமான அஸ்வின் தற்போது வெள்ளித் திரையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். தன்னுடைய முதல் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பையும், வெற்றியையும் அடையும் என்று எதிர்பார்த்திருந்த அஸ்வினுக்கு தற்போது முதற்கட்ட வெற்றி கிடைத்திருக்கிறது என்று இன்று அவருடைய ரசிகர்கள் உணர்த்தி இருக்கிறார்களாம். இன்று அவருடைய முதல் திரைப்பட வெளியீட்டு தினத்தில் தியேட்டருக்கு சென்று நேரடியாக தன்னுடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி
எவ்வளவோ போராட்டங்களுக்கு பிறகு தற்போது என்ன சொல்ல போகிறாய் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இதற்காக பல வருடங்களாக காத்திருந்த இவர் இன்று தன்னுடைய ரசிகர்களின் செய்கையால் மெய் சிலிர்த்து போய் உணர்ச்சிவசப்பட்டு உள்ளார். அஸ்வின், என்ன சொல்ல போகிறாய் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய வார்த்தைகள் ரசிகர்களை மட்டுமல்லாமல் இவருக்கு கதை சொன்ன இயக்குனர்களுக்கும் பெருத்த கோபத்தை ஏற்படுத்திய நிலையில், இவர் மீது நெட்டிசன்கள் வகைவகையாக கலாய்த்து தள்ளிக் கொண்டிருந்தனர்.

ரசிகர்களின் எதிர்பாராத செயல்
இவருடைய செய்கையால் படத்தின் வெளியீட்டு நாள் தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. இந்த நிலையில் தான் செய்தது தவறு என்று சமூகவலைத்தளத்தில் எத்தனையோ முறை அன்று நடந்த நிகழ்வுக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார். தற்போது இவருடைய படம் வெளியாகப் போகிறது என்று தெரிந்ததும் நெட்டிசன்கள் வழக்கம்போல கலாய்த்து கொண்டிருந்தாலும், ரசிகர்கள் இவருக்கு ஆதரவு கொடுத்து இன்று கொட்டும் பனியிலும் காலைவேளையில் ரசிகர்கள் பலர் தியேட்டரில் குவிந்து உள்ளார்களாம். அதுவும் பெண் ரசிகர்கள் அதிகமாக வந்துள்ளார்கள்.

மனம் குளிர்ந்து போன அஸ்வின்
சமூக வலைத்தளத்தில் இவருக்கு வரும் நெகட்டிவ் கமெண்டுகளை பார்த்து இவரும் மனம் தளர்ந்து போய் தான் இருந்துள்ளார் போல, அதனால்தான் இன்று தியேட்டரில் இவருடைய ரசிகர்கள் இவருக்கு கொடுத்த ஆதரவை பார்த்ததும் குளிர்ந்து போய் கண் கலங்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் அனைவருக்கும் கைகூப்பி நன்றிகளையும் தெரிவித்துள்ளார். இவருடைய திடீர் வருகையால் இன்ப அதிர்ச்சியான ரசிகர்கள் பலர் கூக்குரலிட்டு இவருக்கு மேலும் ஆரவாரம் கொடுத்துள்ளனர். தனது இதயத்தில் கை வைத்தபடியே ரசிகர்களுக்கு மனம் கவர்ந்த நன்றிகளையும் கூறியிருக்கிறார்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications